பக்கம் : 1037 | | (இ - ள்.) அன்னவாறு அமைந்த தெண்நீர் - அங்ஙனம் பலவேறு வகையான் அமைந்துள்ள தெளிந்த நீர்மையை உடைய, அலைபுனல் - அலையையுடைய நீரிலே, ஆடும்போதில் - ஆடும்போதில்-விளையாடும் போது, மன அவாம் வயிரத்தோளான் - அரசர்கள் விரும்புதற்குக் காரணமான மறத்தன்மை மிக்க தோளையுடைய திவிட்டநம்பி, உழையரை - பணியாட்களை, இன்னவாறு இயற்றுகென்று - இவ்வாறு செய்யுங்கோள் என்று பணித்து, மறைய ஏவி - அம் மகளிர் அறியாதபடி ஏவியபின்னர், பொன் சுணங்கு போர்த்தபுணர் அவாம்முலை மகளிரோடு - பொன்னிறத் தேமல் படர்ந்த புணர்தலை அவாவுதற்குக் காரணமான முலைகளையுடைய தன் தேவியரோடே, வலம்சுழி வாவிபுக்கான் - வலப்பக்கம் சுழித்தோடுகின்றதொரு வாவியிலே புகுந்தனன், (எ - று.) நம்பி அத்தகைய வாவியிலே தேவியரோடே ஆடும்போது, உழையர்க்கு, இன்னவாறு செய்மின் என மறைவிற் கூறி, உய்த்துப் பின்னர்த் தேவியரோடே வலஞ்சுழித்தோடும் ஒரு வாவியிலே புக்கான் என்க. | (541) | | | 1672. | மலங்குபாய் தயங்கு பொய்கை மணிக்கல்வா யடுத்த செம்பொற் கலிங்கினா றிழிந்து கீழே கலந்தவந் தெழுந்த தெண்ணீர் அலங்கலான் மடந்தை 1மார்கட் கரும்புணை யாக வீங்கி வலங்குலாய்ச் சுழிந்து வாய்த்த வாவிவாய் மடுத்த தன்றே. | (இ - ள்.) மலங்குபாய் - மலங்குமீன்கள் பாய்கின்ற, தயங்கு பொய்கை - விளங்குகின்ற அவ்வாவியின்கண், மணிக் கல்வாய் அடுத்த செம்பொன் கலிங்கின் ஆறு - மணிகளாகிய கற்கள் பொருந்திய வாயை உடைய செவ்விய பொன்னாலியன்ற மதகு வழியாக, இழிந்து - ஒழுகி, கீழே கலந்து - அவ்வாவியின் அடிநிலத்தே பரவி, வந்து எழுந்த தெண்ணீர் - வந்து பெருகிய தெளிந்த நீர், அலங்கலான் - திவிட்டநம்பி, மடந்தைமார்கட்கு - தன் தேவிமார்களுக்கு, அரும்புணையாக - உற்றுழி உதவும் அரிய தெப்பமாகும்படி, வீங்கி - பெருகி, வலம் குலாய்ச் சுழிந்து - வலப்பக்கமாக வளைந்து சுழியிட்டு, வாய்த்த வாவிவாய் மடுத்தது அன்றே - பொருந்திய அவ்வாவியிடத்தே நிரம்பிற்று, (எ - று.) | | |
| (பாடம்) 1 தகு, மடந்தை மார்தனரும்புணை கடாங்கி. சூ.-66 | | |
|
|