பக்கம் : 1038 | | அவ் வாவியின்கண் மதகு வழியாக விட்ட தெண்ணீர், பெருகித் தேவியர்க்கு நம்பி தெப்பமாம்படி வீங்கி வலஞ்சுழித்து வந்து மடுத்ததென்க. நிர் பெருகப் பெருகத் தேவியர் நம்பியைப் பற்றி ஏறுதலில் நம்பி தெப்பமாயினன் என்க. | (542) | | | 1673. | அலைபுனல் பெருக லோடு மலைகடல் வண்ணன் றன்னை மலைபுனை கொடியிற் புல்லி மடந்தையர் மயங்கு வாரும் மிலைபுனை கோதை சோர விடுபுணை தழுவு வாரும் கலைபுனை துகிலுந் தோடு மொழியப்போய்க் 1கரைசேர் வாரும். | (இ - ள்.) அலைபுனல் பெருகலோடும் - அவ்வாறு அலையையுடைய அந்நீர் பெருகியவுடன், அலைகடல் வண்ணன்றன்னை - அலையையுடைய கடல்போன்ற வண்ணமுடைய திவிட்டநம்பியை, மலைபுனை கொடியிற் புல்கி - மலையிடத்தே பற்றிய கொடிகளைப் போன்று தழீஇக்கொண்டு, மடந்தையர் மயங்குவாரும் - தேவிமார்கள் மனம் மயக்கங்கொள்வாரும், மிலைபுனை கோதை சோர - தாம் சூடியிருந்த மலர்மாலைகள் நழுவி நீரிலே மிதப்ப, விடுபுணை தழுவுவாரும் - அவற்றை நீர்கடக்கும் தெப்பமாகத் தழீஇக்கொள் வாரும், கலைபுனை துகிலும் தோடும் - மேகலையும் உடுத்திய ஆடையும் தோடுகளும், ஒழிய - நீரிலே போய்விட, போய்க்கரைசேர்வாரும் - இவற்றை யின்றித் தாம் கரையிலே ஏறுவாரும், (எ - று.) புனல் மிக்குப் பெருகியவுடன் தேவியர் நம்பியைப் புல்லுவாரும் மயங்கு வாரும் மலர்ப்புணை தழுவுவாரும் கரை சேர்வாரும் ஆயினர் என்க. | (543) | | | 1674. | ஆர்புனல் சுழித்து வாங்க வனையரா யணிபொன் வாவி நீர்புனை தடத்தி னுள்ளா னிலைகொண்டு நெடுங்கண் சேப்பத் தார்புனை மார்பன் றன்மேற் றரங்க 2நீ ரொருங்கு தூவி வார்புனை முலையி னல்லார் மயங்கமர் 3தொடங்க லுற்றார். | (இ - ள்.) ஆர்புனல் சுழித்து வாங்க - பொருந்திய நீர் சுழியிட்டுத் தம்மை ஈர்ப்ப, அனையராய் - அம்மகளிர் அவ்வண்ணமாகி, அணிபொன் வாவி - அழகிய பொன்கரைகளையுடைய அவ்வாவியிடத்தே, நீர்புனை தடத்தின் உள்ளால் - நீர் பொருந்திய ஓர் இடத்தே, நிலைகொண்டு - நிலைத்து நின்று, நெடுங்கண் சேப்ப - தம் நீண்ட கண்கள் சிவக்க, தார்புனை மார்பன் தன்மேல் - மலர்மாலையணிந்த மார்பையுடைய திவிட்டநம்பியின் மேல், தரங்கநீர் ஒருங்கு தூவி - அலையுடைய நீரை ஒருங்கே தூவுவாராய், வார்புனை முலையின் நல்லார் - கச்சணிந்த முலையினை யுடைய அம்மடந்தையர், மயங்கு அமர் தொடங்கினார் - மயங்குதற்குக் காரணமான போரைத் தொடங்கினர், (எ - று.) | |
| (பாடம்) 1 கரைகொள். 2 நீர் தயங்கத். 3 தொடங்கினாரே. | | |
|
|