பக்கம் : 1036 | | கணம் - வட்டம். ஞாயிறு உச்சியினை எய்தியகாலைத் தேவியரோடே புனல் விளையாடலை விரும்பி நம்பி நீர் வாவியைச் சார்ந்தான் என்க. | (539) | | பல்வேறு வகை வாவிகள் | 1670. | சாந்துநீர் நிறைந்த வாவி 1தயங்குசெங் குவளை வாவி பூந்துக ளவிழ்ந்த பொற்றா மரைமலர் புதைந்த வாவி தேந்துண ரகன்ற தெண்ணீர்த் திருமணி யுருவ வாவி 2வாய்ந்தன காட்டிக் காட்டி யுழையவர் வணங்கி நின்றார். | (இ - ள்.) சாந்துநீர் நிறைந்த வாவி - சந்தனங்கலந்த மணநீர் நிறைந்த குளங்களையும், தயங்கு செங்குவளை வாவி - விளங்குகின்ற செங்கழுநீர் மலர்ந்துள்ள நன்னீர்க் குளங்களையும், பூந்துகள் அவிழ்ந்த பொன் தாமரைமலர் புதைந்த வாவி - மகரந்தப் பொடியை மிக்குதிர்க்கும் பொன்னிறத் தாமரை மலர்ந்து நீரை மறைத்துள்ள குளங்களையும், தேந்துணர் அகன்ற தெண்ணீர் திருமணி உருவ வாவி - இனிய மலர் யாதும் இல்லாதனவாய் நீலமணிபோன்ற நிறமுடைய தெளிந்த நீர் மாத்திரையே நிறைந்த குளங்களையும், வாய்ந்தன - ஆண்டுள்ளவற்றை, காட்டிக் காட்டி - அரசன் முதலியோர்க்கு ஒவ்வொன்றாய்க் காட்டுவாராகி, உழையவர் - பணியாளர், வணங்கி நின்றார் - அவர்களைத் தொழுது நின்றனர், (எ - று.) வாவிக் கரையை அடைந்த நம்பிக்கு நீர்நிறைந்த வாவியையும், குவளை வாவியையும், பொற்றாமரை வாவிவையும், தெண்ணீர் வாவியையும், உழையர் காட்டிக் காட்டி வணங்கி நின்றார் என்க. | (540) | | 1671. | அன்னவா 3றமைந்த தெண்ணீ ரலைபுன லாடும் போழ்தில் இன்னவா றியற்று கென்றாங் குழையரை மறைய வேவிப் பொன்னவாஞ் சுணங்கு போர்த்த புணர்முலை மகளிரோடு மன்னவாம் வயிரத் தோளான் வலஞ்சுழி வாவி புக்கான். | |
| (பாடம்) 1 தங்குசெங். சந்தனங் கலந்தவாவி. 2 வாய்ந்தவை போல.3 றமைத்த | | |
|
|