தொடக்கம் |
இரண்டாம் சருக்கம்
|
|
|
| சயந்தரன்-பிரிதிதேவி உரையாடல்
| |
| 40. | வனவிளையாடல் ஆடி மன்னன் தன்மனை புகுந்து மனமகிழ் கோதை தன்னை மருவிய காதலாலே புனலின்நீ ஆடல் இன்றிப் போம்பொருள் புகல்க என்ன கனவரை மார்பன் கேட்பக் காரிகை உரைக்கும் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 41. | இறைவன் ஆலயத்துஉள் சென்று இறைவனை வணங்கித் தீய கறைஇலா முனிவன் பாதம் கண்டுஅடி பணிந்து தூய அறவுரை கேட்டேன் என்ன அரசன்கேட்டு உளம் மகிழ்ந்து பிறைநுதல் பேதை தன்னால் பெறுசுவைக் கடலுள் ஆழ்ந்தார். |
|
உரை
|
|
|
|
|
| பிரிதிதேவி கண்ட கனவு
| |
| 42. | இருவரும் பிரிதல் இன்றி இன்புறு போகம் துய்த்து மருவிய துயில்கொள்கின்றார் மனோகரம் என்னும் யாமம் இருள்மனை இமில் ஏறுஒன்றும் இளங்கதிர் கனவில் தோன்றப் பொருஇலாள் கண்டுஎழுந்து புரவலர்க்கு உணர்த்தினாளே. |
|
உரை
|
|
|
|
|
| சினாலய முனிவரிடம் மன்னனும் தேவியும் கனாப்பயன் கேட்டல்
| |
| 43. | வேந்தன்கேட்டு இனியன் ஆகி விமலன் ஆலயத்துஉள் சென்று சேந்தளிர்ப் பிண்டியின்கீழ்ச் செல்வனை வணங்கி வாழ்த்தி காந்திய முனிக்கு இறைஞ்சிக் கனாப்பயன் நுவல என்றான் ஏந்துஇள முலையினாளும் இறைவனும் மிகுந்து கேட்டார். |
|
உரை
|
|
|
|
|
| புத்திரன் பிறப்பான் என்றார் முனிவர்
| |
| 44. | அம்முனி அவரை நோக்கி அருந்துநல் கனவு தன்னைச் செம்மையின் இருவர்கட்கும் சிறுவன்வந்து உதிக்கும் என்றும் கம்பம்இல் நிலங்கள் எல்லாம் காத்துநல் தவமும் தாங்கி வெம்பிய வினைஅறுத்து வீடுநன்கு அடையும் என்றார். |
|
உரை
|
|
|
|
|
| புதல்வன் பிறந்தபின் நிகழ்வன மன்னன் கேட்டல்
| |
| 45. | தனையன்வந்து உதித்த பின்னைத் தகுகுறிப்பு உண்டோ என்று புனைமலர் அலங்கல் மார்பன் புரவலன் மற்றுங் கேட்ப நினைமின்அக் குறிகள் உண்டுஎன்நேர்மையில் கேட்பிர் ஆயின் தினைஅனைப் பற்றும் இல்லாத் திகம்பரன் இயம்புகின்றான். |
|
உரை
|
|
|
|
|
| திகம்பர முனிவரின் மறுமொழி
| | வேறு
| 46. | பொன்எயில்உள் வீற்றுஇருக்கும் புனிதன் திருக்கோயில் நின்சிறுவன் சரணத்தான் நீங்கும் திருக்கதவம் நன்நாக வாவிதனில் நழுவப் பதமும்உண்டாம் மன்னாக மாவினொடு மதம்அடக்கிச் செலுத்திடுவான். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 47. | அருள்முனி அருளக்கேட்டு அரசன்தன் தேவிதன்னோடு இருவரும் இறைஞ்சிஏத்தி எழில்மனைக்குஎழுந்துவந்து பருமுகில் தவழும்மாடப் பஞ்சநல் அமளிதன்னில் திருநிகர்மாது மன்னன் சேர்ந்துஇனிது இருக்கும்அந்நாள். |
|
உரை
|
|
|
|
|
| பிரிதிதேவி கருக் கொள்ளுதல்
| | வேறு
