பக்கம் : 1002 | | தேவி, வணங்கிய நம்பியை நோக்கி, மிகக் கைதவமும் கற்றுள்ளாய் என, தேவி! நீ ஆராய்ந்து, என்பாற் கைதவம் கண்டனையாயின் அதற்குத் தக என்னை ஒறுக்கக் கடவை என்றான் என்க. | (482) | | நங்கை ஊடல் தீர்ந்து, அப்பார்ப்பனனைப் பற்றி வருகெனல் | 1613. | மன்னனொர் பிழைப்புமிலன் மாதவனை நாடி 1இன்னினி யிவண்கொணர்மி னென்னவுழை யோர்கள் முன்னவன் மறைந்தமுரு கார்பொழிலி னுள்ளே துன்னுபு தொடர்ந்துதுகில் பற்றுபுகொ ணர்ந்தார். | (இ - ள்.) மன்னன் ஓர் பிழைப்பும் இலன் - வேந்தன் குற்றமுடையன் அல்லன் போலும், மாதவனை நாடி - இவணின்றும் ஓடி மறைந்த அந்தப் பார்ப்பன மகனைத் தேடி, இன்னினி - இப்பொழுதே, இவண் கொணர்மின் - இவ்விடத்தே என்முன்னே பற்றிக்கொண்டு வம்மின், என்ன - என்று உழைக்கல மகளிர்க்குக் கூற, உழையோர்கள் - அம்மகளிர்கள், முன் அவன் மறைந்த - முன்னர் அவன்புக்கு ஒளித்த, முருகு ஆர் பொழிலின் உள்ளே - மணமிக்க பூஞ்சோலையினுள்ளே, துன்னுபு - சென்று, தொடர்ந்து - ஆங்கிருந்தும் ஓடும் அவனைப் பின் தொடர்ந்து ஓடி, துகில் பற்றுபு - அவனது ஆடையைப் பற்றி, கொணர்ந்தார் - ஈர்த்துக் கோப் பெருந்தேவியின் முன்னர்க் கொண்டு வந்தனர், (எ - று.) இது தேவி ஊடல் தீர்ந்தமை உணர்த்திற்று. நம்பி குற்றமிலன் போலும், அப்பார்ப்பன மகனைப் பற்றிக் கொணர்மின், என்று நங்கை கூற, உழைக்கல மகளிர் அவனைத் தொடர்ந்து துகில்பற்றித் தேவி திருமுன் கொணர்ந்தார் என்க. | (483) | | சுயம்பிரபை விதூடகனைத் தளை யிட்டுக் கொணர்வீர் எனல் | 1614. | பேதைமை கலந்துபிறழ் கண்ணினொ டொடுங்கு மாதவனை நோக்கிமணி வாய்முறுவ 2றோன்றிக் கோதைகளில் யாத்திவனை 3நீர்கொணர்மி னென்றாள் போதுவிரி தேங்குழலி பூம்பொழி லணைந்தாள். | |
| (பாடம்) 1 இன்னினிய நீர் கொணர்மி. 2 றோற்றி. 3 கொண்டொழிமி, கொண்டெழுமி. | | |
|
|