பக்கம் : 1056 | | இதன்கண், அதரபானமும், முலைப்போகமும் கூறியவாறு. தடம், ஈண்டு யானைக்கூடம். நம்பியாகிய களிறு பவழவாய்க் கவளங்கொண்டு குங்குமப்பொடியாடிக் கொங்கைத் தடத்திடைத் தாழ்ந்து கிடந்ததென்க. | (573) | | 1704. | வேய்மரு ளுருவத் தோளார் வெம்முலைத் தடங்க ளென்னும் பூமரு தடத்துட் 1டாழ்ந்து பொற்பொடி புதைய வாடிக் காமரு காம மென்னுங் கருங்கயம் படிந்து சென்று தேமரு குழலஞ் சாயற் றேவிகைப் பட்ட தன்றே. | (இ - ள்.) வேய்மருள் உருவத் தோளார் - மூங்கிலை ஒத்த அழகிய தோள்களையுடைய அம்மகளிர்களின், வெம்முலைத் தடங்கள் என்னும் - விரும்புதற்குரிய முலையிடமாகிற, பூமரு தடத்துள் தாழ்ந்து - மலர் மிக்க நீர்நிலையிலே முழுகி, பொற்பொடி புதைய ஆடி - நறுமணப் பொற்சுண்ணம் தன் உடல் புதைப்ப ஆடி, காமரு காமம் என்னும் - அழகிய காமவின்பம் என்கிற, கருங்கயம் படிந்து சென்று - பெரிய அல்குலாகிய கரிய குளத்திலே திளைத்து அகன்று, தேம் மருகுழல் அம் சாயல் - தேன் பொருந்திய கூந்தலையும் அழகிய தோற்றத்தையுமுடைய, தேவிகை பட்டது அன்றே - சுயம்பிரபை என்னும் கோப்பெருந்தேவியின் கையிலே அக்களிறு அகப்பட்டது, அன்று, ஏ : அசைகள், (எ - று.) இஃது அல்குற் போகம் கூறிற்று. தோளார் வெம்முலையாகிய பூமருதடத்திற் றாழ்ந்து பொற்பொடி யாடி காமம் என்னும் கருங்கயம் படிந்துசென்று அக்களிறு கோப்பெருந் தேவியின் கையிற் பட்டதென்க. கருங்கயம்-ஈண்டு அல்குல். காமவின்பத்திற்குக் காரண மான கருங்கயத்தைக் காமமென்னும் கருங்கயம் என்று உபசரித்தார். | (574) | | 1705. | காதலா லுரிமை பாங்கிற் கடிகமழ் காம வல்லித் தாதெலாந் 2தகர்ந்து சிந்தத் திளைத்தவத் தடக்கை வேழம் மாதரா ளமிழ்தின் சாயற் றோட்டியால் வணக்கப் பட்டுப் போதுலாம் புணர்மென் கொங்கைக் குவட்டிடைப் பூண்ட தன்றே. | |
| (பாடம்) 1 போழ்ந்து. 2 தாழ்ந்து, ததர்ந்து. | | |
|
|