பக்கம் : 1043
 
1682. அடித்தலத் தலத்தகங் 1குழுமிக் குங்குமப்
பொடிக்கலந் 2தந்திவான் படைத்த பூம்புனல்
வடிக்கலந் திலங்குவா ணெடுங்கண் 3மைக்குழாம்
பிடிக்கலந் திருளுமங் கியற்றப் பட்டதே.
 
     (இ - ள்.) அடித்தலத்து அலத்தகம் குழுமி - அம்மகளிருடைய அடிகளிலே
ஊட்டப்பட்ட செம்பஞ்சுக் குழம்பு செறிந்தமையாலும், குங்குமப் பொடிக்கலந்து -
குங்குமப்பொடிகள் கலந்தமையாலும் சிவந்து, அந்திவான் படைத்த - செக்கர் வானத்தை
ஒத்துத் திகழ்ந்த, பூம்புனல் - அவ்வழகிய நீர், வடிக் கலந்து இலங்குவாள் நெடுங்கண் -
கூர்மை பொருந்தித் திகழ்கின்ற வாள் போன்ற நெடிய கண்களிடத்தே ஊட்டப்பட்ட,
இடிமைக் குழம்பு கலந்து - இடித்தியற்றப்பட்ட, கரு மைக்குழம்பு கலந்தமையாலே, அங்கு
இருளும் இயற்றப்பட்டது ஏ - அவ்விடத்தே இருளும் உண்டாக்கப்பட்டது, ஏ : அசை,
(எ - று.)

     தேவியர் ஆடிய பூம்புனலிடத்தே அலத்தகமும் குங்குமப்பொடியும் கலந்து
செக்கர்வானம் தோன்றிற்று. கண்களினிட்ட மை கலந்து இருளும் பட்டதென்க.

(552)

 
 
1683 .4கொங்கைவாய்க் குங்குமக் குழம்புங் 5கோதைவாய்
மங்கைமார் சிதர்ந்தன வாசச் சுண்ணமும்
செங்கண்மா லகலத்து விரையுந் 6தேர்த்தரோ
அங்கண்மா லிரும்புன லளறு பட்டதே.
 
     (இ - ள்.) கொங்கைவாய் குங்குமக் குழம்பும், - கொங்கை களிடத்தே அணியப்பட்ட
குங்குமக்குழம்பும், கோதைவாய் - மலர்மாலைகளிடத்தே, மங்கைமார் - மகளிர்களால்,
சிதர்ந்தன - தூவப்பட்ட, வாசச்சுண்ணமும் - நறுமணப் பொடிகளும், செங்கண்மால்
அகலத்து - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய திவிட்டநம்பியின் மார்பிடத்தே
அணியப்பட்ட, விரையும் சேர்த்து - மணங்களும் செறிந்து, அம் கண்மால் இரும்புனல் -
அழகிய இடத்தின் கண்ணதாகிய கரிய பெருகிய நீர், அளறு பட்டது - சேறாகியது, ஏ :
அசை, அரோ : அசை, (எ - று.)

     தேவியர் கொங்கையிற் பூசிய குங்குமச் சேறும் அவர் சிந்திய வாசச் சுண்ணமும்
நம்பியின் மார்பிற் றிமிர்ந்த மணமும் செறிந்து புனல் சேறாகியது என்க.

(553)

 

     (பாடம்) 1 கழுமிக். 2 தந்தியான். 3 மைக்குழாம். 4 கொங்குவாய்.

     5 கோதைமார். 6 தொத்தாரோ.