தொடக்கம் |
மூன்றாம் சருக்கம்
|
|
|
| கவிக்கூற்று
| |
| 74. | அரிவையர் போகம் தன்னில் ஆனநல் குமரன் தானும் பிரிவுஇன்றி விடாது புல்லிப் பெருமலர்க் காவு சேர்ந்து பரிவுடன் இனிதின் ஆடிப் பாங்கினால் செல்லும் நாளில் உரிமையால் தோழர்வந்து சேர்ந்தது கூறல் உற்றேன். |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரனின் தோழர் வரலாறு
| |
| 75. | பார்அணி சூர சேனம் பண்ணுதற்கு அரிய நாட்டுள் ஊர்அணி கொடிகள் ஓங்கும் உத்தர மதுரை தன்னில் வார்அணி கொங்கை மார்க்கு மாரன்நேர் செயவர்மாவின் சீர்அணி தேவிநாமம் செயவதி என்பது ஆகும். |
|
உரை
|
|
|
|
|
| வியாள-மாவியாளரின் தோற்றம்
| |
| 76. | வேய்ந்தவெம் முலையாள் பக்கல் வியாள மாவியாளர் என்னும் சேர்ந்துஇரு புதல்வர் தோன்றிச் செவ்வியால் செல்லும் நாளில் காந்திநல் தவத்தோர் வந்தார் கடவுள்நேர் தூம சேனர் வேந்தன்வந்து அடி வணங்கி விரித்துஒன்று வினவினானே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 77. | என்னுடையப் புதல்வர் தாமும் இனிஅரசு ஆளும் ஒன்றோ அன்னியன் சேவை ஒன்றோ அடிகள் நீர்அருளிச் செய்மின் துன்னிய புதல்வர் தாமும் ஒருவனைச் சேவை பண்ணும் என்றுஅவர் குறியும் சொல்ல எழில்முடி புதல்வர்க்கு ஈந்தான். |
|
உரை
|
|
|
|
|
| வியாள-மாவியாளர் தம் நாடுவிட்டுப் பாடலிபுரம் சார்தல்
| |
| 78. | மன்னன்போய் வனம் அடைந்து மாமுனியாகி நிற்பப் பின்னவர் அமைச்சன் தன்மேல் பெருநிலப் பாரம் வைத்துத் தன்இறை தேடிப் போந்தார் தரைமகள் திலதம் போலும் பன்னக நகரம் நேர்ஆம் பாடலிபுரமது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
| பாடலிபுர மன்னன் மகளிரை அவ்விருவரும் மணத்தல்
| |
| 79. | நன்னகர்க்கு இறைவன் நல்ல நாமம் சிரீவர்மன் ஆகும் தன்னவன் றேவி பேரும் தக்கசிரீமதியாம் அம்பொன் கிண்ணம்போல் முலையாள் புத்ரிகேணிகாசுந் தரிஎன்பாள்ஆம் விண்உறை தேவர் போல வியாள மாவியாளர் வந்தார். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 80. | மன்னனைக்கண்டு இருப்ப மாவியாளன் தகமை கண்டு தன்உடையப் புதல்வி தன்னைத் தான்அவன் கொடுத்துத் தாதி துன்னிய மகளி தன்னைச் சுந்தரிவியாளனுக்கு மன்இயல் கொடுப்ப மன்னர் இருவரும் இன்புற்றாரே. |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரனை வியாளன் காண, அவன் நெற்றிக்கண் மறைதல்
| |
| 81. | சிறுதினம் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து நறுமலர்க் கோதை வேலான் நாகநல் குமரன் கண்டு சிறுமலர் நெற்றிக் கண்ணும் சேரவே மறையக் கண்டு சிறியன்யான் இன்னான் என்றான் செல்வனும் மகிழ்உற்றானே. |
|
உரை
|
|
|
|
|
| சீதரன் ஏவிய சேனையை வியாளன் கம்பத்தால் அடித்து மாய்த்தல்
| |
| 82. | செல்வனைக் கொல்வது என்று சிரீதரன் சேனை வந்து பல்சன மனையைச் சூழப் பண்புடை வியாளன் கண்டு வல்லைநீர் வந்தது என்ன வள்ளலை வதைக்க என்றார் கொல்களி யானைக் கம்பம் கொண்டுஉடன் சாடினானே. |
|
உரை
|
|
|
|
|
| சீதரன் வந்து நாககுமாரனை எதிர்த்தலும், அமைச்சர் வேண்டுதலால் போர் விடுத்தலும்
