| தொடக்கம் |
முதல் சருக்கம்
|
|
|
|
|
| | தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்
| | |
| | 1. | செந்தளிர்ப் பிண்டியின்கீழ்ச் செழுமணி மண்டபத்துஉள் இந்திரன் இனிதின் ஏத்தும் ஏந்துஅரிஆசனத்தின் அந்தமாய் அமர்ந்த கோவின் அருள்புரிதீர்த்த காலம் கொந்தலராசன் நாக குமரன்நல் கதை விரிப்பாம். |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 2. | திங்கள் முந்நான்கு யோகம் தீவினை அரிய நிற்பர அங்கபூ ஆதி நூலுள் அரிப்புஅறத் தெளிந்த நெஞ்சில் தங்கிய கருணை ஆர்ந்த தவமுனி அவர்கள் சொன்ன பொங்குநல் கவிக்கடல்தான் புகுந்துநீர்த்து எழுந்தது அன்றே. |
|
உரை
|
| |
|
|
|
|
| | அவைஅடக்கம்
| | |
| | 3. | புகைக்கொடி உள்உண்டு என்றே பொற்புநல் ஒளிவிளக்கை இகழ்ச்சியின் நீப்பார் இல்லை ஈண்டுநல் பொருள் உணர்ந்தோர் அகத்துஇனி மதியில் கொள்வார் அரியரோ எனது சொல்லைச் செகத்தவர் உணர்ந்து கேட்கச் செப்புதல் பாலது ஆமே. |
|
உரை
|
| |
|
|
|
|
| | கேட்போர் பெறு பயன்
| | |
| | 4. | வெவ்வினை வெகுண்டு வாரா விக்கிநன்கு அடைக்கும் வாய்கள் செவ்விதில் புணர்ந்து மிக்க செல்வத்தை ஆக்கும் முன்னம் கவ்விய கருமம் எல்லாம் கணத்தினில் உதிர்ப்பை ஆக்கும் இவ்வகைத் தெரிவுறுப்பார்க்கு இனிதுவைத்து உரைத்தும் அன்றே. |
|
உரை
|
| |
|
|
|
|
| | மகத நாட்டுச் சிறப்பு
| | |
| | 5. | நாவலந் தீப நூற்றை நண் ணுதொண்ணூறு கூறில் ஆவதன் ஒருகூறு ஆகும் அரியநல் பரத கண்டம் பாவலர் தகைமை மிக்கோர் பரம்பிய தரும பூமி மேவுமின் முகில்சூழ் சோலை மிக்கதுஓர் மகதநாடு. |
|
உரை
|
| |
|
|
|
|
| | இராசமாகிரிய நகரம்
| | |
| | 6. | திசைகள் எங்கெங்கும் செய்யாள் செறிந்துஇனிது உறையும் நாட்டுள் இசையுநல் பாரிசாத இனமலர்க் காவும் சூழ்ந்த அசைவிலா அமர லோகத்து அதுநிகரான மண்ணுள் இசைஉலா நகரம் மிக்க இராசமாகிரியம் ஆமே. |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 7. | கிடங்குஅரு இஞ்சி ஓங்கிக் கிளர்முகில் சூடிச் செம்பொன் கடங்கள்வைத்து இலங்கு மாடம் கதிர்மதி சூட்டினால்போல் படம்கிடந்த அல்குலார்கள் பாடலோடு ஆடலாலே இடம்கொண்ட இன்பம் உம்பர் இடத்தையும் மெச்சும் அன்றே. |
|
உரை
|
| |
|
|
|
|
| | சிரேணிக ராசனின் செங்கோல்ஆட்சி
| | |
| | 8. | பாரித்த தன்மை முன்னம் பாலித்தற்கு ஐம்மடங்காம் பூரித்த தார்கள் வேய்ந்த பொற்குடை எழுந்த மேகம் வாரித்து அசைந்து இளிக்கும் வண்கைஅம்பொன்திண் தோளான் சீரித்தது அலங்கல் மார்பன் சிரேணிக ராசன்ஆமே. |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 9. | ஆறில்ஒன்று இறைகொண்டு ஆளும் அரசன்மாதேவி அன்னப் பேறுடை நடைவேல் கண்ணாள் பெறற்குஅரும் கற்பினாள்பேர் வீறுடைச் சாலினீதா மிடைதவழ் கொங்கை கொண்டை நாறுடைத் தார்அணிந்த நகைமதி முகத்தினாளே. |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 10. | மற்றும் எண்ணாயிரம்பேர் மன்னனுக்கு இனிய மாதர் வெற்றிவேல் விழியினாரும் வேந்தனும் இனிய போகம் உற்றுஉடன் புணர்ந்து இன்பத்து உவகையுள் அழுந்தி அங்குச் செற்றவர்ச் செகுத்துச் செங்கோல் செலவிய காலத்து அன்றே. |
