| பாத ராகம்ப தித்தப ளிக்கறை 1காத லார்தம கண்கவர் கின்றவே. |
(இ - ள்.) மாதரார் நடை கற்கிய - விஞ்சை மாதர்கள் நடை கற்கும் பொருட்டு; வான்இழிந்து - தாம் இயல்பாக இயங்கும் வானத்தினின்று மிறங்கி; ஊதுவண்டு உண - மலரிற் சென்று ஊதுகின்ற வண்டுகள் தம் அடியை மலரென்று கருதித்தேனுண்ண வந்து மொய்க்குமாறு; ஊழ்அடி ஊன்றிய - முறையே தம் அடியை வைத்ததனால்; பாதராகம் பதித்த பளிக்கு அறை - அடியின் செம்பஞ்சுக் குழம்பின் நிறம் பதியப் பெற்ற பளிக்குப் பாறை; காதலார் தங் கண் கவர்கின்றது - அம்மங்கையர்பால் இன்ப நோக்கையுடைய ஆடவர்களின் கண்களைத் தன் வழிப்படுத்துகின்றது. (எ-று.) வானத்தே இயங்கும் இயல்புடைய விஞ்சைமாதர் நிலத்திலும் நடத்தற்குப் பயிலவிரும்பிப் பளிங்குப் பாறைகளில் அடிவைத்து நடக்கின்றனர்; அப்போது அவர்கள் கால்களில் ஊட்டப்பட்டுள்ள செம்பஞ்சுக் குழம்புகள் கீழே பதியலாயின. அவ்வாறு பதியப்பெற்றுள்ள அந்தப் பளிங்குப்பாறை அவர்களுடைய கொழுநர்களின் உள்ளங்களைக் கவர்கின்றது என்பதாம். அவர்களுடைய கால்வைத்த இடங்களிற் பதிந்த செம்பஞ்சுக் குழம்புகளை வண்டுகள் தாமரை மலர்களென்று கருதி ஊதுகின்றன என்க. பளிக்குப்பாறை கண்கவர்கின்றது என்றாராயினும் அதன்கண் பதிந்த அடிச்சுவடுகள் கண் கவர்ந்தன என்பது கருத்தாகக் கொள்க. கற்கிய : செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம். |
( 9 ) |
அருவிநீரில் மல்லிகை மணம் |
128. | ஆகு 2பொன்னறை மேலரு வித்திரள் நாக கன்னிய ராடலின் ஞால்கைம்மா வேக மும்மத வெள்ளம ளாவிய போக மல்லிகை நாறும்பு னல்களே. |
(இ - ள்.) பொன் ஆகு அறைமேல் - பொன்னாகிய பாறைமேல் வீழாநின்ற; அருவித்திரள் - அருவித்திரளில்; நாக கன்னியர் ஆடலில் - நாகருலகத்து மங்கையர் நீராடுதலின்; ஞால் கைம்மா வேகம் மும்மதம் வெள்ளம் அளாவிய புனல்கள் - தொங்குகின்ற துதிக்கையையுடைய |
|
(பாடம்) 1. காதலாரன. 2. பூக்களாவபொன். |