பக்கம் : 1005 | | நங்கையின் குறிப்பறிந்து, உழைக்கல மகளிர் மாலையாகிய தளையை விட்டனராக, விதூடகனும், அன்போடே தேவி முன்னர் வந்து, கோலங் கொண்டு பாடலோடே ஆடல் செய்தான் என்க. | (487) | | விதூடகன் பாடிக்கொண்டு ஆடுதல் | வேறு | 1618. | ஓடு மேமன மோடுமே கூடு 1மேதணி கோதையாய் காடு சேர்கனி காண்டொறும் ஓடு மேமன மோடுமே. | (இ - ள்.) காடு சேர் கனி காண்டொறும் - இப்பொழிலிடத்தே உள்ள இனிய கனிகளை யான் காணுந்தோறும், ஓடுமே மனம் ஓடுமே - அக்கனிகளிடத்தே தாவித்தாவி என் மனம் ஓடா நிற்கும், தணி கோதையாய் - ஊடல் தணிந்துள்ள மலர் மாலையையுடைய பெருந்தேவியே, கூடுமே - அவ்வாறு கனிகடோறும் ஓடிவீழ்ந்த மனம் மீண்டும் அவற்றைப் பறித்துத் தருதி என என்பால் வந்து கூடா நிற்கும், ஓடுமே மனம் ஓடுமே - நான் அதற்கு முயலுமுன் மீண்டும் அக்கனிகளிடத்து அம்மனம் ஓடாநிற்கும், ஏ எல்லாம் அசைகள், (எ - று.) ஊடல் தணிந்துள்ள நங்காய்! கனிகள் காண்டொறும் என் மனம் அவற்றின் பால் ஓடும், மீண்டும் என்னை வந்து கூடா நிற்கும் என்றான் என்க. | (488) | | | 1619 | ஊறு மேயெயி றூறுமே வீறு சேர்விரி கோதையாய் சேறு சேர்கனி காண்டொறும் ஊறு மேயெயி றூறுமே. | (இ - ள்.) வீறு சேர் விரி கோதையாய் - சிறப்பு மிக்க அலர்ந்த, மாலையையுடைய பெருந்தேவியே, சேறுசேர் கனி காண்டொறும் - இனிய சாறுமிக்க இக்கனிகளை யான் காணும் பொழுதெல்லாம், ஊறுமே எயிறு ஊறுமே - என் வாய்தான் ஊற்றெடுத்துப் பெருகா நிற்கும், ஊறுமே எயிறு ஊறுமே - என்வாய் ஊற்றெடுத்துப் பெருகாநிற்கும், (எ - று.) கோதையாய்! கனி காண்டொறும் என் எயிறு ஊறாநிற்கும் என்றான் என்க. | (489) |
| (பாடம்) 1மோதணி. | | |
|
|