பக்கம் : 1044 | | | 1684. | அணங்கனா ரகலல்கு லலைத்து மாங்கவர் சுணங்குசூ ழிளமுலை துளும்பத் தாக்கியும் வணங்குபூங் கொடியிடை வளைத்தும் வாவிவாய் அணங்குநீர்த் திரையவை 1யணைப்ப வொத்தவே. | (இ - ள்.) அணங்கனார் - தெய்வமகளிரை ஒத்த அத்தேவியரின், அகல் அல்குல் அலைத்தும் - அகலிதாய அல்குலிடத்தே மோதியும், ஆங்கு அவர் சுணங்கு சூழ் இளமுலை துளும்பத் தாக்கியும் - அவ்விடத்தே அம்மகளிருடைய தேமல்படர்ந்த இளமையுடைய முலைகள் அசையும்படி புடைத்தும், வணங்கு பூங்கொடியிடை வளைத்தும் - நுடங்குகின்ற பூங்கொடிபோன்ற நுண்ணிடையை வளைத்துத் தழீஇயும், வாவிவாய் அணங்கு நீர்த்திரை - அவ்வாவியில் உள்ள அழகிய நீரின் அலைகள், அணைப்ப ஒத்தவே- அம்மகளிரொடு கலவி செய்வனவும் போன்றன, (எ- று.) நீர்த்திரைகள் அம்மகளிரின் அல்குலினை அலைத்தும், கொங்கை யிடத்தே அசைய மோதியும், கொடியிடைகளை வளைத்தும் கலவிசெய்யும் கணவரை ஒத்தனவென்க. | (554) | | 1685. | வடந்தவ ழிளமுலை விம்ம மங்கையர் குடைந்திட வெழுந்தநீர் குளித்த தாமரை மடந்தையர் குளித்தெழும் போழ்தின் வாண்முகம் அடைந்ததோர் பொலிவினை யறிவித் திட்டவே. | (இ - ள்.) வடம்தவழ் இளமுலை விம்ம - மணிவடங்கள் தவழ்கின்ற தம் இளமையுடைய முலைகள் விம்மும்படி, மங்கையர் - அம்மகளிர்கள், குடைந்திட - நீராடுதலாலே, எழுந்தநீர் குளித்த தாமரை - அலையாக எழுந்த நீரிலே மூழ்கி மீளத்தோன்றிய செந்தாமரை மலர்கள், மடந்தையர் குளித்து எழும் போழ்தின் - அம்மகளிர்கள் நீரிலே முழுகி யெழுகின்ற செவ்வியிலே, வாள்முகம் அடைந்தது ஓர் பொலிவினை - அவருடைய ஒளியுடைய முகங்கள் பெற்றிருந்த ஒப்பற்ற அழகை, அறிவித் திட்ட - (உவமை வாயிலாய்ப்) பிறர்க்கறியச் செய்தன, (எ - று.) மகளிர்கள் ஆடுதலாலே எழுந்த அலைகளிலே மூழ்கி, மீண்டும் தோன்றும் தாமரைமலர்கள், நீரில் மூழ்கி எழும் அம்மகளிரின் முகத்தைப் போன்று தோன்றின என்க. | (555) | | 1686. | வளைத்தகை யொண்பணைத் தோளி மாரொடு திளைத்தகங் கழுமிய தரங்கத் தெண்புனல் |
| (பாடம்) 1 யிணைப்ப. | | |
|
|