பக்கம் : 1025 | | அசதியாடுதல் - பரிகசித்தல். அச் செய்குன்றம் அம்மகளிர் மழலையைத் தானும் மிழற்றி அவரை அசதியாடிற்று என்க. | (520) | | | 1651. | மருவி மழைதவழு மையோங்க சாரல் அருவி கொழித்த வருமணிகள் வாரித் தெருவு படத்திருத்திச் சீலம் புனைவார் உருவ நகரிழைப்பா ரொண்ணுதலா ரானார். | (இ - ள்.) மழை மருவி தவழும் மை ஓங்கு சாரல் அருவி கொழித்த அருமணிகள் வாரி - முகில்கள் வந்து தவழ்கின்ற இருள்மிக்க தாழ்வரையிடத்தே ஒழுகும் அருவிகள் ஒதுக்கிய பெறற்கரும் மணிகளை அள்ளி, ஒண்நுதலார் - ஒள்ளிய நெற்றியையுடைய அம்மகளிர்கள், தெருவுபடத்திருத்தி - தெருக்களைப்போலச் சீர்திருத்தி, சீலம் புனைவார் - ஒழுங்குபடுத்துவாராய், உருவ நகர் - அழகிய விளையாட்டு வீடுகளை, இழைப்பார் ஆனார் - இயற்றுவாராய் விளையாட்டயர்வாராயினர், (எ - று.) ஒண்ணுதலார் அருவி கொழித்த மணிகளை வாரி வீடியற்றி விளையாட்டயர்ந்தார் என்க. | (521) | | | 1652. | மரகத வீர்ங்கதிரை வார்புற் றளிரென் றுரைதரு காரிகையா ரூன்றி மிதித்துத் திரைதவழச் சீறடிக ணோவ நடந்து விரைதரு பூம்படைமேன் மெல்ல வசைந்தார். | (இ - ள்.) மரகத ஈர்ங்கதிரை - மரகதமணியிடத்தே தோன்றாநின்ற ஈர்ந்தாற்போன்ற சுடரை, வார்புல் தளிர் என்று - நீண்ட பசும்புல்லின் இளந்தளிர் என்று, உரைதரு - கருதிக்கூறாநின்ற, காரிகையார் - அழகை யுடைய அம்மகளிர்கள், ஊன்றி மிதித்து - தம் மடிகளை அக்கதிரிடத்தே ஊன்றி மிதித்தமையால், சீறடிகள் நோவ - அம்மரகதமணியாலே உறுத்தப் பட்டுத் தம் சிறிய அடிகள் வருந்த, திரை தவழ நடந்து - அச்சுடர் திரைந்து தம் அடியிலே தவழுமாறு மெல்ல நடந்து போய், விரைதரு பூம்படைமேல் - மணங்கமழும் விடுபூவாலாய படுக்கையின் மேலே, மெல்ல - இனிதாக, அசைந்தார் - வதிவாராயினர், (எ - று.) | |
| | | |
|
|