பக்கம் : 1054 | | அந்திமாலையிற் றோன்றும், ஆயர் குழலிசை, பறவையின் பாடல் முதலியவற்றை. அந்திமாலைப் பெண்ணின் மழலையங்கிளவியாகவும், செக்கர் வானத்தைச் செவ்வாயாகவும், உருவகித்தவாறு. ஞாயிறு மறைதலும் அந்திமாலை வந்ததாக. அப்பொழுது மகளிர்தம் குழற்கூட்டும் அகிலாவியானே விசும்பு இருண்டது என்க. | (570) | திங்கட் டோற்றம் | 1701. | விரவின பரவைப் பன்மீன் மிடைமணிக் கலாப மாக மருவின பரவை யல்குன் மயங்கிருட் டுகிலை வாங்கிப் புரிவணன் மதிய மென்பான் பொழிகதிர்த் தடக்கை நீட்டி இரவெனு மடந்தை செல்வ நுகரிய வெழுந்து போந்தான். | (இ - ள்.) விரவின பரவைப் பன்மீன் மிடைமணிக் கலாபமாக - யாண்டும் கலந்து பரவிய பலவாகிய விண்மீன்களின் கூட்டமே செறிந்த காஞ்சியென்னும் மணியணிகலனாக, மருவின பரவை அல்குல் - பொருந்திய கடலாகிய அல்குற் றடத்தின் மேலே, மயங்கு இருள் துகிலை வாங்கி - பொருந்திய இருளாகிய கரிய ஆடையைக் களைந்து, புரிவணன் மதியம் என்பான் - விரும்புதற்குரிய வெண்ணிறமுடையவனாகிய திங்கள் என்னும் காதற்கொழுநன், பொழிகதிர் தடக்கை நீட்டி - சொரியா நின்ற தனது நிலாவொளிச்சுடர் ஆகிய பெரிய கைகளை நீட்டி, இரவு எனும் மடந்தை செல்வம் நுகரிய - இரவு என்னும் தன் காதலியின் புணர்ச்சிப் பேரின்பமாகிய செல்வத்தை நுகரக் கருதி, எழுந்து வந்தான் - தோன்றி வானத்திலே வருவானாயினன், (எ - று.) புரிவணன் என்புழி புரி - சங்கு எனினுமாம். பலவாகிய விண்மீன்களைக் கலாபமாகவும், கடலை அல்குலாகவும் உடைய, இரவு என்னும் காதலியின் புணர்ச்சி யின்பத்தை விரும்பி, இருளாகிய அவள் துகிலைத் தனது ஒளியாகிய கைகளாலே அகற்றித் தன் கைகளை நீட்டித் தழுவித் திங்கள் என்னும் காதலன் வந்தான், என்க. | (571) | நம்பியின் காமவின்பச் சிறப்பு | 1702. | ஏரணி விசும்பி னங்கே 1ழெழுநிலா விரிந்த போழ்தில் சீரணி மணிவண் டார்க்குஞ் சிகழிகைப் பவழ வாயார் காரணி வண்ண னென்னுங் கருங்களி வேழந் தன்னை வாரணி யிளமென் கொங்கை வாரியுள் 2வளைத்துக் கொண்டார். | |
| (பாடம்) 1 கெழினிலா. 2 வளைந்து. | | |
|
|