பக்கம் : 1078 | | (இ - ள்.) ஐயாண்டு எல்லை ஐயன் அணைந்தான் - ஐந்தாண்டு அகவையை விசயன் எய்தினானாக, அவனோடும் - அவ்விசயனாகிய மணமகனோடே, ஐ ஆர் இன்பக் காதலி - அழகுமிக்கு இன்புறுதற்குரிய மணமகள் ஆவாள், நாவின் மகள் ஆக - கலை மகளே ஆமாறு, பொய்யாக் கல்விச் செல்வர்கள் தம்மால் - மெய்ந்நூற் கல்வியாகிய செல்வத்தான் மிக்க நல்லாசிரியராலே, புணர்வித்தான் - மணம் புணர்த்தினான், நெய் ஆர் செவ்வேல் நீள் ஒளி நேமிப்படையோன் - நெய் நீவிய செவ்விய வேற்படையினையும், நீண்ட ஒளியையுடைய ஆழிப்படையையும் உடைய திவிட்டநம்பி, (எ - று.) இவ்வாறு வளர்ந்த விசயன் ஐயாண்டகவையை எய்தியவுடன் அப்பருவத்தே மணம் புணர்த்தற்குரிய நாமகளைப் பொய்யாக் கல்விச் செல்வர்களாலே விசயனுக்கு மணம் புணர்வித்தான் என்க, என்றது, கலை பயிற்றுவித்தான் என்றபடி. இங்ஙனமே, சிந்தாமணியினும், சீவக நம்பிக்குக் கலைபயிற்றுவித்தார் என்னும் செய்தியை, “மழலையாழ் மருட்டுந் தீஞ்சொன் மதலையை மயிலஞ் சாயல் குழைமுக ஞானம் என்னும் குமரியைப் புணர்க்க லுற்றார்Óஎன்றும், “இருந்து பொன்னோலை செப்பின் ஊசியால் எழுதி ஏற்பத் திருந்துபொற் கண்ணியாற்குச் செல்வியைச் சேர்த்தி னாரேÓஎன்றும், “நாமகள் நலத்தையெல்லாம் நயந்துடன் பருகிÓ என்றும், அத்தேவரும் கூறுதல் காண்க. | (613) | | சுயம்பிரபை ஒரு பெண்மகப் பெறுதல் | 1744. | காமச் செல்வ னென்றுல கெல்லாங் களிதூங்கும் ஏமச் செல்வ நம்பியொ டின்னு மிளையாகச் சேமச் செல்வன் றேவி பயந்தா டிசையெல்லாம் ஓமச் செல்வங் கொண்டினிது 1தேத்து மொளியாளே. | (இ - ள்.) காமச்செல்வன் என்று - அழகினாலே மதவேளே இவன் என்று, உலகு எல்லாம் களி தூங்கும் - உலகினர்கள் எல்லாரும் மிக்கு மகிழும், ஏமச்செல்வ நம்பியொடு - இன்பமுடைய செல்வனாகிய விசய நம்பியோடே, இன்னும் பின்னரும், இளையாக - இளையளாக, சேமச் செல்வன் தேவி - அரசு காவலையே தன் செல்வமாகப் போற்றுகின்ற திவிட்டநம்பியின் முதற் பெருந்தேவியாகிய சுயம்பிரபை, திசையெல்லாம் - திக்குகள் தோறும், ஓமச் செல்வம் கொண்டு - யாகத்திற்குரிய பொருள்களைக் கொண்டு அவிசொரிந்து, இனிதேத்தும் - இனிதாகப் போற்றுகின்ற, ஒளியாள் பயந்தாள் - செந்தீயை ஒப்பாள், ஆகிய ஒரு பெண் மகவை ஈன்றாள், (எ - று.) | |
| (பாடம்) 1 தேந்து. | | |
|
|