பக்கம் : 1079
 

     விசயன் இவ்வாறு வளர்ந்து கலைபயிலும்போது சுயம்பிரபை ஒரு பெண் மகவை
ஈன்றாள் என்க.

     ஏமச்செல்வம் - காத்தற் றொழிலாகிய அரசியற் செல்வம். ஓமச் செல்வம் - கொண்டு
இனிதேத்தலாவது, வேள்வி முதலியனசெய்து இக்குழவியின் நன்மையைப் போற்றுதல் என்க.

(614)
 
அப் பெண் மகவிற்குச் “சோதிமாலைÓ எனப்
பெயர் சூட்டல்
1745. பாரார் செல்கைப் பல்கிளை யெல்லா முடனீண்டிப்
பேரா வென்றிக் கொன்றிய வாறு பெயரிட்டுச்
சீரா 1ரோகை விஞ்சையர் சேணி செலவிட்டுக்
காரார் வண்ணன் காதலொ டின்பக் கடலாழ்ந்தான்.
 
     (இ - ள்.) பார் ஆர் செல்கை பல்கிளை எல்லாம் - பூமியிலே வாழா நின்ற
செல்லுதற்குரிமையுடைய பலவாகிய சுற்றம் எல்லாம், உடன் ஈண்டி - ஒருங்கே கூடாநிற்ப,
பேரா வென்றிக்கு ஒன்றியவாறு - மாறுபடாத தனது வெற்றிக்குப் பொருந்தியதாம்படி, பெயர்
இட்டு - அப்பெண் மகவிற்கும் பெயர் சூட்டி, சீர் ஆர் ஓகை - சிறப்புடைய
இம்மகிழ்ச்சிக்குரிய நற்செய்தியை, விஞ்சையர் சேணிசெலவிட்டு - விச்சாதரருலகாகிய
இரதநூபுரச் சக்கிரவாளத்திற்கும் கூற நெய்யொடு தூதுவரைப் போக்கி, கார் ஆர் வண்ணன்
- முகில்போன்ற நிறமுடையனாகிய திவிட்டநம்பி, காதலொடு இன்பக்கடலாழ்ந்தான் - மிக்க
அன்புடனே இன்பக் கடலில் முழுகினான்,
(எ - று.)

     சேணி - இரதநூபுரத்துச் சக்கிரவாளம். ஓகை - உவகை.

     அப்பெண்மகவு பிறந்தவுடன் சுற்றத்தார் சூழ அம்மகவிற்குப் பெயரிட்டு
அச்செய்தியைத் தக்கிண சேடிக்கும் சொல்லத் தூதுவிட்டு நம்பி காதலாலே இன்பக் கடலுள்
ஆழ்ந்தான் என்க.

 (615)

 
 
1746. ஐயன் றானு மவ்வகை யாலே வளர் 2வெய்த
மையுண் கண்ணி மாபெருந் தேவி மகிழ் 3தூங்கத்
தெய்வம் பேணிப் பெற்றனர் பேணுந் திருவேபோல்
மெய்யின் சோதி சூழொளி மின்னின் 4பெயராளும்.
 

     (பாடம்) 1 ரோதை. 2 வெய்தி. 3தூங்கி. 4 பெயராளை.