கட்டளைக்
கலித்துறை
மட்டிக்குட்
டங்கும் கணுநிகர் கஞ்ச மலரனைய
தட்டிக்குட்
டங்கை முருகனத் தாகச்சிச் சங்கரனே
பெட்டிக்குட்
டம்பணம் இட்டுவப் பார்குணம் பெட்டுவினை
கட்டிக்குட்
டன் றுயர் எல்லாம் அகன்றிடக் கண்டருளே. (15)
|
(இ-ள்)
மட்டு இக்கு உள் தங்கும்-தேன்போலும் சாற்றையுடைய கரும்பில் தங்கும், கணு நிகர் -
கணுவை ஒத்த, கஞ்ச மலரனை - தாமரை மலரில் தங்கிய பிரமனை, அதட்டி குட்டு - அதட்டி
அவன் தலையில் குட்டிய, அங்கை முருகன் அத்தா - அழகிய கையையுடைய முருகனுடைய தந்தையே,
கச்சிச் சங்கரனே - கச்சியில் எழுந்தருளிய சங்கரன் என்னும் திருப்பெயரை யுடையவனே,
பெட்டிக்குள் - பெட்டியிலே, தம் பணம் இட்டு - தம் பணத்தை இட்டு, உவப்பார் குணம்
பெட்டு - மகிழ்வாருடைய குணத்தை விரும்பி, வினை கட்டு இக் குட்டன் - (உன்னை அடைதற்குரிய)
நல்வினையை விட்டிருக்கின்ற இந்தச் சிறுபிள்ளையினது, துயர் எல்லாம் - துக்கம் முழுமையும்,
அகன்றிடக் கண்டருள் - நீங்கிடச் செய்தருள்வாய்.
பெட்டிக்குட்டம் பணம் இட்டு - பெட்டிக்குள்
தம் பணம் இட்டு. பெட்டி - பெட்டியிலே, பணம் குட்டம் இட்டு - பணத்தின் கூட்டத்தை
இட்டு; குட்டம் பெட்டி பணம் இட்டு - பெரிய பெட்டியில் பணம் இட்டு (குட்டம் - ஆழம்)
ஈண்டுப் பெருமையை உணர்த்திற்று.
மட்டு - ஆலையிலிட்டு முறிக்கப்பெறும், இக்குள் - கரும்பினுள்.
மட்டு - சாதி அடை. மட்டு இக்கு ஈண்டு வினைத்தொகை.
தங்கும் கணு நிகர் (கை) வடிவு பற்றி கஞ்ச மலரனை -
பிரமனை.
கரும்பின் கணுவை ஒத்த பிரமன் என்பது: சிவப்பிரகாச
சுவாமிகள் மறைந்தபோது வேலையசுவாமிகள் கூறிய செய்யுளில், கரும்பு சிவப்பிரகாசர்;
கணு: வேலையசுவாமிகள்; பொகுட்டு: கருணைப் பிரகாசர் என்று கூறியுள்ளார். அங்ஙனமே கணுவை
நிகர்த்தவன் பிரமன். வினைகட்டு: கட்டு, வினைத்தொகை. |