தொடக்கம் |
நான்காம் சருக்கம்
|
|
|
| சுப்பிரதிட்ட மன்னன் செயவர்மன் பரம முனிவரைப் பணிந்து வேண்டுதல்
| |
| 102. | சுப்பிரதிட்டம் எனும்புரம் ஆள்பவன் செப்பு வன்மை செயவர்மராசன்தன் ஒப்புஇல் பாவையும் ஓவியம் போல்செம்பொன் செப்பு நேர்முலையாள்நல் செயவதி. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 103. | மக்கள் சேத்திஅ பேத்தியர் என்றுஇவர் மிக்க செல்வத்தின் மேன்மையில் செல்லுநாள் பக்க நோன்புடை பரம முனிவரர் தொக்க ராசன் தொழுதிட்டு இறைஞ்சினான். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 104. | இருவர் என்சுதர் என்னுடை ராச்சியம் மருவி ஆளுமோ மற்றுஒரு சேவையோ திருவுளம் பற்றித் தேர்ந்துஅறிவிக்கஎனத் திருமுடி மன்ன செப்புவன் கேள்என்றார். |
|
உரை
|
|
|
|
|
| முனிவர் மன்னனுக்கு உரைத்தவை
| |
| 105. | புண்டிரம் எனும்புரப் புரவலன்தனைக் கண்திறந்து உந்திடும் காவலன்தனை அண்டிநல் சேவையார் ஆவராம்எனப் பண்திறத்தவத்தவர் பண்உரை கேட்டபின். |
|
உரை
|
|
|
|
|
| செயவர்மன் புதல்வரின் அரசாட்சி
| |
| 106. | மக்கள் மிசைநில மன்னவன் வைத்துஉடன் மிக்கு நத்துவம் வீறுடன் கொண்டுதன் நிற்கும் செவ்வினை நீங்க நின்றனர் தக்க புத்திரர் தாரணி ஆளும்நாள். |
|
உரை
|
|
|
|
|
| சோமப்பிரபர் வழி அக்குமரர் நாககுமாரன் புகழை அறிதல்
| |
| 107. | நல்அருந்தவச் சோமப் பிரபரும் எல்லை இல்குண இருடிகள் தம்முடன் தொல்புகழ்ப்புரம் சுப்பிர திட்டத்தின் நல்ல காவின் நயந்துஇருந்தார்களே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 108. | செயவர்மன் சுதர் சீர்நல் தவர்களை நயம் அறிந்துசேர் நன்அடியைப்பணிந்து இயம்பும் இம்முனி இப்ப துறந்ததுஎன் செயந்தரன்சுதன் சீற்றத்தின் ஆனதே. |
|
உரை
|
|
|
|
|
| செயவர்மன் புதல்வரிருவரும் நாககுமாரனை வந்தடைதல்
| | வேறு
| 109. | என்றவர் உரையைக் கேட்டு இருவரும் துறந்து போந்து சென்றுநல் குமரன் தன்னைச் சீர்பெற வணங்கிச் சொன்னார் இன்றுமக்காளர் ஆனோம் என்றுஅவர் கூற நன்றுஎன் குன்றுசூழ் வனசாலத்துக் குமரன்சென்று இருந்த அன்றே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 110. | அடிமரத்து இருப்ப அண்ணல் அந்நிழல் திரிதல் இன்றித் கடிகமழ் மார்பன் தன்னைக் காத்துஉடன் இருப்பப் பின்னும் விடமரப் பழங்கள் எல்லாம் வியந்து நன்துய்த்து இருந்தார் கொடிமலர்க் காவு தன்னுள் கோமகன் இருந்த போழ்தில். |
|
உரை
|
|
|
|
|
| ஆலநிழலிருந்தபோது ஐந்நூற்றுவர் வந்து குமரனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளல்
| |
| 111. | அஞ்சுநூற்றுவர்கள் வந்தே அடிபணிந்து இனிய கூறும் தஞ்சமாய் எங்கட்கு எல்லாம் தவமுனி குறிஉரைப்ப புஞ்சிய வனத்துஇருந்தோம் புரவலன் நின்இடத்தின் நெஞ்சிலில் குறியன் காணாய் எமக்குநீ இறைவன் என்றார். |
|
உரை
|
|
|
|
|
| கிரிநகரில் குணவதியை நாககுமாரன் மணத்தல்
| |
