தொடக்கம் |
ஐந்தாம் சருக்கம்
|
|
|
| நாககுமாரனின் முந்திய பிறப்பு வரலாறு
| |
| 145. | நாவலந் தீவு தன்னுள் நன்குஅயிராவதத்தின் மேவுமின் முகில்சூழ் மாட வீதசோகப்புரத்துக் காவிநன் விழிமாதர்க்குக் காமன்விக்கிரமராசன் தாவில் சீர் வணிகன் நாமம் தனதத்தன் என்பது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 146. | மனைவிதன் தனதத்தைக்கு மகன்நாகதத்தன் ஆகும் வனைமலர் மாலை வேலான் மற்றுஒரு வணிகன் தேவிப் புனைமலர்க் கோதை நல்லாள் பொற்புடை வசுமதிக்கு மனையின்நன்மகள்தன் நாமம் இயன்நாகவசுஎன் பாள்இம். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 147. | நண்புறு நாகதத்தன் நாகநல்வசுஎன்பாளை அன்புறு வேள்வி தன்னால் அவளுடன் புணர்ந்து சென்றான் பண்புறு நல்தவத்தின் பரமுனி தத்த நாமர் இன்புறும் புறத்தின் வந்தார் இறைவன் ஆலையத்தின் உள்ளே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 148. | நாகதத்தன்சென்று அந்த நன்முனி சரண்அடைந்து வாகுநல் தருமம் கேட்டு அனசன நோன்பு கொண்டான் போகபுண்ணியங்கள் ஆக்கும் பூரண பஞ்சமீயில் ஏகநல் தினத்தின் நன்று இடர்பசி ஆயிற்று அன்றே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 149. | தருமநல் தியானம் தன்னால் தன்னுடை மேனி விட்டு மருவினான் அசோத மத்தின் வானவன் ஆகித் தோன்றி வருகயல் விழியாள் நாக வசுவும்வந்து அமரனுக்கு மருவிய தேவி ஆகி மயல்உறுகின்ற அன்றே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 150. | அங்குஐந்து பல்ல மாயு அமரனாய்ச் சுகித்து விட்டு இங்குவந்து அரசன் ஆனாய் இனிஅந்தத் தேவி வந்து தங்குநின் மனைவி ஆனாள் தவமுனி உரைப்பப் பின்னும் எங்களுக்கு அந்த நோன்பு இனிதுவைத்து அருள என்றான். |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் வேண்ட முனிவர் நாகபஞ்சமி நோன்பினை விளக்குதல்
| |
| 151. | திங்கள் கார்த்திகையில் ஆதல் சேர்ந்தபங்குனியில் ஆதல் பொங்குஅனல் ஆடி ஆதல் பூரண பக்கம் தன்னில் அங்குறு பஞ்சமியின் அனசன நோன்பு கொண்டு தங்கும்ஆண்டு ஐந்து நோற்றான் தான்ஐந்து திங்கள் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 152. | இந்தநல் கிரமம் தன்னில் இனிமையின் நோன்பு நோற்று அந்தம்இல் அருகர் பூசை அருள்முனி தானம் செய்தால் இந்திர பதமும் பெற்று இங்குவந்து அரசர் ஆகிப் பந்ததீவீனையை வென்று பஞ்சமகதியும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
| முனிவர் உரைப்படி நாககுமாரன் பஞ்சமி நோன்புகொள்ள அவன் தந்தை ஏவலால் அமைச்சன் நயந்தரன்வந்து அழைத்தல்
| |
| 153. | என்றுஅவர்உரைப்பக் கேட்டு இறைஞ்சிக் கைக்கொண்டு நோன்பை சென்றுதன் பவனம் புக்கான் சேயிழையோடு மன்னன் நன்றுடன் செல்லும் நாளுள் நயந்தரன் வந்துஇறைஞ்சி உன்னுடைத் தந்தை உன்னை உடன் கொண்டு வருக என்றான். |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் தன் நகருக்கு மனைவி இலக்கணையோடும் பிறரோடும் திரும்புதல்
