பக்கம் : 1031 | | வலம்புரி முழக்கினான்; சிலைகைக் கொண்டான், அத்துணையானே சண்டை தலைபனிப்புக் கண்டான், பொன்னகந் தோய்ந்தான்; அவன் யாரெனில், கார்மேகவண்ணன் என்றாள் என்க. | (531) | | 1662. | செம்பொன்செய் யாழியான் சேதாம்ப னீன்முடியான் அம்பொ னிதியு மருங்கலமுங் கைப்படுத்தான் நம்பு மணிமேனி நங்கை நலநுகர்ந்தான் கம்பஞ்செய் யானைக் கருமேக வண்ணனே. | (இ - ள்.) செம்பொன்செய் ஆழியான் - செவ்விய பொன்னாலியன்ற ஆழிப்படையை உடையோன், சேதாம்பல் நீள்முடியான் - செங்கழுநீர்ப் பிணையல் சூடப்பெற்ற நீண்ட முடியையுடையோன், அம்பொன் நிதியும் - அழகிய பொன் மயமான சங்கநிதி பதுமநிதிகளையும், துருங்கலமும் - சங்கு முதலிய அருங்கலங்களையும், கைப்படுத்தான் - கைக்கொண்டருளினான், நம்புமணி மேனி - சிறந்த பவளம் போன்ற மேனியையுடைய, நங்கை - சுயம்பிரபையின், நலம் நுகர்ந்தான் - பெண்மைநலத்தை நுகர்ந்தான், (அவன் யார் எனில்) கம்பம் செய்யானை - பகவரை நடுக்கங்காணும் யானைபோல் வானாகிய, கருமேக வண்ணனே - நம் தலைவனாகிய கரிய முகில் நிறமுடைய திவிட்ட நம்பியே ஆவன், (எ - று.) ஆழியான், முடியான், நிதியும் அருங்கலமும், கைப்படுத்தான், நங்கை நலனுகர்ந்தான், அவன் யாரெனில்; கருமேகவண்ணன் என்றாள், என்க. | (532) | | நம்பி ஒரு தெய்வத்தை யானை உருக்கொண்டு அம்மகளிர்பாற் செல்ல விடுதல். | வேறு | 1663. | மடந்தையர் பாட வாங்கு மாபெருந் தேவி நிற்ப அடைந்தவ ரோடு மாடு மார்வநீர் வெள்ளம் வாங்க 1உடைந்தழி மனத்தன் வேந்த னுழையதோர் தெய்வங் கூவிப் படந்தவா 2முகத்து வேழ மாகெனப் பணித்து விட்டான். | |
| (பாடம்) 1 உடைந்துழி. 2 முகத் தொர் வேழ. | | |
|
|