பக்கம் : 1021 | | பூம்பொழிலின் நன்றியறிதற் பண்பு | 1644. | மணங்கமழும் பூமேனி வாசங் கமழ வணங்கிவருஞ் சோலை யலர்நாற்ற மெய்திக் கணங்குழையீர் யாமுமக்குக் கைம்மா றிலேமென் றிணங்கிணரும் போது மெதிரேந்தித் 1தாழ்ந்த. | (இ - ள்.) அணங்கு இவரும் சோலை - அழகு விரியும் அப் பூம்பொழில், கணங்குழையீர் - கனவிய குழையினையுடைய தேவியீரே, மணங்கமழும் பூமேனி வாசம் கமழ - நும்முடைய தெய்வ மணங்கமழும் அழகிய திருமேனியின் மணம் கமழ்தலாலே, யாம் - யாங்கள், அலர் நாற்றம் எய்தி - எம்மலரிடத்தே மணம் உண்டாகப்பெற்று, உமக்கு - எமக்கு மணமீந்த நுங்கட்கு, கைமாறு இலேம் - மாற்றுதவி செய்தற்கு இயலாத வராயினேம், என்று - என்று கூறி, இணங்கு இணரும் போதும் - பொருந்திய கொத்துக்களையும் மலர்களையும், எதிர் ஏந்தி - அத்தேவியர்க்கு அடியுறையாய் எதிரே ஏந்தி நின்று, தாழ்ந்த-அவர்களை வணங்கின, (எ - று.) அப் பூம்பொழில் தழைந்து தாழ்ந்து கிடத்தல், கனங்குழையீர்! நும்மேனியின் மணம் பொருந்துதலாலே எம்மலர்கள் மிக்க நறுமணமுடைய வாயின; இவ்வுதவிக்கு யாங்கள் கைம்மாறு கண்டிலேம், என்று இணரும் போதும் காணிக்கையாக ஏந்தி அவரடிகளிலே வணங்குதல் போற் றோன்றிற் றென்க. | (514) | | இதுவுமது | 1645. | அந்தா ரசோக மசோக மவர்க் கீந்த செந்தார்த் திலகந் திலகமாய்ச் சேர்ந்தன 2வந்தார்க்கு மாவாது மென்பனபோன் மாதழைந்த கொந்தார்பூஞ் சோலைக் குலகறிவோ கூடின்றே. | (இ - ள்.) அம் தார் அசோகம் - அழகிய பூங்கொத்துக்களை உடைய அசோகமரங்கள், அவர்க்கு - அத்தேவியர்க்கு, அசோகம் ஈந்த - சோகமின்மையை அளித்தன, செந்தார்த்திலகம் - செவ்விய ஒழுங்குபட்ட திலகமரம், திலகமாய்ச் சேர்ந்தன - தம் பூந்தாதுக்களாலே அவர் நெற்றியில் பொட்டாயின, மா - தேமா மரங்கள், ஆ - ஆ ஆ, வந்தார்க்கும் - நம்பால் எய்திய தேவியர்க்கும், ஆதும் - யாமும் உதவுவேம், என்பனபோல் - என்று கருதியன போன்று, தழைந்த - அவர்க்கு நீழலாகித் தழைத்து நின்றன, கொந்து ஆர்பூஞ்சோலைக்கு - கொத்துக்களையுடைய அப்பூம் பொழிலுக்கும் உலகு அறிவோ கூடின்றே - சான்றோர் தம் உணர்ச்சியும் பொருந்துவ தாயிற்று, ஏ : அசை, (எ - று.) | |
| (பாடம்) 1 தாழ்ந்தார். 2 வந்தார்க்கு மாவது, வந்தார்க்கு மாவது மாவது மென்பனபோல். | | |
|
|