பக்கம் : 1007
 

     முன்னவன் - முதல் வகுப்பினனாகிய பார்ப்பனன் என்க.

     விதூடகன் இவ்வாறு பல பாடலைப் பாடி ஆட, தேவி கனிபல தருவித்து ஊட்ட
முறுவலோடமர்ந்த பின்னர், பாரிசாத காமவல்லி மணவிழாத் தொடங்கினர் என்க.

 (491)
 
 
1622. திருமணி நிழற்றுஞ் செம்பொற் றிலதமா முடியி னானுங்
குருமணிக் கொம்ப ரன்ன கொழுங்கய னெடுங்க ணாளும்
பருமணி பதித்த பைம்பொன் வேதிகைப் பாரி சாதம்
அருமணி 1யரும்பித் தாழ்ந்த வந்தளிர்ப் பொதும்பர் சார்ந்தார்.
 
     (இ - ள்.) திருமணி நிழற்றும் - உயரிய மணிகள் ஒளிரும், செம்பொன் திலதம் மா
முடியினானும் - செவ்விய பொன்னாலியன்ற மாண்பு மிக்க பெரிய முடியை உடைய
திவிட்டநம்பியும், குருமணி கொம்பர் அன்ன - நிறமமைந்த பவளப் பூங்கொம்பு போன்ற,
கொழுங்கயல் நெடுங் கண்ணாளும் - கொழுவியநீண்ட கயல் மீன் போன்ற
கண்ணையுடைய சுயம்பிரபையும், பருமணி பதித்த பைம்பொன் வேதிகை பாரிசாதம் - பரிய
மணிகள் பதித்துப் பசிய பொன்னாலே மேடை அமைக்கப்பட்ட பாரிசாத மரம், அருமணி
அரும்பித் தாழ்ந்த - அரிய மணிகளைப்போல அரும் பெடுத்துத் தழைத்துள்ள, அந்தளிர்
பொதும்பர் - அழகிய தளிர்மிக்க பூம்பொழிலை, சார்ந்தார் - எய்தினார், (எ - று.)

     முடியினானும், நெடுங்கணாளும் பாரிசாதம் அரும்பெடுத்துத் தழைத்துள்ள
பூம்பொழிலை எய்தினர், என்க.

(492)

 

நம்பியின் ஏனைய மனைவிமார்களும் வந்தெய்துதல்

1623. வரிவளை வயிரொ டேங்க வாரணி முரச மார்ப்பக்
கருவளர் கனபொற் 2சோலைக் கறங்கிசை பரந்த போழ்தில்
திருவள ரலங்கள் மார்பிற் செங்கணன் றேவி மார்கள்
உருவளர் கொம்ப ரன்னா ளருளறிந் துழைய ரானார்.
 
     (இ - ள்.) வரிவளை வயிரொடு ஏங்க - வரிகளையுடைய சங்குகள் கொம்புகளோடே
முழங்க, வார் அணி முரசம் ஆர்ப்ப - வாராலே கட்டப்பெற்ற முரசங்கள் ஆரவாரிப்ப,
கருவளர் கனபொற் சோலை - கருமை மிக்க முகில் தவழும் அழகிய பொழிலின்கண்ணே,
கறங்கு இசை பரந்த போழ்தில் - முழங்கும் ஒலி பரவியபொழுது, திருவளர் அலங்கன்
மார்பிற் செங்கணான் - திருமகள் வதியும் மாலையணிந்த மார்பினையுடை திவிட்ட
னுடைய, தேவிமார்கள் - ஏனைய மனைவிமார், உருவளர் கொம்பர் அன்னாள் -
எழில்மிக்க பூங்கொம்பை ஒத்த சுயம்பிரபையின், அருள் அறிந்து - திருவுள்ளக்
குறிப்பாகிய அருளை அறிந்து, உழையர் ஆனார் - ஆங்கு வந்து அவர்களின் பக்கத்தே
எய்தினார், (எ - று.)
 

     (பாடம்) 1 அரும்பிற் றாழ்ந்த. 2சாலைக் கற்பகம்.