பக்கம் : 1034
 

     “வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
     மீண்டு முயலப் படும்“

     (திருக். செய். 265)என்னும் குறட்கருத்தை ஈண்டுக் காண்க.

     கோப் பெருந்தேவி நடுங்கி நோக்கி அடிகள் யாண்டையார் என்ன,
நம்பி ஈண்டையேன் என்னை பட்டதென்று அணுகினான் என்க.

     யாண்டையார் - எவ்விடத்தார், ஈண்டையேன் - இவ்விடத்தேன்.

(536)

 

இதுவுமது

1667. மலைமுக மதநல் யானை
     மற்றது மறித்து நங்கை
முலைமுக நெருங்கப் புல்லி
     முருகுவேய் கோதை சூட்டிக்
கலைமுகந் திருத்திக் காதிற்
     கனபொன்செய் சுருளை நீவி
இலைமுகங் கலந்த செம்பொற்
     கலங்களை யிலங்க வைத்தான்.
 
     (இ - ள்.) மலைமுக மத நல்யானை மற்று அது மறித்து - மலைபோன்றதும்,
முகத்திலே மதம்பொழிவதும் நல்லிலக்கணம் அமைந்தது மாகிய அவ்வியானையைத்
தடுத்து, நங்கை - சுயம்பிரபையின், முலைமுகம் நெருங்கப் புல்லி - முலைகளின் முகடுகள்
தன் மார்பிலே அழுந்தும்படி தழீஇ, முருகுவேய் கோதை சூட்டி - அச்சத்தாலே
குலைந்துள்ள மணம் பொருந்திய மாலையைக் குழலிலே சூட்டி, கலைமுகம் திருத்தி -
மேகலை அணியினைச் செவ்விதிற் றிருத்தி, காதில் - செவியினிடத்தே, கனபொன்
செய்சுருளை நீவி - கனவிய பொன்னாலாய குதம்பையைத் தடவி, இலைமுகம் கலந்த
செம்பொன் கலங்களை இலங்க வைத்தான் - இலைவடிவிற்றாய் இயற்றிய
மூட்டுவாயையுடைய செவ்விய பொன்னாலாய ஏனைய அணிகலன்களையும் திருத்தித்
திகழும்படி செய்தான், (எ - று.)

     அணுகிய நம்பி முலைமுக நெருங்கப் புல்லிச் சூட்டித் திருத்தி நீவி இலங்க
வைத்தான் என்க.

(537)

 

ஞாயிறு உச்சியை அடைதல்

1668. மங்கையர் தம்மை யெல்லா
     மணிவண்ணன் மருட்டி மற்றிக்
கொங்கவிழ் குளிர்கொள் சோலைக்
     1குன்றினின் றிழிந்த போது
 

     (பாடம்) 1 குன்றினினிழிந்த போழ்தின்.