| 112. | அரியநல் உரையைக் கேட்டு அவ்வணம் களிசிறந்து உரியநல் அவர்கேளாடும் உவந்துஉடன் எழுந்து சென்று கிரிநகர் தன்னைச்சேரக் கேட்டுநன் நகரைச் சென்றான் அரிவரன் எதிர்க்கொண்டு ஏக அவன்மனை புகுந்துஇருந்தான். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 113. | அரிவர ராசன் தேவி அருந்ததி அனைய கற்பின் மிருகலோசனைஎன் பாளாம் மிக்கநன் மகள்தன் பேரும் சுரிகுழல் கருங்கண் செவ்வாய்த் துடிஇடைக் குணவ தீயைப் பிரவிச் சோதனன் இச்சித்துப் பெருநகர் வளைந்தது அன்றே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 114. | நாகநல் குமரன் கேட்டு நால்படையோடும் சென்று வேகநல் போர்க்களத்தில் வெற்றிகொண்டு அவனை ஓட்டி நாகநல் எருத்தின் வந்து நகர்புகுந்து இருப்ப மிக்க போகம்மிக் குணவ தீயைப் புரவலன் கொடுத்தது அன்றே. |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் குணவதியுடன் கூடிப் போகந் துய்த்தல்
| |
| 115. | வேல்விழி அமிர்துஅன்னாளை வேள்வியால் அண்ணல் எய்திக் கால்சிலம்பு ஓசை செய்யக் காமனும் ரதியும் போலப் போனமும் போகம் எல்லாம் பருகிஇன்புற்று நாளும் நூல்நெறி வகையில் துய்த்தார் நுண்இடை துவள அன்றே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 116. | கலைஅணி அல்குல் பாவை கங்குலும் பகலும் எல்லாம் சிலைஉயர்ந்து இனிய திண்தோள் செம்மலும் பிரிதல் இன்றி நிலைபெற நெறியில் துய்த்தார் நிகர்இன்றிச் செல்லும் நாளுள் உலைதல்இல் உறுவலீயான் ஊர்ச்சயந்தகிரிஅடைந்தான். |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் சயந்தகிரியடைந்து சினாலயம் தொழுதல்
| |
| 117. | வாமன் ஆலையத்து மூன்று வலம்கொண்டு உட்புகுந்து இறைஞ்சி தாமம்ஆர் மார்பன் மிக்க தக்கநல் பூசை செய்து சேமமாம் முக்குடைக்கீழ் இருந்துஅரியாசனத்தின் வாமனார் துதிகள் சொல்ல வாழ்த்துபு தொடங்கினானே. |
|
உரை
|
|
|
|
|
| முக்குடைக்கீழ் விளங்கும் மூர்த்தியை வாழ்த்துதல்
| | வேறு
| 118. | முத்துஇலங்கு முக்குடைக்கீழ் மூர்த்தி திருந்துஅடியை வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்உலகம் ஆண்டுவந்து இத்தலமும் முழுதுஆண்டு இருங்களிற்று எருத்தின்மிசை நித்தில வெண்குடைக்கீழ் நீங்காது இருப்பவரே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 119. | கமலமலர் மீதுஉறையும் காட்சிக்கு இனிமூர்த்தி அமலமலர்ப் பொன்சரணை அன்பாய்த் தொழுபவர்கள் இமையவர்கள் உலகத்து இந்திரராய்ப் போய்உதுதித்து இமையவர்கள் வந்துதொழ இன்புற்று இருப்பாரே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 120. | அரியாசனத்தின்மிசை அமர்ந்த திருமூர்த்தி பரிவாக உன்னடியைப் பணிந்து பரவுவர்கள் திரிலோகமும்தொழவே தேவாதி தேவருமாய் எரிபொன் உயிர்விளங்கி இனியமுத்தி சேர்பவரே. |
|
உரை
|
|
|
|
|
| வில்லாளன் ஒருவனின் தூதுச் செய்தி
| |
| 121. | இணைஇலா இறைவனை ஏத்திஇவ்வகையினால் துணைஇனிய தோழன்மார் சூழ்ந்து உடன்இருந்தபின் கணைசிலை பிடித்துஒருவன் கண்டுஒர்ஓலை முன்வைத்து இணைகரமும் கூப்பிநின்று இனிதுஇறைஞ்சிக் கூறுவான். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 122. | வற்சைஎனும் நாட்டின்உள் வான்புகழும் கௌசம்பி செற்றவரினும்மிகு சூரன்சுபசந்திரன் வெற்புநிகர் கற்பினாள் வேந்தன்மகா தேவியும் நற்சுகாவதிஎனும் நாமம்இனிது ஆயினாள். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 123. | அன்னவர்தம் புத்திரிகள் ஆனஏழு பேர்களாம் நன்சுயம்பிரபையும் நாகசுப்பிரபையும் இன்பநல் பிரபையும் இலங்குசொர்ணமாலையும் நங்கைநல் பதுமையும் நாகதத்தை என்பரே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 124. | வெள்ளியின் மலையில் மேகவாகனன்துரந்திடக் கள்அவிழ் மாசுகண்டன்அவன் வந்துஉடன் கிள்ளைஅம் மொழியினாரைக் கேட்டுஉடன் பெறுகிலன் வெள்ளைஅம் கொடிநகர வேந்தனை வதைத்தனன். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 125. | வேந்தனுக்கு இளையன்உன்னை வேண்டிஓலையேதர சேர்ந்தவன் அளித்தஓலை வாசகம் தெளிந்தபின் நாந்தக மயிற்கணை நலம்பெறத் திரித்துஉடன் போந்தவனைக் கொன்றனன் பூஅலங்கல் மார்பனே. |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரனின் வெற்றியும் நங்கையர் பலரை மணத்தலும்
| |
| 126. | அபிசந்திரன்தன்புரம் அத்தினாகம் ஏகியே சுபமுகூர்த்த நல்தினம் சுபசந்திரன் சுதைகளும் அபிசந்திரன் தன்மகளாம்சுகண்டன் சுதையுடன் செபமந்திர வேள்வியால் செல்வன்எய்தி இன்புற்றான். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 127. | நங்கைமார்கள் தன்உடன் நாகநல் குமரனும் இங்கிதக் களிப்பினால் இசைந்துஇனிப் புணர்ந்துஉடன் பொங்குநகர்ப் புறத்தினில் பூவளவன் மேவியே திங்கள்சேர் செய்குன்றினும் சேர்ந்துஇனிது ஆடுநாள். |
|
உரை
|
|
|
|
|
| அவந்திநாட்டு மேனகியை நாககுமாரன் அடைதல்
| |
| 128. | அவந்திஎன்னும் நாட்டினுள் ஆனஉஞ்சை நீள்நகர் உவந்தமன்னன் நாமமும் ஓங்கும்செய சேனனாம் அவன் தனன் மனைவியர் ஆனநல் செயசிரீ்யாம் சிவந்தபொன் நிறமகள் சீருடைய மேனகி. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 129. | பாடலீ புரத்துஇருந்த பண்புமாவியாளனும் நாடிவந்து இருந்தனன் நன்குஉஞ்சை நகர்தனில் சேடிகண்டு மேனகிக்குச் செப்பவந்து கண்டுஅவள் நாடிஅவள் போயினள் நன்நிதிப் புரிசையே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 130. | அந்நகர்விட்டு ஏகினன் ஆனமாவியாளனும் சென்றுதன் தமையனைச் சேவடி பணிந்தபின் நன்றுடன் வணங்கினன் நாகநல் குமரனை இன்றிலன்தான் யார்என என்தம்பிஅவன் என்னலும். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 131. | மின்னின்இடை நேர்இழை மேனகி எனஒரு மன்மதனை இச்சியாள் மாவியாளன் சொல்லலும் அந்நகரில் செல்லலும் அரிவையர் தரித்திட மன்னன்அம்பு வேள்வியால் மன்னிநல் புணர்ந்தனன். |
|
உரை
|
|
|
|
|
| மதுரையில் சிரீமதியை இசைப்போட்டியில் வென்று நாககுமாரன் பெறுதல்
| |
| 132. | மற்றும்ஒன்று உரைத்தனன் மதுரைமா நகரியில் உற்றுஇருந்த சிரீமதி ஓர்ந்துநாடகம்தனில் வெற்றிமுழவு ஏழ்இயம்ப வீறுடைய வல்லவன் பற்றுடன் அவள்பதியாம் பார்மிசைமேல் என்றனன். |
|
உரை
|
|
|
|
|
| மதுரை வந்த வணிகனிடம் நாககுமாரன் அவன் கண்ட அதிசயம் இயம்பக் கேட்டல்
| |
| 133. | அங்குசென்றுஅவ் அண்ணலும் அவளைவென்று கொண்டனன் பொங்கும்இக் குழலியர்ப் புணர்ந்துஉடன் இருந்தபின் வங்கமீது வந்தஓர் வணிகனை வினவுவான் எங்குஉள அதிசயம் இயம்புகநீ என்றனன். |
|
உரை
|
|
|
|
|
| வணிகன் பூதிலகமாபுரத்து அதிசயம் கூறல்
| |