| |
| 154. | அமையும்நன்கு அமைச்சன் சொல்லை அருமணி மார்பன் கேட்டு சமையும்நால் படையும் சூழச் சாலலக் கணையினோடும் இமையம்போல் களிற்றின்ஏறி இனியநல் தோழன் மாரும் இமையவர்க்கு இறைவன் போல எழில்பெறப் புக்க அன்றே. |
|
உரை
|
|
|
|
|
| மகன் நாககுமாரனைத் தந்தை தழுவி வரவேற்றல்
| | வேறு
| 155. | தாதைஎதிர் கொள்ளஅவன் தாழ்ந்துஅடி பணிந்தான் ஆதரவினன் நன்மகனை அன்புற எடுத்தும் போதமிகப் புல்லியபின் போந்தனர் மனைக்கே ஏதம்இல்சீர் இன்புற இனிதுடன் இருந்தார். |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் தான் மணந்த மனைவியரை யெல்லாம் அழைப்பித்து அவருடன் சேர்ந்திருத்தலும், தந்தை அவனுக்கு முடிசூட்டித் துறவு பூணுதலும்
| |
| 156. | வெற்றியுடன் வேள்விசெய்த வேல்விழியினாரை உற்றுஉடனே மாதரை ஒருங்குஅழைக்க வந்தார் சித்திரநல் பாவையரைச் சேர்ந்துஉடன் இருந்தான் பற்றுஅறச் செயந்தரனும் பார்மகன்மேல் வைத்தான். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 157. | நாககுமரன்தனக்கு நன்மகுடம் சூட்டிப் போகஉப போகம்விட்டுப் புரவலனும் போகி யாகமன் அடைக்குமுனியவர் அடிபணிந்து ஏகமனம் ஆகியவன் இறைவன் உருக்கொண்டான். |
|
உரை
|
|
|
|
|
| பிரிதிதேவியும் துறவுபூண்டு நற்பேறு பெறுதல்
| |
| 158. | இருவினை கெடுத்தவனும் இன்பஉலகு அடைந்தான் பிரிதிவிநல் தேவியும்தன் பெருமகனை விட்டு சிரிமதி எனும்துறவி சீர்அடி பணிந்து அரியதவம் தரித்துஅவளும் அச்சுதம் அடைந்தாள். |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் வியாளன் முதலிய தோழர்களுக்குத் தேயங்கள்அளித்தலும், தன் மனைவியருள் இலக்கணையைப் பட்டத்தரசி யாக்குதலும்
| |
| 159. | வேந்தன்அர்த்த ராச்சியம் வியாளனுக்கு அளித்தான் ஆய்ந்தபல தோழர்களுக்கு அவனிகள் அளித்துக் சேர்ந்ததன் மனைவியருள் செயலக்கணைதன்னை வாய்ந்த மகாதேவிபட்டம் வன்மைபெற வைத்தான். |
|
உரை
|
|
|
|
|
| இலக்கணையார் வயிற்றில் புதல்வன் பிறத்தல்
| |
| 160. | இலக்கணையார் தன்வயிற்றில் நல்சுதன் பிறந்தான் மிக்கவன்தன் நாமமும் மிகுதேவகுமாரன் தொக்ககலை சிலைஅயில் பயின்றுமிகு தொல்தேர் ஒக்கமிக் களிறுஉடனே ஊர்ந்துதினம் சென்றான். |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரன் மன்னர் புடைசூழ அரியாசனத்து வீற்றிருத்தல்
| |
| 161. | புரிசைஎழ நிலத்தின்மிசை பொற்புஉற விளங்கும் அரியஅரியாசனத்தில் அண்ணல் மிகஏறி எரிபொன்முடி மன்னர்கள் எண்ஆயிரவர் சூழ இருகவரிவீசஇனி எழில்பெற இருந்தான். |
|
உரை
|
|
|
|
|
| மகன் தேவகுமாரனுக்கு முடி சூட்டி நாககுமாரன் துறவு பூணவே அவன் தேவி இலக்கணையும் துறவு மேற்கொள்ளல்