|
உரை
|
| |
|
|
|
|
| | வரவீரநாதரின் வருகையை வனபாலன் தெரிவித்தல்
| | |
| | 11. | இஞ்சிசூழ் புரத்து மேற்பால் இலங்கிய விபுலம் என்னும் மஞ்சிசூழ் மலையின் மீது வரவீரநாதர் வந்து இஞ்சிமூன்று இலங்கும் பூமி ஏழிறை இருக்கை வட்டம் அஞ்சிலம்பார்கள் ஆட அமரரும் சூழ்ந்த அன்றே. |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 12. | வனமிகு அதிசயங்கள் வனபாலன் கண்டுவந்து நனைமது மலர்கள் ஏந்தி நன்நகர் புகுந்துஇராசன் மனைஅது மதில்கடந்து மன்னனை வணங்கிச் செப்ப மனமிக மகிழ்ந்து இறைஞ்சி மாமுரசு அறைக என்றான். |
|
உரை
|
| |
|
|
|
|
| | மன்னன் தன் சுற்றம் சூழச் சென்று முனிவரை வணங்குதல்
| | |
| | 13. | இடிமுரசு ஆர்ப்பக் கேட்டும் இயம்பிய அத்தினத்தின் படுமத யானை தேர்மா வாள்நால் படையும் சூழக் கடிமலர் சாந்தும் ஏந்திக் காவலன் தேவியோடும் கொடிநிரை பொன் எயிற்குக் குழுவுடன் சென்ற அன்றே. |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 14. | பொன்எயில் குறுகிக் கைம்மாப் புரவலன் இழிந்துஉள்புக்கு நன்நிலத்து அதிசயங்கள் நரபதி தேவியர்க்குப் பன்உரை செய்து காட்டிப் பரமன்தன் கோயில் தன்னை இன்இயல் வலங்கொண்டு எய்தி ஈசனை இறைஞ்சினானே. |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 15. | நிலமுறப் பணிந்து எழுந்து நிகர்இலஞ் சினையின் முற்றிக் கலன்அணி செம்பொன் மார்பன் கால்பொரு கடலில் பொங்கி நலமுறு தோத்திரங்கள் நாதன்தன் வதனம் நோக்கிப் பலமனம் இன்றி ஒன்றிப் பலதுதி செப்பல் உற்றான். |
|
உரை
|
| |
|
|
|
|
| | வர்த்தமானரை மன்னன் துதித்துப் போற்றுதல்
| | | வேறு
| | 16. | பொறியொடு வல்வினைவென்ற புனிதன் நீயே பூநான்கு மலர்ப்பிண்டிப் போதன் நீயே புறவிதழ்சேர் மரைமலர்மேல் விரனால் விட்டுப் பொன்எயிலுள் மன்னிய புங்கவனும் நீயே அறவிபணி பணஅரங்கத்து அமர்ந்தாய் நீயே ஐங்கணைவில் மன்மதனை அகன்றாய் நீயே செறிபுகழ்சேர் சித்திநகர் தன்னை ஆளும் சிரீவர்த்த மானம்எனும் தீர்த்தன் நீயே. |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 17. | கஞ்சமலர் திருமார்பில் தரித்தாய் நீயே காலம்ஒரு மூன்றுஉணர்ந்த கடவுள் நீயே பஞ்சாத்தி தான்உரைத்த பரமன் நீயே பரமநிலை ஒன்றுஎனவே பணித்தாய் நீயே துஞ்சாநல் உலகுதொழும் தூயன் நீயே தொல்வினை எல்லாம்எரித்த துறவன் நீயே செஞ்சொல் பாவையை நாவில் சேர்த்தாய் நீயே சிரீவர்த்தமான் எனும் தீர்த்தன் நீயே. |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 18. | அறவன்நீ அமலன்நீ ஆதி நீயே ஆரியன்நீ சீரீயன்நீ அனந்தன் நீயே திரிலோக லோகமொடு தேயன் நீயே தேவாதி தேவன்எனும் தீர்த்தன் நீயே எரிமணிநல் பிறப்புடைய ஈசன் நீயே இருநான்கு குணம்உடைய இறைவன் நீயே திரிபுவனம் தொழுதுஇறைஞ்சும் செல்வன் நீயே சிரீவர்த்த