அவந்தி
என்னும் நாட்டில் பெரிய உஞ்சை நகரைத் தலைநகராக விரும்பி ஆளும் அரசன் செயசேனன்
என்பான், அவனுடைய பட்டத்தரசி செயஸ்திரீ என்பாள். பொன்போலும் பொன்னிறமுடைய
மகள் பல்வகைச் சிறப்புக் குரியவள் மேனகி என்பவளாவள். (27)
129. |
பாடலீ
புரத்திருந்த பண்புமா வியாளனு |
|
நாடிவந் திருந்தன னன்குவுஞ்சை நகர்தனில் |
|
சேடிகண்டு மேனகிக்குச் செப்பவந்து கண்டவள் |
|
நாடியவள் போயின ணன்னிதிப் புரிசையே. |
பாடலிபுரத்திலிருந்த
பண்புமிக்க மாவியாளனும் அவளை விரும்பி நாடி வந்து அவ்வுஞ்சையில் தங்கியிருந்தான்.
அதை அறிந்த சேடி மேனகிக்கு அறிவிப்ப, அவளும் அவனை வந்து பார்த்துவிட்டு விரும்பாதவளாய்த்
தன் கன்னி மாடத்து ஏறிப் போயினாள். (28)
130. |
அந்நகர்விட்
டேகின னானமா வியாளனும் |
|
சென்றுதன் றமையனைச் சேவடி பணிந்தபின் |
|
நன்றுடன் வணங்கின னாகநற் குமரனை |
|
இன்றிலன்றான் யாரென வென்றம்பியவ னென்னலும். |
மாவியாளனும்
அந் நகரைவிட்டுப் புறப்பட்டுச் சென்று, தன் தமையன் வியாளனுடைய பாதங்களை வணங்கிப்
பின் நாககுமாரன் முன்னின்று வணங்கினான். குமாரனும் இவன் யாவன் எனக் கேட்க வியாளன்
என் தம்பி எனக் கூறலும், உடனே மாவியாளன் குமாரனை வணங்கி, ஐய
131. |
மின்னினிடை
நேரிழை மேனகி யெனவொரு |
|
மன்மதனை யிச்சியாள் மாவியாளன் சொல்லலும் |
|
அந்நகரிற் செல்லலு மரிவையர் தரித்திட |
|
மன்னனம்பு வேள்வியான் மன்னிநற் புணர்ந்தனன். |
‘மின்னற்
கொடிபோலும் மெல்லிடையாள் உச்சயினி நகரத்து அரசன் ஜயசேனன் மகள் மேனகி என ஓர்
கன்னிகை இருக்கின்றாள். கட்டழகி, அவள் மன்மதனையும் விரும்பாதவள்‘ என மகாவியாளன்
கூறலும், நன்றென நாககுமாரன் அந் நகரத்திற்குச் செல்லக் கேள்வியுற்று ஜயசேனனும் மட்டற்ற
மகிழ்ச்சியோடும் எதிர் கொண்டு அழைத்து, இனிய முகமன் கூறி, வேள்வி விதிப்படி நன்
முகூர்த்தத்திலே அரிவையர் ஏந்திய பொற்கல நீரால் தாரை வார்த்துத் திருமணம் செய்து
கொடுத்தான். குமரனும் அவளோடு கூடி இன்புறலானான். (30)
|