பக்கம் : 102
 

     எல்லாவகைச் சிறப்புக்களோடும் விண்ணுலகத்தில் இன்பம் நுகரும் வானகத்தவர்,
மண்ணகத்திற்கிழிந்து சந்தனத்தழையின் படுக்கைமேல் தங்கி மெய்யுறு
புணர்ச்சியின்பந்துய்க்கும் மண்ணகத்தவரைப் போன்று தாமும் இன்பந்துய்க்கக் கருதி
அங்குவந்து தங்குவர் என்பதாம். தேவர்கட்கு இத்தகைய நுகர்ச்சி யின்மையின் அதனை
அவாவினர் என்க. ஊனகத்தவர் - ஊனுடல் படைத்த மனிதர். வானவர் ஊனிலா
வுடம்பினர் என்பது இதனாற் போதரும்.
 

( 7 )

பாறையில் மகரந்தப்பொடி

126. மஞ்சு தோய்வரை மைந்தரொ டாடிய
1அஞ்சி லோதிய 2ராரள கப்பொடி
பஞ்ச ராகம்ப தித்தப ளிக்கறைத்
துஞ்சு பாறைகண் மேற்று 3தை வுற்றதே.
 

     (இ - ள்.) மஞ்சுதோய்வரை - முகில்கள் படிந்த அம்மலையின் கண்; மைந்தரொடு
ஆடிய - ஆடவர்களொடு இன்பவிளையாடல் புரிந்த; அஞ்சில் ஓதியர் ஆர் அளகப்பொடி
- அழகிய சிலவாகிய கூந்தலையுடைய மகளிர் அக்கூந்தலில் அப்பிய அரிய நறுமணச்
சுண்ணம்; பஞ்சு அராகம் பதித்த பளிக்கறை - அவர்கள் நடந்தமையாலே அவர்களுடைய
அடியிற் பூசப்பட்ட செம்பஞ்சுக்குழம்பின் நிறம் பொறிக்கப்பட்ட பளிங்குப்பாறையாகிய,
துஞ்சு பாறைகள்மேல் துதைவுற்றது - அவர்கள் துயில்தற்கிடமான அப்பாறைகளின்மேற்
படிந்தது. (எ - று.)

     ஓதியர் அளகப்பொடி அவரியங்கியபொழுது அவருடைய பஞ்சராகம்
பதிக்கப்பட்டிருந்த பளிக்கறையாகிய அவர்கள் துயின்ற பாறைகளின் மேற் படிந்தது என்க.

     ஆர் - அரிய. அளகப்பொடி - கூந்தலிலப்பும் நறுமணப்பொடி. இதனை, “அளகத்
தப்பிய செம்பொற் சுண்ணஞ் சிதர்ந்த திருநுதல்“ எனவரும் பெருங்கதையானும்
(33 : 19 - 20) உணர்க. பஞ்சு - செம்பஞ்சுக் குழம்பு. அராகம் - நிறம். பளிக்கறையாகிய
பாறை; துஞ்சுபாறை, எனத் தனித்தனி கூட்டுக. துதைதல் - படிதல்.
 

 ( 8 )

பாறையில் அடிக்குறி

127. 4மாத ரார்நடை கற்கிய வானிழிந்
தூது வண்டுண வூழடி யூன்றிய

 


     (பாடம்) 1. அஞ்சொல். 2. நாளளகப்பொடி. 3. றுகைவுற்றதே. 4. மாதராநடை.