| |
| 83. | சேனைதன் மரணம் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான் ஆனைமேல் குமரன் தோன்றி அவனும்வந்து எதிர்த்த போது மானவேல் மன்னன் கேட்டு மந்திரிதன்னை ஏவ கோன்அவர் குமரன் கண்டு கொலைத் தொழில் ஒழித்தது அன்றே. |
|
உரை
|
|
|
|
|
| மன்னனின் ஆணை கேட்ட நாககுமாரனின் மறுமொழி
| |
| 84. | நாகநல் குமரன் கண்டு நயந்தரன் இனிய கூறும் வேகநின் மனைக்குச் சூரன் வெகுண்டுஅவன் வந்தான் என்ன போகநீ தேசத்து என்று புரவலன் சொன்னான் என்ன ஆகவே அவன்முன் போகில் அவ்வண்ணம் செய்வன் என்றான். |
|
உரை
|
|
|
|
|
| நயந்தரன் அறிவுரையால் சீதரன் மனை புகுதல்
| |
| 85. | நயந்தரன் சென்று உரைப்பான் நல்லறிவு இன்றி நீயே செயந்தனில் ஒருவன் கையில் சேனைதன் மரணம் கண்டும் நயந்து அறியாத நீயே நன்மனை புகுக என்றான் பயந்துதன் சேனை யோடும் பவனத்தில் சென்ற அன்றே. |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் தேவிமாரோடு தன் தோழன் வியாளனின் ஊருக்குச் செல்லுதல்
| |
| 86. | தந்தையால் அமைச்சன் சொல்லத் தானும் தன்தாய்க்கு உரைத்து தந்திமேல் மாதர் கூடத் தோழனும் தானும் ஏறி நந்திய வியாளன் நன்ஊர் மதுரையில்புக்கு இருந்து அந்தம்இல் உவகைஎய்தி அமர்ந்துஇனிது ஒழுகும் நாளில். |
|
உரை
|
|
|
|
|
| மதுரையில் வீணைத் தலைவன் குழுவுடன் எதிர்ப்படல்
| | வேறு
| 87. | மன்னவ குமரனும் மன்னனும் தோழனும் அந்நகர்ப் புறத்தினில் ஆடல் மேவலின் இன்இசை வீணைவேந்து இளையர் ஐஞ்நூற்றுவர் அன்னவர்க் கண்டுமிக்கு அண்ணல் உரைத்தனன். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 88. | எங்குஉளிர் யாவர்நீர் எங்குஇனிப் போவதுஎன்று அங்குஅவர் தம்முளே அறிந்துஒருவன்சொலும் தங்கள்ஊர் நாமமும் தந்தைதாய் பேர்உரைத்து இங்குஇவர் என்கையின் வீணைகற்பவர்களே. |
|
உரை
|
|
|
|
|
| வீணைத் தலைவன் சொன்ன காம்பீர நாட்டுச் செய்தி
| | வேறு
| 89. | நந்துகாம் பீரநாட்டின் நகரும் காம்பீரம் என்னும் நந்தன ராசன்தேவி நாமம் தாரணியாம் புத்திரி கந்தம்ஆர் திரிபுவனாரதி கைவீணை அதனில் தோற்று என்தமரோடும் கூட எங்கள்ஊர்க்கு ஏறச்சென்றோம். |
|
உரை
|
|
|
|
|
| திரிபுவனாரதியை வீணையினால் வென்று நாககுமாரன் நன்மணங் கொள்ளல்
| |
| 90. | வெற்றிவேல் குமரன் கேட்டு வியாளனும் தானும் சென்று வில்புரு வதனத்தாளை வீணையின் வென்று கொண்டு கற்புடை அவள்தன் காமக் கடல்இடை நீந்து நாளில் உற்றதுஓர் வணிகனைக்கண்டு உவந்துஅதிசயத்தைக் கேட்டான். |
|
உரை
|
|
|
|
|
| வேற்றுநாட்டு வணிகன் சொன்ன அற்புதச் செய்தி
| |
| 91. | தீதுஇல்பூந் திலகம் என்னும் சினாலயம் அதனின் முன்னில் சோதிமிக் கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம் ஓதிய குரலன் ஆகி ஒருவன்நின்று அலறுகின்றான் ஏதுஎன்று அறியேன் என்றான் எரிமணிக் கடகக் கையான். |
|
உரை
|
|
|
|
|
| வணிகன் சொன்ன சினாலயத்தை நாககுமாரன் சேர்ந்திருத்தல்
| |
