மகன்
தேவகுமாரனுக்கு முடி சூட்டி நாககுமாரன் துறவு பூணவே
அவன் தேவி இலக்கணையும் துறவு மேற்கொள்ளல்
162. |
அரசனினி
தியல்பினி னமர்ந்திருக்கு மளவிற் |
|
பரவுமுகின் மாய்ந்திடப் பார்த்திபன் விரத்தி |
|
விரவிமிகு குமரன்மிசை வீறுமுடி சூட்டி |
|
அரியதவந் தாங்கவவ னன்புட னெழுந்தான். |
அரசர்க்கரசனாகிய நாககுமாரன் மகாமண்டலேசுவரனுக்குரிய இலக்கணம் பொருந்த வீற்றிருக்கின்ற
காலத்தே ஆகாயத்தே பரவிய முகிற்கணங்கள் விரைவில் தோன்றி மாய்தலைக் கண்டு, வைராக்கிய
பாவனையுற்று, இலக்கணை புத்திரனாகிய தேவ குமாரனுக்கு முடிசூட்டி, வீறு பெற ஆட்சிபுரியச்
செய்து, செயற்கரிய தவம் புரிய உடன்பட்டு எழுந்தான்.
(18)
163. |
அமலமதி
கேவலியின் அடியிணை வணங்கி |
|
விமலனுருக் கொண்டனனல் வேந்தர்பலர் கூட |
|
கமலமல ராணிகர்நற் காட்சியிலக் கணையும் |
|
துமிலமனைப் பதுமையெனுந் துறவரடி பணிந்தாள். |
வியாளன் முதலிய கோடி படருடனும் தன் ஆயிரம் படருடனும் நாககுமாரன் சென்று அமலமதி என்னும்
கேவலஞானியை வணங்கித் துறவுபூண்டு இயற்கையுருவாகிய நிருவாண உருக்கொண்டு நோற்கலானான்.
செந்தாமரையாளை ஒத்த நற்காட்சியுடைய இலக்கணை மாதேவி முதலாயினோரும் பதுமஸ்ரீ என்னும்
ஆரியாங்கனையை வணங்கித் துறவு மேற்கொண்டார்கள். (19)
நாககுமாரனும்
அவன் தோழர் முதலியோரும் சித்தியும்
முத்தியும் பெறுதல் வேறு
164. |
நறுங்குழ
லிலக்க ணையு நங்கை மார்தங் கூட |
|
உறுதவந் தரித்துக் கொண்டு வுவந்தவர் செல்லு நாளுள் |
|
மறுவில்சீர் முனிவ னாய னாக குமாரன் றானும் |
|
இறுகுவெவ் வினைகள் வென்று யினிச்சித்தி சேர்ந்த தன்றே. |
நறுமணமிக்க குழலினாளாகிய இலக்கணையும் ஏனைய மாதர்களுடன் மிக்க கடுந்தவத்தை உவந்து
மேற்கொண்டு செல்லுகின்ற நாளில் குற்றமற்ற சிறப்புடைய நாககுமார முனிவனும் தன்னைப்
பற்றிய கொடிய காதிவினைகளை வென்று சித்திபதஞ் சேர்ந்தான்.
(20)
|