பக்கம் : 1055 | | இதுமுதல் 4 செய்யுள் ஒரு தொடர். (இ - ள்.) ஏர் அணி விசும்பின் அங்கேழ் எழுநிலா விரிந்த போழ்தில் - அழகையே அணிந்துள்ள வானிடத்தே, அழகிய நிறமிக்க நிலாவொளி பரவியபொழுது, சீர் அணி மணி வண்டு ஆர்க்கும் - சிறந்த அழகையுடைய மணிபோன்ற வண்டுகள் ஆரவாரிக்கின்ற, சிகழிகை பவழவாயார் - மயிர்முடியினையும் பவழம் போன்று சிவந்த வாயினையும் உடைய தேவிமார்கள், கார் அணி வண்ணன் என்னும் - முகில்போன்ற அழகிய நிற முடையானாகிய திவிட்டநம்பி என்னும் - கரும் களி வேழந்தன்னை - கரிய மதக் களிப்பையுடைய களிற்றியானையை, வாரணி இளமென் கொங்கை வாரியுள் - தம்முடைய கச்சணிந்த இளமையும் மென்மையுமுடைய முலையாகிய யானைக் கூடத்திலே, வளைத்துக் கொண்டார் - அகப்படுத்திக் கொள்ளுவாராயினர், (எ - று.) வாரி - யானைக்கூடம். அவன் அவ்விடத்தினின்றும் அகலாமையின் முலையினை வாரி என்றார். விசும்பிடத்தே நிலாவிரிந்த பொழுதிலே பவழவாயார் நம்பியாகிய களிற்றியானையைத் தம் முலையாகிய யானைக்கூடத்திலே அகப்படுத்திக் கொண்டார் என்க. இது முலைப் போகங் கூறிற்று. | (572) | | | 1703. | பங்கய முகத்து நல்லார் பவழவாய்க் கவளங் கொண்டு பொங்கிய களிய தாகி மயங்கிய பொருவில் வேழம் குங்குமப் 1பொடிநின் றாடிக் குவட்டிளங் கொங்கை யென்னும் தங்கொளி மணிமுத் 2தேந்துந் தடத்திடை யிறைஞ்சிற் றன்றே. | (இ - ள்.) பங்கயமுகத்து நல்லார் - தாமரை மலர்போன்ற அழகிய முகத்தையுடைய பெண்மையில் நல்லாராகிய தேவியர்களின், பவழவாய் கவளங்கொண்டு - பவழம்போன்ற வாயின் கண்ணதாகிய அதரபானம் என்னும் உணவை நன்கு உண்டு, பொங்கிய களியதாகி - மேலும் மேலும் மிகாநின்ற களிப்பை உடையதாய், மயங்கிய - அவ்வின்பத்தே மயக்க முற்ற, பொருவில் வேழம் - ஒப்பற்ற நம்பியாகிய களிறு, குங்குமப்பொடி நின்றாடி - குங்குமப்பொடியிலே முழுகி, குவட்டு இளங்கொங்கை யென்னும் - முகட்டையுடைய இளைய முலைகள் என்கிற, தங்கு ஒளிமுத்து ஏந்தும் - நிலைபெற்ற முத்து வடங்களை அணிந்துள்ள, தடத்திடை - சேவகத்திலே, இறைஞ்சிற்று - தாழ்ந்துகிடந்தது, அன்று, ஏ : அசைகள், (எ - று.) | |
| (பாடம்) 1 பொடியின். 2 தேத்தும். | | |
|
|