பக்கம் : 1067
 

     எட்டுத் திசைகளும் திருவோடே திகழுமாறு தோன்றிய அம்மகவு திருமகளோடே
வெற்றிமகளையும் சேருவான் என அறிஞர் கூறலின், அதற்கு விசயன் என்னும்
திருப்பெயரை வழங்கினார் என்க.

     விசயன் - வெற்றியுடையோன். வென்றியைச்  சேருமாகலின் விசயன் என்றனர்
என்றபடி.

(592)

 

விச்சாதரர் உலகினின்றும் ஒரு விமானம் வருதல்

1723. விஞ்சைய ருலகிற்கும் விடுத்து மோகையென்
றஞ்சன வண்ணனங் கருளு மாயிடை
மஞ்சுடை விசும்பினின் றிழிந்து வந்தது
செஞ்சுட ருமிழ்வதோர் செம்பொன் மானமே.
     (இ - ள்.) விஞ்சையர் உலகிற்கும் விடுத்தும் ஓகை என்று - விச்சாதரர் உலகினராகிய
சடிமன்னன் முதலியோருக்கும் இவ்வுவகைச் செய்தியைத் தூதுவராலே அறிவிப்பாம் என்று,
அஞ்சனவண்ணன் - திவிட்டநம்பி, அங்கு அருளும் ஆயிடை - அவ்விடத்தே
நினைத்தருளிய பொழுதே, மஞ்சுடை விசும்பினின்று - முகில்களையுடைய வானத்தினின்றும்,
செஞ்சுடர் உமிழ்வது ஓர் செம்பொன் மானம் - செவ்விய ஒளியைப் பரப்புவதாகிய ஒரு
செவ்விய பொன்னாலியன்ற விமானம், இழிந்து வந்தது - இறங்கி நகரத்தை எய்தியது,
(எ - று.)

     ஓகை உவகை என்பதன் மருஉ, ஓகைக்குக் காணரமான செய்தியை ஓகை யென்றார்.

     சடி முதலியவர்க்கு இச்செய்தியை அறிவிப்பேம் என்று நம்பி கருதுமளவிலே,
விசும்பினின்றும் ஒரு விமானம் இறங்கி எய்தியது என்க.

(593)

 
1724. மணிநகு விமானமொன் றிழிந்து வந்துநம்
அணிநக ரணுகின தடிக ளென்றலும்
பணிவரைக் 1காணர்மினீர் பாங்கி னென்றனன்
துணிநகு சுடரொளி துளும்பும் வேலினான்.
 
     (இ - ள்.) மணிநகு விமானம் ஒன்று - மணிகளாலே விளங்குகின்ற ஒரு விமானம்,
இழிந்து வந்து நம் அணி நகர் அணுகினது அடிகள் என்றலும் - வானத்தினின்றும் இறங்கி
நமது நகரத்தை வந்து எய்தியது பெருமானே என்று காவலர்கள் உரைத்தவுடனே, துணிநகு
சுடர்ஒளி துளும்பும் வேலினான் - தெளிவுடனே விளங்குகின்ற சுடரும் ஒளியாலே
 

     (பாடம்) 1 யறிந்துநீர் கொணர்மின்.