பக்கம் : 1050 | | என்னை - என்றது, ஒருவரோடு சொல்லாட்டம் தொடங்குவார் அவரை முன்னிலையாக்கும் பொருட்டு முன்னர்த் தொடங்கும் ஒரு சொல். என் + ஐ - என் தலைவனாகிய எனினுமாம். வந்து வணங்கிய விச்சாதரனை நோக்கி, மாமனாகிய சடியரசனின் நலத்தை வினாவ, அவனும் அடிகள் விரும்பியவாறே என்று வணங்க, அமர்க என்று நம்பி கூறினான், என்க. | (565) | | தூதன் திருமுகம் கொடுத்தல் | 1696. | உரிமையோ டிருந்த போழ்தி னுணர்த்துதற் குரித்தென் றெண்ணித் திருமுகந் தொழுது 1காட்டத் தேவிதன் மருங்கு நின்ற உரிமைகொ ளுழைய ருள்ளா ளொருத்திவா சித்து ணர்த்த அருமுடி யொழிய வெல்லா வணிகளு மவனுக் கீந்தான். | (இ - ள்.) உரிமையோடு இருந்த போழ்தின் - தூதன்தான் கொணர்ந்துள்ள செய்தி அரசன் தன் உரிமை மகளிரோடே வீற்றிருக்கும் அமயத்தே, உணர்த்துதற்கு உரித்து என்று எண்ணி - கூறுவதற்கு மிகத் தகுதியுடையதே ஆம் என்று கருதி, தொழுது திருமுகம் காட்ட - நம்பியை வணங்கித் தான் கொணர்ந்த திருமுகவோலையை நம்பிபாற் கொடுக்க, தேவிதன் மருங்கு நின்ற - சுயம்பிரபையின் பக்கத்தே நின்ற, உரிமைகொள் உழையர் உள்ளாள் ஒருத்தி - திருமுகம் வாசிக்கும் உரிமையை உடைய அவ்வுழைக்கல மகளிருள் ஒருத்தி, வாசித்து உணர்த்த - நம்பியின் குறிப்புணர்ந்து அத்திருமுகத்தே பொறித்துள்ள செய்தியை ஓதி அறிவியா நிற்ப, அருமுடி ஒழிய எல்லா அணிகளும் - அரசற்கே சிறந்துரிமையுடைய திருமுடிக்கலன் ஒன்றை ஒழிய அரசர்கள் அணிதற்குரிய ஏனைய எல்லா அணிகலன்களையும், அவனுக்கு ஈந்தான் - அந்நற்செய்தியைக் கொணர்ந்த தூதனுக்கு மகிழ்ந்து வழங்கினான், (எ - று.) | |
| (பாடம்) 1 காட்டித். | | |
|
|