மானம்எனும் தீர்த்தன் நீயே. |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 19. | முனிவர்தமக்கு இறையான மூர்த்தி நீயே மூவா முதல்வன்எனும் முத்தன் நீயே இனிமை ஆனந்தசுகத்து இருந்தாய் நீயே இயல்ஆறு பொருள்உரைத்த ஈசன் நீயே முனிவுமுதல் இல்லாத முனைவன் நீயே முக்குடையின் கீழ்அமர்ந்த முதல்வன் நீயே செனித்துஇறக்கும் மூப்பு இறப்பும் தீர்த்தாய் நீயே சிரீவர்த்த மானன்எனும் தீர்த்தன் நீயே. |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 20. | நவபத நன்னயம்ஆறு நவின்றாய் நீயே நன்முனிவர் மனத்துஇசைந்த நாதன் நீயே உவமைஇலா ஐம்பதமும் உரைத்தாய் நீயே உத்தமர்தம் இருதயத்துள் உகந்தாய் நீயே பவமயமாம் இருவினையைப் பகர்ந்தாய் நீயே பரம நிலைஅமர்ந்த பரமன் நீயே சிவமயமாய் நின்றதிகழ் தேசன் நீயே சிரீவர்த்தமானன்எனும் தீர்த்தன் நீயே. |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | | வேறு
| | 21. | துதிகள் செய்துபின் தூய்மணி நன்நிலத்து அதிகொள் சிந்தையின் அம்பிறப் பணிந்து உடன் நெதி இரண்டுஎன நீடிய தோளினான் யதிகொள் பண்ணவர் பாவலன் புக்கதே. |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 22. | சிறந்து கோட்டத்துச் செல்வக கணதரர் இறைவன் நன்மொழி இப்பொருள் உள்கொண்டு அறைஅமர்ந்து உயிர்க்கு அறமழையைப்பெயும் துறவன் நற்சரண் தூய்தின் இறைஞ்சினான். |
|
உரை
|
| |
|
|
|
|
| | தவராசராம் கௌதமர் பாதம் பணிந்து தருமம் கேட்டல்
| | |
| | 23. | மற்றுஅம் மாமுனி ஏர்மல ராம்பதம் உற்றுடன்பணிந்து ஓங்கிய மன்னவன் நற்றவர்க்கு இறையானநற் கௌதமர் வெற்றி நற்சரண் வேந்தன் இறைஞ்சினான். |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 24. | இருகரத்தின் இறைஞ்சிய மன்னனும் பொருகயல்கணிப் பூங்குழை மாதரும் தரும தத்துவம் சனமுனிவர்க்குஉரை இருவரும்இயைந்து இன்புறக் கேட்டபின். |
|
உரை
|
| |
|
|
|
|
| | நாக பஞ்சமி கதைஉரைக்க மன்னன் வேண்டுதல்
| | |
| | 25. | சிரிநல் பஞ்சமி செல்வக் கதையினை செறிகழல் மன்னன் செப்புக என்றலும் அறிவு காட்சி அமர்ந்துஒழுக் கத்துஅவர் குறிஉ ணர்ந்துஅதன் கூறுதல் உற்றதே. |
|
உரை
|
| |
|
|
|
|
| | மகத நாட்டு மன்னன் சயந்தரனும் அவன் சுற்றத்தாரும்
| | |
| | 26. | நாவலந் தீவின் நற்பரதத்துஇடை மாவலர் மன்னர் மன்னு மகதம்நல் கூவும் கோகிலம் கொண்மதுத் தாரணி காவும் சூழ்ந்த கனக புரம்அதே. |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 27. | அந்நகர்க்கு இறையான சயந்தரன் நன்மனைவி விசாலநன் நேத்திரை தன்சுதன்மதுத் தாரணி சீதரன் நன்கு அமைச்சன் நயந்தரன் என்பவே. |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 28. | மற்றும் தேவியர் மன்னும்எண்ணாயிரர் வெற்றி வேந்தன் விழைந்துஉறுகின்றநாள் பற்ற வாணிகன் பல்பொருள் பொற்கலத்து உற்றமாதர் படத்து உருக்காட்டினான். |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 29. | மன்னன் நோக்கி மயங்கி மகிழ்ந்தபின் கின்னரியோ கிளர்கார் மாதரோ இன்ன ரூபம்மிக்கார்இது என்றலும் மன்னும் வாசவன் வாக்குஉரை செய்கின்றான். |
