பக்கம் : 1048 | | இளமைமிக்க தேவியர் கல்லாரக் கற்றையும் குவளைத்தாமமும் தாமரை ஓலியலும் தழீஇக் கருதற்கியலாக் கவினுடன் திகழ்ந்தனர் என்க. | (561) | | 1692. | காமரு 1நிறத்தகல் லாரக் கற்றைகள் சாமரை யெனத்தம ரசைப்பத் தாமரை தேமரு குடையிலை கவிப்பத் தேவியர் பூமரு மடந்தையர் போன்று தோன்றினார். | (இ - ள்.) காமரு நிறத்த - அவாவுதற்குக் காரணமாக நன்னிறம மைந்தவாய, கல்லாரக் கற்றைகள் - நீர்க்குளிரியின் கற்றைகளை, சாமரையென - கவரிகளைப்போன்று, தமர் அசைப்ப - சிலதியர் இரட்டவும், தாமரை தேம்மரு குடையிலை கவிப்ப - தாமரையின் கட்கினிய குடைபோன்ற இலை நிழற்றவும், தேவியர் - நம்பியின் மனைவிமார்கள், பூமருமடந்தையர் போன்று - மலரின் விரும்பி வதிகின்ற திருமகளையும் நாமகளையும் போன்று, தோன்றினார் - திகழ்ந்தார், (எ - று.) பூமரு மடந்தையர் எனப் பன்மையிற் கூறலின் திருமகளும் நாமகளும் என்றாம். தேவியர், தமர் சாமரை யசைப்பவும் தாமரையிலைக் குடைகலிப்பவும், பூமரு மடந்தையர் போன்று தோன்றினர் என்க. | (562) | | 1693. | தேவர்க டிசைமுகங் 2காப்பத் தீஞ்சுவை ஆவியா ரமிர்தயின் றிருந்த வாயிடைப் பாவையர் கருங்கணாற் பருகு வார்கள்போன் மாவர சழித்தவன் மருங்கு சுற்றினார். | (இ - ள்.) தேவர்கள் திசைமுகம் காப்ப - தெய்வங்கள் எண் திக்குகளிலும் நின்று காவல்புரிய, தீஞ்சுவை ஆவி ஆர் அமிர்து அயின்று - தீவிய சுவையுடைய நன்மணம் பொருந்திய உண்டியினை உண்டு, இருந்த ஆயிடை - அனைவரும் இருந்த பொழுது, மா அரசு அழித்தவன் மருங்கு - விலங்கின் வேந்தாகிய அரிமாவைக்கொன்ற நம்பியின் பக்கத்தே, பாவையர் - தேவிமார்கள், கருங்கணால் பருகுவார்கள்போல் - தமது கரிய கண்ணாகிய வாயாலே நம்பியின் அழகாகிய நீரைப் பருகுவாரைப் போன்று வேணவாவுடன் கூர்ந்து நோக்கி, சுற்றினார் - சூழ்ந்து கொண்டனர், (எ - று.) மா அரசு அழித்தவன் - சிறந்த வேந்தனாகிய அச்சுவகண்டனை அழித்தவன் எனவும், இரட்டுற மொழிந்து கொள்க. | |
| (பாடம்) 1 நிறைத்த. 2 கரப்பத். | | |
|
|