பக்கம் : 1035 | | | வெங்கதிர் விரிந்த வெய்யோன் விசும்பிடை 1வெதும்பி வேவச் செங்கதிர்க் கூடங் குத்திச் 2செந்நடு வாக நின்றான். | (இ - ள்.) மங்கையர் தம்மையெல்லாம் - தன் தேவியராய அம்மகளிரையெல்லாம், மணிவண்ணன் - திவிட்டன், மருட்டி - இவ்வாறு அச்சுறுத்தி, மற்றுஇக் கொங்கு அவிழ் குளிர்கொள் சோலை - இந்த மணங்கமழும் குளிர்ந்த சோலைசூழ்ந்த, குன்றினின்று இழிந்தபோது - செய்குன்றிலிருந்து இயங்கியபொழுது, வெங்கதிர் விரிந்த வெய்யோன் - வெவ்விய கதிரை விரித்த கதிரவன், விசும்பு இடைவெதும்பி வேவ - விண் தன் இடமெல்லாம் வெப்பமுற்று வேகும்படி, செங்கதிர்க்கூடம் குத்தி - தனது செவ்விய கதிராலே கூடாரம் அடித்து, செந்நடுவாக நின்றான் - அவ்விசும்பின் செவ்விதாய உச்சியிலே நிற்பானாயினன், (எ - று) செந்நடு - சரியான நடுவிடம். நம்பி யானையாலே தேவியரை மருட்டிக் குன்றினின் றிழிந்தபோது ஞாயிறு உச்சியிலே நின்றான் என்க. கூடம் - சம்மட்டி. | (538) | | நீர் விளையாட்டு | 1669. | அணங்கனார் நுதலின் மேலி லரும்பிய வாரத் தெண்ணீர் மணங்கம ழலங்கன் மார்பன் மனத்தினை வாங்க மற்றக் கணங்குழை மடந்தை மாரைக் கடிபுன லாடல் காண்பான் 3வணங்கொள்பூந் துணர்நீள் சோலை மண்டுநீர் வாவி 4சார்ந்தான். | இதுமுதல், 17 செய்யுள்கள் நீர்விளையாட்டின் மேலவாய ஒரு தொடர். (இ - ள்.) அணங்கு அனார் - தெய்வமகளிரை ஒத்த அம்மடந்தை யரின், நுதலின் மேலில் - நெற்றிமிசை, அரும்பிய - முகிழ்த்த, ஆரத்தெண்ணீர் - முத்துப்போன்ற தெளிந்த வியர்வைத்துளிகள், மணங்கமழ் அலங்கல் மார்பன் - மணங்கமழ்கின்ற மாலையணிந்த மார்பையுடைய திவிட்டநம்பியின், மனத்தினை வாங்க - உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து கொள்ள, கணங்குழை மடந்தைமாரை - வட்ட வடிவினவாகிய தோடுகளை யுடைய தன் தேவிமாரை, கடிபுனல் ஆடல் காண்பான் - மணமிக்க நீர் விளையாட்டு ஆடுதலைக் காண விரும்பி, வணம்கொள் பூந்துணர் நீள்சோலை - நல்ல நிறமமைந்த பூங்கொத்துக்கள் நீளா நின்ற அப்பூம் பொழிலிடத்தே, மண்டுநீர் வாவி - இயங்குகின்ற நீர்மிக்க பொய்கையினை, சார்ந்தான் - அம்மகளிரோடு சென்றெய்தினான் (எ - று.) | |
| (பாடம்) 1வெதும்ப வெம்பி. 2 சென்னடு. 3 மணங்கொள் பூந்துணர்கொள் சோலை. 4சார்ந்தார். | | |
|
|