| 134. | பொங்கும்ஆழியுள்ஒரு பூதிலகமாபுரம் புங்கவன்தன் ஆலையம் பொங்குசொன்ன வண்ணமுன் நங்கைமார் ஐஞ்நூற்றுவர் நாள்தொறும் ஒலிசெய்வார் அங்குஅதற்குக் காரணம் யான்அறியேன் என்றனன். |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் அந்நகரம் சென்று சினாலயம் பணிந்து இருந்தமை
| |
| 135. | தனதுவித்தை தன்னையே தான்நினைக்க வந்தபின் மனத்துஇசைந்த தோழரோடு வள்ளல்தீ பஞ்சுஎன்றுநல் கனகமய ஆலையங் கண்டுவலங் கொண்டுஉடன் சினன்அடி பணிந்துமுன் சிறந்துமிக்கு இருந்தனர். |
|
உரை
|
|
|
|
|
| ஆலயத்தின் முன்வந்து ஐந்நூறு மங்கையர் அலற, அதன் காரணம் குமாரன் வினாவுதல்
| |
| 136. | ஒருநிரையாய் மங்கையர் ஓசைசெய்யக் கேட்டபின் திருஅலங்கல் மார்பினான் சேரஅழைத்து அவர்களை அருகன்ஆலையத்துமுன் அலறும்நீங்கள் யார்எனத் தரணிசுந்தரியவள் அவன்கு இதுஎன்று கூறுவாள். |
|
உரை
|
|
|
|
|
| ஐந்நூற்றுவருள் தரணி சுந்தரி தங்கள் நிலையெடுத்துரைத்தல்
| |
| 137. | அரியவெள்ளி மாமலை ஆடும்கொடி யேமிடை பிரிதிவி திலகம்எங்கள் பேருடைய நன்நகர் வரதிரட்சகன்எமர் தந்தையை மருகனுக்குக் கருதிஎம்மைக் கேட்டனன் கண்ணவாயுவேகனே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 138. | எந்தையும் கொடாமையால் எரிஎன வெகுண்டனன் எந்தையை வதைசெய்து எங்களையும் பற்றியே இந்தநல் வனத்துஇருந்தான் என்றவளும் கூறலும் அந்தவாயுவேகனை அண்ணல்வதை செய்தனன். |
|
உரை
|
|
|
|
|
| வாயுவேகனைக் கொன்ற நாககுமாரன் நங்கையர் ஐந்நூற்றுவரை மணந்து இன்புறுதல்
| |
| 139. | அஞ்சுநூற்று மங்கையரை அண்ணல்வேள்வியால்எய்தி நெஞ்சில்அன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்தபின் அஞ்சுநூற்றுவர்படர்கள் ஆளர்ஆகி வந்தனர் தஞ்சமாய் அவர்தொழுது அகமகிழ்ந்து செல்லுநாள். |
|
உரை
|
|
|
|
|
| கலிங்கநாட்டு அரசகுமாரி மதனமஞ்சிகையை நாககுமாரன் கூடி மகிழ்தல்
| |
| 140. | கலிங்கம்என்னும் நாட்டின்உள் கனகமய இஞ்சிசூழ்ந்து இலங்குரத்னபுரம் இந்நகர்க்கு மன்னவன் துலங்குசந்திரகுப்தன் தோகைசந்திரம்மதி பெலங்கொள்இவர் நன்மகள் பேர்மதனமஞ்சிகை. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 141. | நாகநல் குமரன் சென்று நன்மந்திர வேள்வியால் வாகனம் இனிதின்இன்று மதன்மஞ்சிகையொடும் தாகமிக்கு உடையனாய்த் தான்லயப் பருகினான் நாகநல் புணர்ச்சிபோல் நன்குஉடன் இருந்துஅரோ. |
|
உரை
|
|
|
|
|
| கங்காளநாட்டு அரசகுமாரி இலக்கணையை நாககுமாரன் பெற்றுப் போகந் துய்த்தல்
| |
| 142. | கங்கைநீர் அணிந்துஇலங்கும் கங்காளநன் நாட்டின்உள் திங்கள்தவழ் மாடம்நல் திலகபுர மன்னவன் பொங்குமகுடம் முடி பொற்புவிசையந்தரன் இங்கித மனைவிபேர் இயல்விசையை என்பளே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 143. | இலக்கணை எனும்மகள் இலக்கணம் உடையவள் மிக்கஅண்ண லும்சென்று மெய்ம்மைவேள்வி தன்மையால் அக்கணத்து அவன்எய்தி அவள்தன்போகம் துய்த்தபின் தொக்ககாவு தன்உளே தொல்முனிவர் வந்துஅரோ. |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் அங்கு வந்த முனிவரைப் பணிந்து தன் மனக் கருத்திற்கு விளக்கம் கேட்டல்
| |
| 144. | ஊற்றினைச் செறித்திடும் உறுதவனுடைச் சாரணை நாற்றமிக் குமரனும் நன்புறப் பணிந்தபின் ஏற்றஅறங் கேட்டுஉடன் இருந்துஇலக்கணையின்மேல் ஏற்றமோகம் என்என இயன்முனி உரைப்பரே. |
|
உரை
|
|
|
|