| |
| 162. | அரசுஇனிது இயல்பினின் அமர்ந்துஇருக்கும் அளவில் பரவுமுகில் மாய்ந்திடப் பார்த்திபன் விரத்தி விரவிமிகு குமரன்மிசை வீறுமுடி சூட்டி அரியதவம் தாங்கஅவன் அன்புடன் எழுந்தான். |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 163. | அமலமதி கேவலியின் அடிஇணை வணங்கி விமலன்உருக் கொண்டனன்நல் வேந்தர்பலர் கூட கமலமலராள் நிகர்நல் காட்சிஇலக்கணையும் துமிலமனைப் பதுமைஎனும் துறவர்அடிபணிந்தாள். |
|
உரை
|
|
|
|
|
| நாககுமாரனும் அவன் தோழர் முதலியோரும் சித்தியும் முத்தியும் பெறுதல்
| | வேறு
| 164. | நறுங்குழல் இலக்கணையும் நங்கைமார்தம் கூட உறுதவம் தரித்துக் கொண்டு உவந்துஅவர் செல்லும் நாளுள் மறுவில்சீர் முனிவன் ஆய நாககுமாரன் தானும் இறுகுவெவ் வினைகள் வென்று இனிச்சித்தி சேர்ந்தது அன்றே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 165. | வியாள மாவியாளர் தாமும் விழுத்தவத்து அனயை என்னும் நயாஉயிர் தியானம் தன்னால் நால்இரு வினைகள் வென்று செயத்துதி தேவர் கூறிச் சிறந்த பூசனையும் செய்ய மயாஇறப் பிறப்பும் இன்றி மருவினார் முத்தி அன்றே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 166. | அருந்தவ யோகம் தன்னால் லச்சேத் தியபேத் தியர்தம் இருவினை தம்மை வென்று இன்புறும் சித்தி சேர்ந்தார் மருவுநல் தவத்தி னாலே மற்றும் உள்ளோர்கள் எல்லாம் திருநிறைச் சோதம் ஆதி சேர்ந்துஇன்பம் துய்த்தார் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 167. | நாகநல் குமரன்கு ஆயு நான்குஆண்டு ஐஞ்நூற்று இரட்டி ஆகுநல் குமார காலம் ஐந்து முப்பத்து இரட்டி போகபூமிஆண்ட பொருவில் எண்நூறு ஆண்டு ஆருநல் தவத்தில் ஆண்டு அறுபத்து நான்குஅது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
|
| |
| 168. | மறுஅறு மனையவர்க்கும் மாதவர் தமக்கும் ஈந்த பெறும்இரு நிலங்கள் எங்கும் பெயர்ந்து நல்கேவலியாய் அறமழை பொழிந்த காலம் அறுபத்து ஆறாண்டு சென்றார் உறுதவர் தேவர் நான்கும் உற்றுஎழு குழாத்தி னோடே. |
|
உரை
|
|
|
|
|
| நூற் பயன்
| |
| 169. | இதன்கதை எழுதி ஓதி இன்புறக் கேட்பவர்க்கும் புதல்வர்நல் பொருளும் பெற்றுப் புரந்தரன் போல வாழ்ந்து கதம்உறு கவலை நீங்கிக் காட்சிநல் அறிவு முன்பாய்ப் பதமிகும் அமர யோகம் பாங்குடன் செல்வர் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
| உலகிற்கு அறவுரை
| |
| 170. | அறம்இன்றிப் பின்னை ஒன்றும் உயிர்க்குஅரண் இல்லைஎன்றும் மறம்இன்றி உயிர்க்கு இடர்செய் மற்றுஒன்றும் இல்லை என்றும் திறம்இது உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி மறம்இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத் தீரே. |
|
உரை
|
|
|
|