பக்கம் : 1047
 

     தமனகக் கொழுந்து - மருக்கொழுந்து.

     செங்கழுநீர் மலரோடே நெய்தல் மலரையும் பெய்து, இடையிடையே
மருக்கொழுந்தும் சார்த்திப் புனைந்த மலர்மாலையே, அற்றை நாள் தேவியராலே பெரிதும்
விரும்பி அணியப்பட்டது என்க.

(559)

 
1690.  பொன்மலைக் காவியிற் றிமிர்ந்து பூங்கமழ்
தென்மலைச் சந்தனஞ் 1செறிந்து தாமரை
நன்மலர்த் தாதுமீ தப்பி நங்கைமார்
மென்முலைத் தடங்களும் 2விருந்து பட்டவே.
 
     (இ - ள்.) பொன்மலைக் காவியில் திமிர்ந்து - மேருமலையிலே உண்டாகின்ற
காவியாலாகிய குழம்பினைப் பூசப்பெற்று, பூங்கமழ் தென்மலை சந்தனம் செறிந்து -
அழகிதாய் மிக்குக் கமழ்கின்ற பொதியிலில் உண்டாய சந்தனக் குழம்பையும் நீவி, தாமரை
நன்மலர் தாதுமீது அப்பி - பொற்றாமரையாகிய நல்ல மலரிலே தோன்றிய பொன்னிறப்
பூந்துகளையும் அப்பி, நங்கைமார் - அத்தேவியருடைய, மென்முலைத் தடங்களும் -
மெல்லிய முலைகளும், விருந்து பட்டவே - அற்றைநாள் புதுமையுற்றுப் பொலிந்தன,
(எ - று.)

     தேவியரின் கொங்கைகள் அற்றைநாள் மேருமலையிற் றோன்றும் காவி பூசப்பெற்றும்
பொதியிலிற் றோன்றிய சந்தனம் நீவப் பெற்றும் பொற்றாமரைப் பூந்துகள் அப்பப் பெற்றும்
புதுமையுடையவாய்ப் பொலிவுற்றன என்க.

(560)

 
1691. கண்ணகங் குளிர்ப்பக்கல் லாரக் கற்றையும்
தண்ணறு 3ங் குவளைதா மெறித்த தாமமும்
ஒண்ணிறத் தாமரை யொலிய லுந்தழீஇ
எண்ணரும் பெருங்கவி னிளைய ரெய்தினார்.
 
     (இ - ள்.) இளையர் - இளமைப்பருவம் உடைய தேவிமார், கண் அகம் குளிர்ப்ப -
நம்பியின் கட்பொறி இன்புறுமாறு, கல்லாரக்கற்றையும் - நீர்க்குளிரியாலாய
பூங்கற்றைகளையும், தண்நறும் குவளைதாம் எறித்த தாமமும் - குளிர்ந்த நறுமணங்கமழும்
செங்கழுநீர் மலராலாய ஒளிமிக்க மாலைகளையும், ஒண்ணிறத் தாமரை ஒலியலும் -
ஒள்ளிய நிறமமைந்த தாமரை மலராலியன்ற தொடையல்களையும், தழீஇ -
அணிந்துகொண்டு,  எண்ணரும்  பெருங்கவின்  எய்தினார் - நினைத்தற்கும்  அரிய
பேரழகுடையர்  ஆயினார், (எ - று.)

     கல்லாரம் - நீர்க்குளிரி என்னும் ஒரு நீர்ப்பூ, (பிங்கல, 303) அஃது இக்காலத்தே
துளிரி என்ற வழங்கப்படுகின்றது.
 

     (பாடம்) 1 மெழுகித். 2 விரிந்து. 3 ந்தாமரைத்தனிரு மேலசைந்