பக்கம் : 1030 | | மகளிர் பாட்டு | 1660. | கோடி சிலையெடுத்தான் கோளரிமா வாய்போழ்ந்தான் ஆடியல் யானை யயக்கிரீவ 1னைமடித்தான் வீடின் மணியருவி வெண்மலையுங் கைப்பிடித்தான் வாடலில் பூங்கண்ணி மாமேக வண்ணனே. | இதுமுதல் 3 செய்யுள்கள் ஒரு பொருள் மேல் அடுக்கிவந்தன. (இ - ள்.) கோடி சிலை எடுத்தான் - கோடிக்குன்றத்தை அகழ்ந்து ஏந்தினான், கோள் அரிமா வாய்போழ்ந்தான் - கொலைத்தொழிலையுடைய சிங்கத்தின் வாயைப் பிளந்து கொன்றான், ஆடியல்யானை அயக்கிரீவனை மடித்தான் - அசையும் இயல்பிற்றாய யானை போல்வனாகிய அச்சுவ கண்டனைக் கொன்றான், வீடுஇல் மணியருவி வெண்மலையும் கைப்பிடித்தான் - இடையறவுபடாத அழகிய அருவியை உடைய வெள்ளி மலையையும் கைக்கொண்டான், (அவன் யாரெனில்) வாடலில் பூங்கண்ணி மாமேக வண்ணனே - வாடுதலில்லாத கற்பகப் பூமாலையை முடிக்கண் அணிந்த கரிய முகில்போலும் வண்ணமுடைய நம் தலைவனாகிய திவிட்ட நம்பியே ஆவன், (எ - று.) கோடிக்குன்றம் ஏந்தினான் கோளரி வாய் பிளந்தான்; அயக்கிரீவனைக் கொன்றான்; வெண்மலையும் கைப்பிடித்தான்; அவன் யாரெனில் மாமேக வண்ணன் என்றார் என்க. | (530) | | 1661. | வலம்ரிவாய் வைத்தான் வார்சிலைகைக் கொண்டான் * சலம்புரி சண்டை தலைபனிப்புக் கண்டான் பொலம்புரி 2தாமரையாள் பொன்னாகந் தோய்ந்தான் கலம்புரி வண்டடக்கைக் கார்மேக வண்ணனே. | (இ - ள்.) வலம்புரி வாய் வைத்தான் - வலம்புரியாகிய பாஞ்ச சந்நியத்தைத் திருவாய்மலரிலே வைத்து முழக்கினான், வார்சிலை கைக்கொண்டான் - நெடிய சார்ங்கமென்னும் வில்லைக் கையிலே பற்றினான், அவ்வளவானே, சலம்புரி சண்டை - பகைவருடைய வஞ்சகமிக்க போர்த் தொழிலிலே, தலை பனிப்புக் கண்டான் - அவர் தம் தலைகள் அச்சத்தாலே நடுங்கியதனைப் பார்த்தான், பொலம்புரி தாமரையான் - பொற்றாமரை மலரிலே வீற்றிருப்பவளாகிய திருமகளின், பொன் ஆகம் தோய்ந்தான் - அழகியதிருமேனியைத் தழீஇயினான், (அவன் யார் எனில்) கலம்புரி வள்தடக்கை - அருங்கலங்களையுடைய வள்ளன்மைமிக்க பெரிய கையினையுடைய, கார்மேக வண்ணனே - கரிய முகில் நிறமுடையோனாகிய நம் தலைவன் திவிட்ட நம்பியே ஆவன், (எ - று.) | |
| (பாடம்) 1 னையடித்தான், னேயிடித்தான். 2 தாமரையான். * இப்பாடல் சில பிரதிகளில் இல்லை. | | |
|
|