பக்கம் : 1071 | | (இ - ள்.) தெண்கதிர் திருமணி - தெளிந்த நிலாச்சுடருடைய அழகிய வான்மணியாகிய திங்கள்மண்டிலம், கனவில் சேர்ந்த பின் - இவ்வாறு தன் கனவிலே எய்தியதாய்க் கண்ட பின்னர் இளமுலை - சோதிமாலையின் இளமையுடைய முலைகளின், கண் கதிர்த்து - முகம் ஒளிபெற்று, கால் பணைத்தன - அடி பருத்தன, தண்கதிர் தமனியப் பாவைபோல்வதோர் - தண்ணிய ஒளியையுடைய பொற்பதுமையைப் போன்றதொரு, ஒண் கதிர் உருவம் திருமகள் எய்தினாள் - ஒள்ளிய சுடர் உடைய வடிவத்தை அத்திருமகளை ஒத்த சோதிமாலை அடைந்தனள், (எ - று.) அக் கனாவினைக் கண்டபின்னர் முலை கண் கதிர்த்துத் தமனியப் பாவைபோல் கருக்கொண்டு திகழ்ந்தாள் என்க, | (600) | | சோதிமாலையின் வயா வருத்தம் | 1731. | வானிவர் மணிநகை விமான மேறவும் கானிவர்கெற்பகச் சோலை காணவும் மானிவர் நோக்கினாள் வயாவி னாளது தேனிவ ரலங்கலாய் தீர்க்கப் பட்டதே. | (இ - ள்.) வான் இவர் மணிநகை விமானம் ஏறவும் - விசும்பிடத்தே இயங்குகின்ற, மணி ஒளியுடைய விமானத்திலே ஏறிச்செல்லவும், கான் இவர் கற்பகச்சோலை காணவும் - மணந்தவழுகின்ற கற்பகப் பூம்பொழிலைப் பார்க்கவும், மான் இவர் நோக்கினாள் - மான்கள் தன்னினம் என்று கருதி அணுகுதற்குக் காரணமான கண்களையுடைய சோதிமாலை, வயாவினாள் - வேணவாவுற்றாள், அது - அவ்வாசைதானும், தேன் இவர் அலங்கலாய் - வண்டுகள் மொய்க்கின்ற மலர்மாலையணிந்த நம்பியே, தீர்க்கப்பட்டது - வானவூர்தியில் ஊர்வித்தும் கற்பகக்கானம் காட்டியும் தீர்க்கப்பட்டது, (எ - று.) கருக்கொண்ட சோதிமாலை விமானமேறவும் கற்பகச் சோலை காணவும் அவாவினள் ஆகலின் அங்ஙனமே ஏற்றியும் காட்டியும் அவ்வயாத் தீர்க்கப்பட்டது என்க. வயா - கருக் கொண்ட மகளிர்க்கு உண்டாகும் ஆசை. | (601) | | சோதிமாலை கருவுயிர்த்தல் | 1732. | மாணிக்க மரும்பிய வண்பொன் மாநிலத் தாணிப்பொன் னனையவ ளனைய ளாயபின் கோணிற்கும் விசும்பிடைக் குழவித் திங்களும் நாணிப்போ முருவொடு நம்பி தோன்றினான். | |
| | | |
|
|