பக்கம் : 1062 | | முரசொலி, ஒலிகளும், ஒலிகளும், விரவி ஒலித்ததென்று இயைத்துக் கொள்க. முரசொலி : எழுவாய். நம்பி பிறந்தான் பொலிக நங்கிளை எனப் பிறரும் கூறுதல் காண்க. பொலிக என்னும் வாழ்த்தொலிகளும் கலவொலிகளும் விரவி முரசொலி பரந்து ஒலித்த வென்க. | (583) | | lஇதுவுமது | 1714. | துளைபடு குழலிசை துடியொ டார்ப்பவும் வளைபடு கறங்கிசை வயிரொ டேங்கவும் தளைபடு தகைமலர் மாலை தாதுகக் கிளைபடு வளநகர் கிலுகி லுத்ததே. | (இ - ள்.) துளைபடு குழல் இசை - தொளைக்கப்படுகின்ற வேய்ங்குழலின் இன்னிசை, துடியொடு - துடி என்னும் தோற் கரவி இசையோடே கலந்து, ஆர்ப்பவும், முழங்குதலாலும், வளைபடு கறங்கு இசை - சங்குகள் தோற்றிய பேரொலி, வயிரொடு ஏங்கவும் - கொம்புகளின் ஓசை யோடே கலந்து முழங்குதலாலும், தளைபடு தகை மலர் மாலை தாது உக - பிணைக்கப்படுகின்ற சிறப்புடைய மலராலாய மாலைகள் பூந்துகளை உதிர்க் கவும், கிளைபடு வளநகர் - பல்வேறு கூறுபாடுகளையுடைய வளப்பம் மிக்க அப்போதனமா நகரம், கிலுகிலுத்ததே-கிலுகிலுத்துக் கிடப்ப தாயிற்று, (எ- று.) கிலு கிலுத்தல் - இடையறாது மிக் கொலித்தல் : உலக வழக்கு. குழலிசை துடியோடே முழங்கவும் சங்கொலி கொம்போடே முழங்கவும் மாலை தாதுகவும் வளநகர் கிலுகிலுத்த தென்க. மாலை தாதுக என்றது மக்கள் மகிழ்ச்சிமிக்கு நெருங்கி வருதலால் நிகழ்ந்த தென்க. | (584) | இதுவுமது | 1715. | தொத்திளங் கடிமலர் துதைந்த கோதையார் மொய்த்திளங் குமரரோ டாடு முன்கடை மத்தளப் பாணியு மதன கீதமும் கைத்தலத் தாளமுங் கலந்தி சைத்தவே. |
| | | |
|
|