| 92. | குன்றுஎனத் திரண்ட தோளான் குமரனும் கேட்டுஉவந்து சென்றுஅந்த ஆலயத்தில் சினவரன் பணிந்து நின்று வென்றுஅந்த விமலன் மீது விரவிய துதிகள் சொல்லி முன்அந்த மண்டபத்தின் முகமலர்ந்து இனிது இருந்தான். |
|
உரை
|
|
|
|
|
| வேடனின் மனைவியை நாககுமாரன் மீட்டுத்தருதல்
| |
| 93. | பூசல்இட்டு ஒருவன் கூவப் புரவல குமரன் கேட்டு ஓசனிக்கின்றது என்ன ஒருதனி நின்ற நீயார் ஆசைஎன் மனைவி தன்னை அதிபீம அசுரன் கொண்டு பேசஒணா மலைமுழஞ்சுள் பிலத்தினில் வைத்துஇருந்தான். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 94. | இரம்மிய வனத்துள் வாழ்வேன் இரம்மிய வேடன் என்பேன் விம்முறு துயர்சொல் கேட்டு வீரன்அக் குகைகாட்டு என்னச் செம்மையில் சென்று காட்டச் செல்வனும் சிறந்து போந்து அம்மலைக் குகைவாய் தன்னில் அண்ணலும் உவந்து நின்றான். |
|
உரை
|
|
|
|
|
| வியந்தரதேவன் நாககுமாரனுக்கு வாள் முதலியன கொடுத்தல்
| |
| 95. | வியந்தர தேவன் வந்து வந்தனை செய்து நிற்ப விந்தநல் கிராதன் தேவிதனை விடுவித்த பின்புச் சந்திரகாந்தி வாளும் சாலமிக்கு அமளி தானும் கந்தநல் காமம் என்னும் கரண்டகம் கொடுத்தது அன்றே. |
|
உரை
|
|
|
|
|
| வேடன் உரைத்த மலைக்குகை நாலாயிரவர் நாககுமாரனுக்கு அடிமையாதல்
| |
| 96. | அங்குநின்று அண்ணல் போந்து அதிசயம் கேட்ப வேடன் இங்குஉள மலைவாரத்தில் இரணிய குகைஉண்டு என்னக் குங்குமம் அணிந்த மார்பன் குமரன்கேட்டு அங்குச் சென்றான் அங்குள இயக்கி வந்து அடிபணிந்து இனிது சொல்வாள். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 97. | இனிஉனக்கு ஆளர் ஆனோம் ஈர்இரண்டு ஆயிரவர் எனஅவள் சொல்ல நன்றுஎன்று இனிஒரு காரியத்தின் நினைவன்யான் அங்கு வாஎன் நீங்கிநற் குமரன் வந்து வனசரன் தன்னைக் கண்டு அதிசயம் கேட்பச் சொல்வான். |
|
உரை
|
|
|
|
|
| வேடன் சொற்படி வேதாளத்தை வதைத்தல்
| |
| 98. | வாள்கரம் சுழற்றி நிற்பான் வியந்தரன் ஒருவன் என்னக் காலினைப் பற்றி ஈர்ப்பக் கனநிதி கண்டு காவல் ஆள்எனத் தெய்வம் வைத்து அருகன்ஆலையத்துள் சென்று தோள்அன தோழன் கூடத் தொல்கிரிபுரத்தைச் சேர்ந்தான். |
|
உரை
|
|
|
|
|
| கிரிகூடபுரத்தில் நாககுமாரன் கணைவிழியை மணத்தல்
| |
| 99. | அந்நகர்க்கு அதிபன் ஆன வனராசன் தேவிதானும் மன்னிய முலையினாள்பேர் வனமாலை மகள்நன் நாமம் நன்நுதல் கணைவிழியை நாகநல் குமரனுக்குப் பன்அரும் வேள்வி தன்னால் பார்த்திபன் கொடுத்தது அன்றே. |
|
உரை
|
|
|
|
|
| புண்டரபுரத்தை வனராசற்கு அளித்தல்
| |
| 100. | தாரணி வனராசன்குத் தாயத்தான் ஒருவன் தன்னைச் சீரணி குமரன் தோழன் சிறந்துஅணி மாமன் கூடப் பார்அணி வெற்றி கொண்டு புண்டர புரத்தை வாங்கி ஏர்அணி வனரா சன்கு எழில்பெறக் கொடுத்த அன்றே. |
|
உரை
|
|
|
|
|
| நாடிழந்த சோமப்பிரபன் நற்றவம் செய்தல்
| |
| 101. | சொல்அரும் நாடு இழந்து சோமநல் பிரபன் போகி எல்லையில் குணத்தின் மிக்க எமதரர் அடிவணங்கி நல்லருள் சுரந்துஅளிக்கும் நற்றவ முனிவன் ஆகி ஒல்லையின் வினைகள் தீர யோகத்தைக் காத்து நின்றான். |
|
உரை
|
|
|
|