பக்கம் : 1017 | | செஞ்சொற் செய்யுளின்பம் துய்த்தல் | 1638. | மாம்பொழின் மருங்கு சூழ்ந்த மணிச்சிலா தலத்து மேலாற் காம்பழி பணைமென் றோண்மேற் கருங்குழ 1றுவண்டு வீழப் பூம்பொழில் விளங்கத் தோன்றும் பொன்னிதழ் மறிந்து நோக்கித் தேம்பொழி செய்யு 2ளின்பஞ் செவிமுதற் சேர்த்து வாரும். | (இ - ள்.) மாம்பொழில் மருங்கு சூழ்ந்த - தேமாவின் பொழில் பக்கங்களிலே சூழப்பட்ட, மணிச்சிலா தலத்துமேல் ஆல் - மணி மேடையின்மீது, காம்பு அழி பணைமென் தோள்மேல் - மூங்கிலை அழகாலே தோற்கச்செய்த பருத்த தம் தோள்கள் மேலே, கருங்குழல் துவண்டு வீழ - கரிய கூந்தல் நெகிழ்ந்து வீழாநிற்ப, பூம்பொழில் விளங்கத் தோன்றும் பொன்இதழ் - அப்பூம் பொழில் திகழுமாறு தோன்றாநின்ற பொன்னிற மலரின் காட்சியை, மறிந்து நோக்கி - மீளமீள நோக்கியவராய், தேம்பொழி செய்யுள் இன்பம் - இன்பத்தைப் பொழியாநின்ற செய்யுளை ஓதி அவ்வின்பத்தை, செவிமுதல் சேர்த்துவாரும் - தோழியர் செவிகளிலே சேர்க்கின்றவரும், (எ - று.) பொழிலிடத்தேயுள்ள மணி மேடைமீதமர்ந்து, தம் பணைத்தோள் மேலே கருங்குழல் துவண்டுவீழ, அப்பொழிலின் மலர்க் காட்சியைக் கூர்ந்து நோக்கி, அக்காட்சியினைச் செஞ்சொற் கவிகளாக வடித்துத் தம் தோழியர் செவியிடத்தே பெய்வாரும் என்க. இச்செய்யுள் நல்லிசைப்புலவரின் இயல்பினை நன்கு காட்டுதல் காண்க. | (508) | | ஊசலாடல் | 1639. | கோதையுங் குழைவின் பட்டின் கொய்சகத் தலையுந் தாழ மாதர்வண் டொருங்கு பேர மழையிடை நுடங்கு மின்போல் போதலர் பொதும்பிற் றாழ்ந்த பொன்னெழி லூச றன்மேல் ஓதநீர் வண்ணற் பாடி 3நூழிலூ ழியங்கு வாரும். | |
| (பாடம்) 1 திவண்டு. 2 ளின்றுஞ். 3 யூழிநூழி. | | |
|
|