பக்கம் : 1075 | | விசயன் வளர்தற் சிறப்பு | 1738. | விண்டா ரில்லா வெந்திற 1லோன்பொற் சுடராழித் தண்டார் மார்பன் றன்மக னன்மா மணியேபோல் கண்டார் கண்களி 2கூருஞ் செல்வக் கவினெய்தி வண்டா ரைம்பான் மங்கையர் காப்ப வளர்கின்றான். | (இ - ள்.) விண்டார் இல்லா வெந்திறலோன் - பகைவர் என்போர் யாண்டும் இன்மைக்குக் காரணமான வெவ்விய ஆற்றலுடையோனும், பொன் சுடர் ஆழி - பொன்னாலியன்ற ஒளியுடைய சக்கரப்படையைத் தரித்தவனும், தண்தார் மார்பன் தன் - குளிர்ந்த வெற்றி மாலையை அணிந்த மார்பையுடை யோனுமாகிய திவிட்டநம்பியின், மகன் - மகனாகிய விசயனும், நன் மா மணியே போல் - நல்ல மாண்புடைய மாணிக்கமணியே போன்று, கண்டார் கண் களிகூரும் - தன்னைப் பார்த்தோருடைய கண்கள் காட்சி இன்பத்தாலே பெரிதும் மகிழும்படி, செல்வக் கவின் எய்தி - செல்வமாகிய அழகு மிக்கு, வண்தார் ஐம்பால் மங்கையர் காப்ப - வளப்பமுடைய பூமாலை சூட்டப்பெற்ற கூந்தலையுடைய செவிலித் தாயரும் பிற மகளிரும் புறங்காத்தோம்ப, வளர்கின்றான் - வளர்வானாயினான், (எ - று.) வண்டு ஆர் ஐம்பால் எனினுமாம். தேவர் இனித் திவிட்டநம்பியின் மக்கள் வளர்தற் சிறப்பைக் கூறிய தொடங்கினார் என்க. பகைவரில்லாத பேராற்றலுடைய திவிட்டனின் மகன் நன்மணி போலே கண்டார் கண் களிகூரக் கவின் எய்தி மங்கையர் காப்ப வளர்கின்றான் என்க. | (608) | | இதுவுமது | 1739. | கண்கவர் சோதிக் காமரு தெய்வம் 3பலகாப்பத் தண்கமழ் போதிற் றாமரை யாளுந் தகைவாழ்த்த விண்கவர் சோதித் தண்கதி ரோன்போல் விரிவெய்தி மண்கவர் சோதித் தண்கதிர் வண்ணன் வளர்கின்றான். | (இ - ள்.) கண்கவர் சோதி காமரு தெய்வம் - கட்பொறியைக் கவர்தலுடைய பேரொளி படைத்த அழகிய தேவர்கள் பலர், காப்ப, விசயனைக் காத்தோம்பவும், தண்கமழ் போதில் தாமரையாளும் - குளிர்ந்த மணமிக்க மலரிலே வாழ்கின்ற திருமகளும், தகை வாழ்த்த - விசயனுடைய சிறப்பினை வாழ்த்தவும், விண்கவர் சோதி தண் கதிரோன்போல் - விசும்பு | |
| (பாடம்) 1 லொண் பெற். 2 கொள்ளுஞ். 3 பலர் காப்பத். | | |
|
|