பக்கம் : 1013 | | | 1632. | அம்பொன்செய் கலாப வல்கு லந்தழை புனைந்த வஞ்சிக் கொம்பஞ்சு மருங்கு னோவக் குவிமுலை முறிகொண் டப்பிச் 1செம்பொன்செய் சுருளை மின்னச் செவிமிசைத் தளிர்கள் சேர்த்திக் கம்பஞ்செய் களிற்றி னான்றன் கண்களைக் களிப்பித் திட்டார். | (இ - ள்.) அம்பொன்செய் கலாப அல்குல் - அழகிய பொன்னாலே இயற்றப்பட்ட காஞ்சியை அணிந்த அல்குலிடத்தே, அந்தழை புனைந்த - அழகிய தழையை உடுத்தப்பட்ட, வஞ்சிக்கொம்பு அஞ்சு - வஞ்சிக்கொடியும் யாம் இவளிடை யொவ்வோம் என்று அஞ்சுதற்கேதுவாகிய, மருங்குல் நோவ - இடை வருந்தும்படி, குவிமுலை - பருத்த தம்முலைகளின் மிசை, முறிகொண்டு அப்பி - இளந்தளிர்களை அப்பி, செம்பொன் செய் சுருளை மின்ன - செவ்விய பொன்னாலாகிய குதம்பை மிளிர, செவிமிசை - காதுகளின்மேல், தளிர்கள் சேர்த்தி - இளந்தளிர்களைச் செருகி, கம்பம் செய்களிற்றினான்றன் - தூணிடத்தே யாக்கப்பட்ட அரசுவாவினையுடைய திவிட்ட நம்பியின், கண்களைக் களிப்பித்திட்டார் - கட்பொறியை மிகமகிழும் படி செய்தனர், (எ - று.) கலாபமும் தழையும் புனைந்த வஞ்சிக்கொடி போலும் நுண்ணிடை நோவும்படி குவிந்த முலையிடத்தே தளிரப்பி மின்னச் சேர்த்திக் களிற்றினான் கண்களைத் தேவியர் களிப்பித்திட்டார் என்க. | (502) | | குராவம்பாவை கொண்டு பாராட்டல் | 1633. | விரவம்பூந் தளிரும் போது 2மிடைந்தன மிலைச்சு வாரும் அரவம்பூஞ் சிலம்பு செய்ய வந்தளிர் முறிகொய் வாரு மரவம்பூங் கவரி யேந்தி மணிவண்டு மருங்கு சேர்த்திக் குரவம்பூம் பாவை கொண்டு 3குழவியோ லுறுத்து வாரும். | |
| (பாடம்) 1 செப்பஞ்செய் சுருளை மின்னுச். 2 மிடைந்தவர். 3 குழவிபோலுறுத்துவாரும். | | |
|
|