பக்கம் : 1041 | | (இ - ள்.) வென்றனம் வீரன்றன்னை - வீரனாகிய நம்பியை யாம் வென்றுவிட்டேம், வீக்குமின் சிவிறித்தாரை சென்று என - விடாதே துருத்தி நீர்த்தாரையை வீசுங்கோள் அணுகி நின்று என்று, சிறந்த காதல் தேவியர் - சிறந்த தலையன்புடைய தேவிமார்கள், திளைக்கும் போழ்தில் - திவிட்ட நம்பியை நெருக்கிய அமயத்தே, ஒன்றிய உழையர் - நம்பியின் ஏவலிலே பொருந்திய பணியாளர், கீழ்நீர் ஓ பறித்திடுதலோடும் - அவ்வாவியின் கீழே உள்ள நீரை மதகின் பலகையை அகற்றி ஓடிவிடும்படி செய்தனராக அங்ஙனம் செய்தவுடனே, நின்று அகம் சுழிந்த தெண்ணீர் - அவ்வாவியில் நிலைத்து நின்று உள்ளே சுழித்திட்ட தெளிந்த நீர், நெரேல் என - பொள்ளென, இழிந்தது - வடிந்தொழிந்தது, அன்று, ஏ : அசைகள், (எ - று.) ஓ - ஓரெழுத் தொருமொழி - மதகிலிட்டு நீரைத் தேக்குதற்குரிய பலகையின் பெயர். பறித்தல் - உருவி எடுத்தல் - நீரைத்தேக்கும் போது செருகியும் வடியச் செய்யும்பொழுது உருவியும் விடுதல் வழக்கம். ஆகலின், ஓப்பறித்திடுதலோடும் என்றார். நெரேல், என்பது ஈண்டு விரைவு குறித்து வந்தவொரு குறிப்புச் சொல். | (548) | | | 1679. | மாலையுந் துகிலும் வாரி வார்புன லொழுகும் போழ்தின் ஆலையின் கரும்பி னின்சொ லணங்கனா ரவிழத் தத்தம் கோலமென் றுகில்க டாங்கிக் குழைமுகஞ் சுடரக் கோட்டி வேலைநீர் வண்ணன் முன்னர் நாணினான் மெலிவு சென்றார். | (இ - ள்.) மாலையும் துகிலும் வாரி - மகளிருடைய மாலைகளையும் ஆடைகளையும் கவர்ந்துகொண்டு, வார்புனல் - அந்நெடிய நீர், ஒழுகும் போழ்தின் - ஓடியபோது, ஆலை இன் கரும்பின் இன்சொல் அணங்கனார் - பொறியிடத்தே ஆட்டப்பெற்ற இனிய கருப்பஞ்சாறு போன்ற இனிமையுடைய சொற்களைப் பேசுகின்ற தெய்வமகளிரை ஒத்த அத்தேவிமார், அவிழ - அவிழ்ந்து நெகிழாநின்ற, தத்தம் - தங்கள் தங்களுடைய, கோலம் மென்துகில்கள் - அழகிய மென்மைமிக்க ஆடைகளை, தாங்கி - கைகளாலே தாங்குபவராய், குழைமுகம் சுடரக் கோட்டி - தோடுகள் முகத்திலே ஒளிரும்படி குனிந்து, வேலைநீர் வண்ணன் முன்னர் - திவிட்ட நம்பியின் முன்னிலைக்கண்ணே, நாணினால் - மிக்க நாணத்தாலே, மெலிவு சென்றார் - மெலியலாயினர், (எ - று.) வைணவர் இறையாகிய கண்ணன் செய்த செயல்கள் அனைத்தும் இத்திவிட்டநம்பியின்பாற் காணப்படுதலின், அக்கண்ணன் வரலாற்றில், கோவியரின் துகிலைக் கண்ணன் கவர்ந்த வரலாற்றை, இந் நிகழ்ச்சி திவிட்டன்பாற் காட்டுதல் காண்க. | (549) |
| | | |
|
|