பக்கம் : 1032
 

     (இ - ள்.) மடந்தையர் பாட - இவ்வாறு மகளிர்கள் பாடாநிற்ப, ஆங்கு -
அவ்விடத்தே, மா பெருந்தேவி நிற்ப - கோப்பெருந்தேவி நிற்பாளாக, வேந்தன் -
திவிட்டநம்பி, உடைந்து அழி மனத்தன் - காமவேட்கையாலே உடைந்து அழிகின்ற
மனத்தை உடையனாய், அவரோடும் அடைந்து ஆடும் ஆர்வம் நீர் வெள்ளம் வாங்க -
அம்மகளிரோடே கலந்து விளையாடற்கு எழுந்த விருப்பமாகிய நீர் வெள்ளம் தன்னை
வலித்தீர்ப்ப, உழையதோர் தெய்வம் கூவி - தன் புறந்திரியும் ஒரு தெய்வத்தை
மறைமொழியாலே அழைத்து, படம் தவாமுகத்து வேழம் ஆகு என - முகபாடம் அணிதல்
தவிராத முகத்தையுடைய தொரு யானையாகி இம்மகளிர்முன் செல்க என்று,
பணித்துவிட்டான் - ஏவி விட்டான், (எ - று.)

     இவ்வாறு தேவியர் பாட மறைநின்று கேட்ட நம்பி, அவரோடும் ஆடும் ஆர்வம்
தன்னை வலிந்து இழக்க, மனமழிந்து ஒரு தெய்வங்கூவி, ஆனை ஆகெனப் பணித்தான்,
என்க.

(533)
 
தெய்வம் யானையாகி வருதல்
1664. மைவரை யொன்று 1கோல
     மணிதயங் கருவி தாழ
ஐவனங் கலந்த சார
     லருகுவந் தணைவ தேபோல்
தெய்வமோர் வேழ மாகிச்
     செய்கடாந் திரண்டு வீழ
மைவரு நெடுங்க ணல்லார்
     நடுங்கவந் தணைந்த தன்றே.
 
     (இ - ள்.) மைவரை ஒன்று - கரியதொரு மலை, கோலமணி தயங்கு அருவி தாழ -
அழகிய மணிபோலே விளங்கி அருவிகள் ஒழுகாநிற்ப, ஐவனம் கலந்த சாரல் அருகு வந்து
அணைவதே போல் - மலைநெற்கள் பரவிய மலைச்சாரலின் மருங்கே வந்து
எய்தினாற்போன்று, தெய்வம் ஓர் வேழமாகி - அத்தெய்வம் ஒரு யானை உருக்கொண்டு,
செய் கடாம் திரண்டு வீழ - ஒழுக்கிய மதநீர் மிக்கு ஒழுக, மைவரு நெடுங்கண் நல்லார் -
மையூட்டப்பெற்ற நெடிய கண்களையுடைய அம்மகளிர்கள், நடுங்க வந்து அணைந்தது -
அச்சத்தாலே நடுங்குமாறு அவண்வந்து எய்திற்று, அன்று, ஏ : அசைகள், (எ - று.)

     ஒருமலை மற்றொரு மலைச்சாரலிலே வருமாப்போலே, அத்தெய்யம் ஒரு யானையாகி,
மதந்திரண்டுவீழ அம்மலைச் சாரலிலே நல்லார் நடுங்க வந்தணைந்த தென்க.,

 (534)

 

யானையைக் கண்டு மகளிர் அஞ்சுதல்

1665. கயில்கலந் 2திருண்டு தாழ்ந்த
     கருங்குழன் மருங்கு சோர
வெயில்கலந் திலங்குஞ் செம்பொன்
     மிடைமணிக் குழைவில்
அயில்கலந் திலங்கு வேற்க
     ணையரி பிறழ வோடி வீச
மயில்கலந் திரிந்த போல
     மடந்தையர் நடுங்கி னாரே.
 
 

     (பாடம்) 1 போல. 2 திரண்ட.