பக்கம் : 1065 | | விசயன் முதலிய ஆணினக் கிளைஞரும் தேவி முதலிய பெண்ணினக் கிளைஞரும் அன்புடனே வந்து குழுமினர் என்க. | (588) | | சுற்றத்தாரின் மகிழ்ச்சி | 1719. | எழுதரு பரிதியங் குழவி யேய்ப்பதோர் தொழுதகை வடிவொடு நம்பி தோன்றலும் தழுவினர் முயங்கினர் முயங்கித் தம்முளே ஒழிவிலா வுவகைநீர்க் கடலுண் மூழ்கினார். | (இ - ள்.) எழுதரு பரிதியங் குழவி ஏய்ப்பது ஓர் - குணகடலிலே தோன்றாநின்ற அழகிய இளஞாயிற்றை ஒப்பதொரு, தொழுதகை வடிவொடு - கண்டார் வணங்குதற்குரிய தெய்வத் தன்மையுடைய உருவத்துடனே, நம்பி தோன்றலும் - நம்பியாகிய அம்மகவு காணப்படுதலால், தழுவினர் முயங்கினர் - அம்மகவினைக் கைகளாலே அன்புடன் தழீஇக் கொள்வாரும், தம் மார்புடனே பொருந்த அணைத்துக் கொள்வாருமாய், முயங்கித் தம் உளே - அணைத்துத் தம் முள்ளத்தூடே, உவகை நீர் கடலுள் - பெருகாநின்ற மகிழ்ச்சியாகிய நீரால் நிறைந்த இன்பக் கடலிலே, ஒழிவிலர் மூழ்கினார் - இடையறாது முழுகி இன்புற்றனர் (எ - று.) அவ்வாறு வந்த கிளைஞர்கள் இளஞாயிறுபோலும் தெய்வத்தன்மை யுடைய எழிலோடே தோன்றும் அக்குழவியைத் தழுவுவாரும் அணைப் பாருமாய்த் தம்முளே மகிழ்ச்சிமிக்கு இன்பக் கடலிலே மூழ்கினர் என்க. | (589) | | 1720. | அறத்தகை யந்தணர் குழுவு 1மாடல்வேன் மறத்தகை மன்னர்தங் குழுவு மாநகர்த் திறத்தகு முதியரு மீண்டிச் செல்வனைப் 2பொறுத்தனர் பொலிவுரை புடைபொ ழிந்ததே. | (இ - ள்.) அறத்தகை அந்தணர் குழுவும் - எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அறத்தகுதியுடைய அந்தணர் கூட்டமும், ஆடல்வேல் மறத்தகை மன்னர் தம் குழுவும் - பகை வெல்லும் வேற்படையாலே சிறப்புற்ற மறத்தன்மையுடைய அரசர் குழாமும், மாநகர் திறம்தகு முதியரும் - ஏனைய பெரிய நகரத்தே வாழ்கின்ற சான்றாண்மை மிக்க பெரியோரும், ஈண்டி - எய்தி, செல்வனைப் பொறுத்தனர் - அம்மகவினை ஏந்தியவராய், பொலிவுரை - வாழ்த்தா நின்ற மொழிகள், புடை பொழிந்ததே - பக்கத்தே மழைபோன்று பொழிவுற்றது, (எ - று.) | |
| (பாடம்) 1 மானவேன். 2 பொறுத்தவர். | | |
|
|