பக்கம் எண் :

Yasodara Kavium

- 317 -

என்னும் - --, துறவினுக்கு அரசன் - மாதவத் தலைவர், இந்நாள் - இன்று, அரும் கடி கமழும் - அருமையான மணம் வீசும், சோலை அதனுள் - இந்நகர்ப்புறம்பேயுள்ள சோலையில், வந்து - சங்கமுடன் (குழாத்துடன்) வந்து, இனிது இருந்தான் - மகிழ்வோடு தங்கியிருந்தார்.  (எ-று.)

சுதத்தமுனிவர் சங்கமுடன் இந்நகரின்கண் எழுந்தருளியுள்ளாரென்று அபயருசி கூறினானென்க.

அருங்கல மும்மை - இரத்தினத் திரயம்.  அதிசயம் மனப்பர்யய ஞானம் முதலிய  அதிசயம்;  (மேரு. 1100), நோன்மை - தவம்.  குழு - சங்கம், துறவிகளின் கூட்டம். ‘பெறற்கரும்குணம்‘ ஏனையோரால் பெறுதற்கரிய குணம்: எண்பத்துநான்குலக்ஷம் குணங்களில் குறையாத எனினுமாம்.  ‘வந்து மாநகர்ப் புறத்தோர் வளமலர்ப் பொழிலுள்விட்டு, (யசோ.24) அனசனத்தவம் ஏற்றதும், இஞைர் சரியைக்குச் சென்றதும், சண்டகருமன் அவர்களைப் பிடித்துச் சென்றதும் ஒருநாளிலேயே நிகழ்ந்தவனவாதலின், ‘இந்நாள் ''  என்றார்.  நின்னாடு எனவும் பாடம்.            (90)

310.  அனசன மமர்ந்த சிந்தை யருந்தவ னிசோ மதிக்குத
  தனயர்க டம்மை நோக்கித் தரியலீர் சரியை போமின்
  எனவவ ரிறைஞ்சி மெல்ல விந்நக ரத்து வந்தார்
  அனையவ ராக வெம்மை யறிகமற் றரச வென்றான்.

(இ-ள்.) அனசனம் அமர்ந்த சிந்தை அருந்தவன் - அனசனத் தவத்தில் அமர்ந்த தூய சிந்தையின ராகியசுதத்தமுனிவர், இசோமதிக்குத் தனயர்கள் தம்மை நோக்கி - யசோமதியரசன்மக்களாகிய அபயருசி அபயமதி என்னும் க்ஷுல்லக விரதிகளை நோக்கி (நீவிர்), தரியலீர் - அனசனதவத்தை மேற் கொள்கலீர்; (ஆதலின்), சரியை போமின் என - சரியைக்குச் செல்லுங்கள் என்று கட்டளையிட, அவர் - அவ்விருவரும், இறைஞ்சி- (தம் குருவை) வணங்கி, இந்நகரத்து - இந்நகரத்தினுள், மெல்ல வந்தார் - (பிறஜீவன்கள் வருந்தாவண்ணம் நோக்கி)  மெல்லென நடந்து வந்தனர்;  அரச - -- ! , எம்மை - எங்களை, அனையவராக - அவ்விருவருமே யாக, அறிக - அறிவாயாக, என்றான் - என்று அபயருசி புகன்றான். (எ-று.)