பக்கம் : 1022 | | ஆதும் - உதவியாதும் உலகம் - ஈண்டுச் சான்றோரைக் குறித்தது; உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்பதோத்தாகலின். கூடின்று - கூடிற்று. திலகம் - ஒருவகை மரம்; ‘திலகமும் வகுளமும்‘ (மணிமேகலை). வந்தார்க்கும் என்புழி உம்மை இசைநிறை. அசோகம் என்னும் வடசொல் சோகமின்மை என்னும் பொருட்டு. தம் பெயர்க் கேற்பவே, அசோகங்கள் தம் நிழலில் அடிக்களைத்து வந்த தேவியரின் களைப்பொழித்த என்பார் அசோகம் அசோகம் ஈந்த என்றார். திலகம் - ஒரு மரம் நெற்றிப் பொட்டிற்கும் திலகம் என்று பெயராகலின் திலகமரம் தம்பூந்துகளாலே அம்மகளிர்க்குத் திலகமிட்டன என்பார் திலகம் திலகமாய்ச் சேர்ந்தன என்றார். இவற்றைக் கண்ட மாமரம் தம்மாலாய உதவி செய்வேம் என்று தம் தழையாலே அவர்க்கு நிழல் தந்தன. மா - பெருமை என்னும் பொருட்டாகலின் தன்பால் வந்தார்க்குதவி செய்தல் பெருமையாகலின் மாவும் தம் பெயர்க்கேற்ப மாசெய்தன என்க. இவ்வாற்றால் பிறர்க்குதவுதல் உயர்ந்தோர் அறிவொடு பொருந்திய செயலாகலின், இப் பொழிலிற்கும் உலகறிவு மிக்குளது போலும் என்றார் என்க. | (515) | | செய்குன்றம் | 1646. | வெள்ளித் திரண்மேற் பசும்பொன் மடற்பொதிந் தள்ளுறு தேங்கனி 1ய தாய்பொற் றிரளசைந்து புள்ளுறு பொன்வாழைக் கானம் புடையணிந்த தெள்ளு மணியருவிச் செய்குன்றஞ் சேர்ந்தார். | (இ - ள்.) வெள்ளி வெண் திரள்மேல் - வெள்ளியாற் றிரட்டிய தண்டின் மேலே, பசும்பொன் மடல் பொதிந்து - பசிய பொன்னாலியன்ற மடல்களால் மூடி, அள் உறு தேங்கனி அதாய் - அளிகின்ற இனிய கனியாக, அம்பொன் திரள் அசைந்து - அழகிய பொன்னைத் திரட்டியாத்து, புள் உறு - பொன்னாலாய பறவைகளையும் அமைத்த, பொன் வாழைக் கானம் - பொன் வாழைப் பூம்பொழிலை, புடை அணிந்த - மருங்கிலே உடையனவாய், தெள்ளும் மணி அருவி - தெளிந்த நீல மணிபோன்ற நிறமுடைய அருவிகள் விழுகின்ற, செய் குன்றம் சேர்ந்தார் - செய்குன்றங்களை எய்தினர், (எ - று.) அள்ளுறுதல் - அளிதல், அதாவது கனிதல். செய்குன்றம் - பொழிலினுள் மலையுறுப்புக்கள் அமையச் சிற்பிகளால் இயற்றப்படுகின்ற செயற்கை மலை. புட்கள் பொன்வாழைக் கனியைக் கனியெனக் கருதி வருதற்குக் காரணமான எனினுமாம். | |
| (பாடம்) 1 யதாய்ப் பொற். | | |
|
|