| 48. | புண்தவழ் வேல்கண் கோதை பூரண மயற்கைச் சின்னம் மண்இனிது உண்ண எண்ணும் மைந்தன்பூவலயம் ஆளும் பண்ணுகக் கிளவி வாயில் பரவிய தீரும் சேரும் கண்ணிய மிச்சம் மின்னைக் கழித்திடும் உறுப்பு இதுஆமே. |
|
உரை
|
|
|
|
|
| புதல்வன் பிரதாபந்தன் பிறத்தல்
| |
| 49. | திங்கள் ஒன்பான் நிறைந்து செல்வன்நல் தினத்தில் தோன்றப் பொங்குநீ்ர்க் கடல்போல் மன்னன் புரிந்துநல் உவகை ஆகித் தங்குபொன் அறைதிறந்து தரணிஉள்ளவர்க்குச் சிந்திச் சிங்கம்நேர் சிறுவன் நாமம் சீர்பிரதாபந்தன் என்றார். |
|
உரை
|
|
|
|
|
| பிரிதிவிதேவி குழந்தையுடன் பரமன் ஆலயம் அடைதல்
| |
| 50. | பிரிதிவி தேவி ஓர்நாள் பெருங்குழுத் தேவி மாரும் அரியநல் பரமன் கோயில் அன்புடன் போக எண்ணி விரிநிற மலரும் சாந்தும் வேண்டிய பலவும் ஏந்திப் பரிவுள தனையன் கொண்டு பாங்கினால் சென்ற அன்றே. |
|
உரை
|
|
|
|
|
| ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதங்கள்
| |
| 51. | சிறுவன்தன் சரணம் தீண்டச் சினாலயம் கதவு நீங்கப் பிறைநுதல் தாதிதானும் பிள்ளைவிட்டு உள்புகுந்தாள் நறைமலர் வாவி தன்னுள் நல்சுதன் வீழக் காணாச் சிறைஅழி காதல்தாயும் சென்றுஉடன் வீழ்ந்தாள் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 52. | கறைகெழு வேலினான் தன் காரிகை நீர்மேல் நிற்பப் பிறைஎயிற்று அரவின் மீது பெற்றிருந் தனையன் கண்டு பறைஇடி முரசம் ஆர்ப்பப் பாங்கினால் எடுத்து வந்து இறைவனை வணங்கி ஏத்தி இயன்மனை புகுந்தான் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் எனப் பெயர் பெற்றது
| |
| 53. | நாகத்தின் சிரசின் மீது நன்மையில் தரித்தென்று எண்ணி நாகநல் குமரன் என்று நரபதி நாமம் செய்தான் நாகம்நேர் அகலத்தானை நாமகள் சேர்த்தி இன்ப நாகஇந்திரனைப் போல நரபதி இருக்கும் அந்நாள். |
|
உரை
|
|
|
|
|
| கின்னரி-மனோகரியரின் இசைத் திறம் அறிதல்
| |
| 54. | கின்னரிமனோகரீஎன் கெணிகைநல் கன்னிமாரும் அன்னவர் தாயும் வந்தே அரசனைக் கண்டு உரைப்பார் என்னுடைச் சுதையர் கீதம் இறைவநின் சிறுவன் காண்க என்றுஅவள் கூற நன்றுஎன்று இனிதுடன் கேட்கின்றாரே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 55. | இசைஅறி குமரன் கேட்டே இளையவள் கீதம் நன்றுஎன்று அசைவிலா மன்னன் தானும் அதிசய மனத்தன் ஆகித் திசைவிளக்கு அனையாள் மூத்தாள் தெரிந்துநீ என்கொல் என்ன வசைஇன்றி மூத்தாள் தன்னை மனோகரிநோக்கக் கண்டேன். |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் அம் மங்கையரை மணத்தல்
| |
| 56. | பலகலம் அணிந்த அல்குல் பஞ்சநல் சுகந்தநீயும் துலங்குதன் சுதையர் தம்மை தூய்மணிக் குமரன்கு ஈந்தாள் அலங்கல்வேல் குமரன் தானும் ஆயிழை மாதர் தாமும் புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்துஇன்பக் கடலுள் ஆழ்ந்தார். |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் யானையையும் குதிரையையும் அடக்குதல்