|
உரை
|
| |
|
|
|
|
| | வாசவன் மறுமொழி
| | |
| | 30. | சொல்அரிய சுராட்டிர தேசத்துப் பல்சனம்நிறை பரங்கிரியாநகர் செல்வன் சிரீவர்மன் தேவியும் சிரீமதி நல்சுதையவள் நாமம் பிரிதிதேவி. |
|
உரை
|
| |
|
|
|
|
| | சயந்தரன் பிரிதிதேவியை மணந்து பட்டத்துஅரசி ஆக்குதல்
| | |
| | 31. | அவ்வணிகன் அவளுடை ரூபத்தைச் செவ்விதில் செப்பச் சீருடை மன்னனும் மௌவல் அம்குழல் மாதரைத் தான்அழைத்துத் தெய்வ வேள்வியில் சேர்ந்து புணர்ந்தனன். |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 32. | மன்னன் இன்புற்று மாதேவி ஆகவே நன்மைப் பட்டம் நயந்து கொடுத்தபின் மன்னும் மாதர்கள் வந்து பணிந்திட இன்ன ஆற்றின் இயைந்துடன் செல்லுநாள். |
|
உரை
|
| |
|
|
|
|
| | பிரிதிதேவி-விசாலநேத்திரை சந்திப்பு
| | |
| | 33. | வயந்தம் ஆடவே மன்னனும் மாதரும் நயந்து போந்தனர் நன்மலர்க் காவினுள் பெயர்ந்து பல்லக்கின் ஏறிப் பிரிதிதேவி கயந்தம் நீர்அணி காண்டற்குச் சென்றநாள். |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 34. | வாரணத்தின்முன் மார்க்கத்து நின்றவள் வார்அணி கொங்கை யார்அவள் என்றலும் ஏர்அணிம்முடி வேந்தன்மாதேவிஎன்று தார்அணிகுழல் தாதி உரைத்தனள். |
|
உரை
|
| |
|
|
|
|
| | பிரிதிதேவி பரமன் ஆலயம் சென்று தொழுதல்
| | | வேறு
| | 35. | வேல்விழி மாது கேட்டு விசாலநேத்திரையோ என்னைக் கால்மிசை வீழ எண்ணிக் காண்டற்கு நின்றாள் என்று பால்மொழி அமிர்தம் அன்னாள் பரமன் ஆலையம் அடைந்து நூல்மொழி இறைவன் பாதம் நோக்கிநன்கு இறைஞ்சினாளே. |
|
உரை
|
| |
|
|
|
|
| | ஆலயத்து அமர்ந்திருந்த முனிவனை அவள் பணிதல்
| | | வேறு
| | 36. | கொல்லாத நல்விரதக் கோமான்நினைத் தொழுதார் பொல்லாக் கதிஅறுத்துப் பொற்புடைய முத்திதனைச் செல்லற்கு எளிதென்றே சேயிழையாள் தான்பரவி எல்லா வினைசெறிக்கும் இயன்முனியைத் தான்பணித்தாள். |
|
உரை
|
| |
|
|
|
|
| | முனிவனின் வாழ்த்துரை கேட்ட பிரிதிதேவி மகிழ்தல்
| | |
| | 37. | பணிபவள்கு நன்குஉரையில் பரமமுனி வாழ்த்த அணிபெறவே நல்தவமும் ஆமோ எனக்குஎன்றாள் கணிதம்இலாக் குணச்சுதனைக் கீர்த்திஉடனேபெறுவை மணிவிளக்கமே போன்ற மாதவனும் தான்உரைத்தான், |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | |
| | 38. | நின்றசனம் தன்னுடனே நீடுபோய்த் தவம்பட்டுப் பின்றை அறஉரைகள் பெருமிதமாய்க் கேட்டுவிதி வென்ற பரமன்அடி விமலமாய்த் தான்பணிந்து அன்றுதான் புத்திரனை அவதரித்தால் போல்மகிழ்ந்தாள். |
|
உரை
|
| |
|
|
|
|
| |
| | | வேறு
| | 39. | நல்தவன் உரைத்த சொல்லை நறுமலர்க் கோதை கேட்டு பற்றுடன் உணர்ந்து நல்ல பாசுஇழைப் பரவை அல்குல் உற்றதன் குழலினாரோடு உறுதவன் பாதம் தன்னில் வெற்றியின் இறைஞ்சி வந்து வியன்மனை புகுந்து இருந்தாள். |
|
உரை
|
| |
|
|