பக்கம் : 1039 | | நீர் சுழித்து வாங்குதலாலே அவ்வாறாய மகளிர் அவ்வாவியிலே ஒரு மேட்டிடத்தே நிலைகொண்டு கண்சிவக்க நீரைத் தூவி அமர் தொடங்க லுற்றார் என்க. நீராடலாற் சிவந்த கண்ணுடையர் தேவியர் ஆதலின், அமர் தொடங்கலுற்றார் என்றதற்கேற்பக் கண்சேப்ப என்றார். | (544) | | 1675. | திரளிருஞ் சிவிறி வீக்கிச் செழுமழைத் தாரை பெய்வார் மருளிரும் பிணையன் மாலைப் படைபல வழங்கிச் சூழ்வார் சுருளிருந் தோடு வாங்கித் தோண்மிசை 1துளங்க வீழ்ப்பார் இருளிருங் குழலி னார்க ளிறைவன்மே லினைய ரானார். | (இ - ள்.) திரள் இரும் சிவிறி வீக்கிச் செழுமழைத்தாரை பெய்வார் - திரண்ட பெரிய நீர்த்துருத்தியாலே விசைத்துச் செழிப்புடைய மழைத்தாரை போன்று நீரைத் திவிட்டன் மேலே வீசுவாரும், மருள் இரும் பிணையல் மாலைப்படை பல வழங்கிச் சூழ்வார் - வியத்தற்குரிய பெரிய பிணையலாகிய மலர் மாலையென்னும் போர்க்கருவி பற்பல நம்பி மேலே வீசிச்சூழ்ந்து கொள்வாரும், சுருள் இருந்தோடு வாங்கி - பொற்சுருள்களையும் பெரிய தோடுகளையும் களைந்து, தோண்மிசை - நம்பியின் தோள்களின் மேலே, துளங்க வீழ்ப்பார் - திகழும்படி பெய்வாரும், இருள் இருங்குழலினார் கள் - இருண்ட பெரிய கூந்தலையுடைய மகளிர்கள், இறைவன்மேல் - நம்பியின் மேலே, இனையர் ஆனார் - போர்த்தொழிலிலே இத்தகையோர் ஆயினார், (எ - று.) தேவியர் நம்பியின்மேல் தாரை பெய்வாரும், பிணையல் மாலைப் பெரும்படை வழங்கிச் சூழ்வாரும், சுருளும் தோடும் வாங்கித் துளங்க வீழ்ப்பாரும் ஆனார், என்க. | (545) | | 1676. | சாந்தெழு சிவிறித் தாரை சதுர்முக மாக வீக்கிப் பாய்ந்தன பவழச் செங்கே 2ழங்கையாற் படுத்த தெண்ணீர் வேய்ந்தன திவலை யாகி விழுந்தன வேரி மாலை நாந்தகக் கிழவன் பொய்யே நங்கைமார்க் குடைந்து நின்றான். | |
| (பாடம்) 1 துளங்கி. 2அங்கையான் முகந்த. | | |
|
|