| |
| 57. | நாகம்மிக் கதம்கொண்டு ஓடி நகர்மாடம் அழித்துச் செல்ல நாகநல் குமரன் சென்று நாகத்தை அடக்கிக் கொண்டு வேகத்தின் விட்டுவந்து வேந்தநீ கொள்க என்ன வாகுநல் சுதனை நோக்கி யானைநீ கைக்கொள் என்றான். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 58. | மற்றுஓர்நாள் குமரன் துட்ட மாவினை அடக்கி மேற்கொண்டு உற்றஊர் வீதிதோறும் ஊர்ந்துதீக் கோடி ஆட்டி வெற்றிவேல் வேந்தன் காட்ட விழைந்துநீ கொள்க என்றான் பற்றியே கொண்டு போகிப் பவனத்தில் சேர்த்தினானே. |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் பெருமைத் திருமகனாக விளங்குதல்
| |
| 59. | அறஉரை அருளிச் செய்த அம்முனி குறித்த நான்கும் திறவதின் எய்தி நல்ல சீர்கலைக் கடலை நீந்திப் படுமதக் களிறும் தேர்மா புகழ்பெற ஊர்ந்து மூன்றாம் பிறையது போல்வளர்ந்து பீடுஉடைக் குமரன் ஆனான். |
|
உரை
|
|
|
|
|
| விசாலநேத்திரை பொறாமையால் மகன் சிரீதரனிடம் சொன்ன சொற்கள்
| |
| 60. | தூசுநீர் விசாலக்கண்ணி சுதனைக்கண்டு இனிது உரைப்பாள் தேசநல் புரங்கள் எங்கும் திகழ்பணி குமரன் கீர்த்திப் பேசஓணா வகையில் கேட்டேன் பெருந்தவம் இல்லை நீயும் ஏசுற இகழ்ஒன்று இன்றி இனிஉனைக் காக்க என்றாள். |
|
உரை
|
|
|
|
|
| சிரீதரன் நாககுமாரனைக் கொல்லச் சமயம் பார்த்திருத்தல்
| |
| 61. | சிரிதரன் கேட்டு நெஞ்சில் செய்பொருள் என்என்று ஏகி குறிகொண்டு ஆயிரத்தினோரைக் கொன்றிடும் ஒருவனாகச் செறியும்ஐந்நூறு பேரும் சீர்மையில் கரத்தினாரை அறிவினில் கூட்டிக் கொண்டு அமர்ந்துஇனிது இருக்கும் அந்நாள். |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் நீர்விளையாடலும் பிரிதிவிதேவி அவண் போதலும்
| | வேறு
| 62. | குமரனும்நன் மாதரும் குச்சம்என்னும் வாவிஉள் மமரநீரில் ஆடவே வன்னமாலை குங்குமம் சுமரஏந்திப் பட்டுடன் தோழிகொண்டு போகையில் சமையும்மாட மீமிசைச் சயந்தரன் இருந்ததே. |
|
உரை
|
|
|
|
|
| விசாலநேத்திரை சயந்தரனிடம் பொய்யுரை பகர்தல்
| |
| 63. | வேந்தன் பக்கம்கூறுநல் விசாலநேத்திரையவள் போந்தனள் மனைவியால் புணரும்சோரன் தன்னிடம் பூந்தடத்தைச் சுற்றிய பொற்புடைக் கரைமிசை ஏந்திழையாள் நிற்பக்கண்டு இனிச்சுதன் பணிந்ததே. |
|
உரை
|
|
|
|
|
| பொய்பேசிய மூத்த மனைவியை மன்னன் கடிதலும், நாககுமாரன் சுற்றம்சூழ மனை திரும்புதலும்
| |
| 64. | பொய்உரை புனைந்தவளைப் புரவலனும் சீறினான் நையும்இடை மாதரும் நாகநல் குமரனும் செய்யமாலை சாந்துபட்டுச் செம்மையுடன் தாங்கியே வெய்யவேல்கண் தாயுடன் வியன்மனை அடைந்தனன். |
|
உரை
|
|
|
|
|
| பிரிதிவிதேவிக்கு மன்னன் இட்ட கட்டளை
| |
| 65. | மன்னன் தேவியை மாதேஎங்கு போனதுஎன் நின்னுடைப் புதல்வன் நீராடல்காணப் போனதுஎன் நின்உடன் மனைதனில் ஈண்டுஇனிதின் ஆடல்என் நந்நகர்ப் புறத்தனைய நாடல்நீங்க என்றனன். |
|
உரை
|
|
|
|
|
| தேவியின் சோர்வும் நாககுமாரன் உலாப்போதலும்
| |
| 66. | அரசன்உரைத்து ஏகினான் அகமகிழ்வும் இன்றியே சிரசுஇறங்கித் துக்கமாய்ச் சீர்கரத்து இருந்தனள் விரகுநல் குமரனும் வியந்துவந்து கேட்டனன் அரசன்உரை சொல்லக்கேட்டு ஆனைமிசை ஏறினான். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 67. | வாத்தியம் முழங்கவும் மதவாரணம் அடக்கவும் ஏத்துஅரிய வீதிதொறும் ஈடுஇல்வட்ட சாரியும் பார்த்துஅரிய நடனமும் பல்இயங்கள் ஆர்ப்பவே சீற்றமொடு உலாச்செலச் சீர்அரசன் கேட்டனன். |
|
உரை
|
|
|
|
|
| அரசன் சினந்து நாககுமாரனின் நற்பொருள் கவரச்செய்தல்
| |
| 68. | நன்அடியார் சொல்லினர் நாகநல் குமரன்என் இன்உரையை மீறினன் இனிஅவன் மனைபுகுந்து பொன்அணிகள் நற்பொருள் நாடிமிக் கவர்கொள என்றுஅரசன் கூறலும் இனப்பொருள் கவர்ந்தனர். |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் அரசர்களுடன் சூதாடிப் பொருள் மிகக் கொணர்தல்
| |
| 69. | ஆடு வாரணமிசை அண்ணல்வந்து இழிதர நீடுமாளிகைஅடைய நீர்மைநற்றாய் கூறலும் ஆடும்சூது மனைபுகுந்து அரசர்தம்மை வென்றபின் கூடும் ஆபரணமே குமரன் கொண்டு ஏகினான். |
|
உரை
|
|
|
|
|
| அரசர்கள் சயந்தரனிடம் முறையிடுதல்
| |
| 70. | அரசர்கள் அனைவரும் அதிகராசனைத்தொழ அரவமணி ஆரமும் ஆன முத்து மாலையும் கரம்அதில் கடகமும் காய்பொன் கேயூரமும் எரிமணிகள் இலதைவேந்து என்னஇக் கூற்றென. |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரனுடன் ஆடிய சூதில் தந்தை இருமுறை தோற்றல்
| |
| 71. | சூதினால் செயித்துநின் சுதன்அணிகள் கொண்டனன் சூதில்ஆட என்னுடன் சுதன்அழைப்ப வந்தபின் சூதினில் துடங்கிநல் சுதனும்தந்தை அன்பினில் சூதுஇரண்டு ஆட்டினும் சுதன்மிகச் செயித்தனன். |
|
உரை
|
|
|
|
|
| தாயின் மனையில் கவர்ந்துசென்ற பொருளைமட்டும் கொண்டு ஏனைய பொருள்களை உரியவர்க்கே அளித்தல்
| |
| 72. | இனியசூதில் ஆடலுக்கு இசைந்ததேச மன்னரை இனியதாயப் பொருள்களை இயல்பினால் கொடுத்துஉடன் தனையனும் மனைபுகுந்து தாய்பொருள் கொடுத்தபின் அணிஅரசர் ஆரமும் அவர்அவர்க்கு அளித்தனன். |
|
உரை
|
|
|
|
|
| புதிய மாளிகையில் நாககுமாரன் குடிபுகுதல்
| |
| 73. | மன்னவன்தன் ஏவலால் மாநகர்ப் புறத்தினில் நன்நகர் சமைத்துஇனிதின் நற்சுதன் இருக்கஎன்று அந்நகரின் நாமமும் அலங்கரிய புரம்எனத் தன்நகரின் மேவும்பொன்தார் அணிந்த காளையே. |
|
உரை
|
|
|
|