பக்கம் : 1081 | | புலவர் கூற்று - இனிச் சோதிமாலை வரலாறு கூறுவல் எனத் தோற்றுவாய் செய்தல் | வேறு | 1748. | மழலைக் கனிவாய் மணிவண்டு வருடி மருங்கு பாராட்ட 1அழனக் கலர்ந்த வரவிந்த வமளி சேர்ந்த விளவன்னம் கழனிச் செந்நெற் கதிரென்னுங் கவரி வீசக் கண்படுக்கும் பழனக் குவளை நீர்நாடன் பாவை வார்த்தை பகருற்றேன். | (இ - ள்.) அழல் நக்கு அலர்ந்த அரவிந்த அமளி - தீயை ஒத்து விளங்கி மலர்ந்துள்ள செந்தாமரைப் பூம்படுக்கையிலே, சேர்ந்த இள அன்னம் - பொருந்திய இளையையுடைய அரச அன்னம், மழலைக்கனிவாய் மணிவண்டு - மழலைத்தன்மை பொருந்திய கனிவுமிக்க வாயினையுடைய மணிநிற வண்டுகள், வருடி மருங்கு பாராட்ட - தன் அடிகளை வருடித் தனது பக்கத்தே புகழ் பாடிப் பாராட்டாநிற்ப, கழனிச் செந்நெல் கதிர் என்னும் - வயலிலே விளைந்த செந்நெற்கதிராகிய, கவரி வீச - சாமரை இரட்ட, கண்படுக்கும் - இனிதே உறங்கும், பழனக்குவளை நீர்நாடன் - வயல்களையுடைய செங்கழுநீர் மலர்ந்த நீர் நீலைகளையுடைய சுரமை நாட்டரசனாகிய திவிட்டனின், பாவை - மகளாகிய சோதிமாலையின், வார்த்தை - செய்தியை, பகருற்றேன் - இனிக் கூறத்தொடங்குகின்றேன், (எ - று.) செந்தாமரை மலராகிய அணியிலே, மணிவண்டு புகழ்பாடிப் பாராட்ட, செந்நெற் கதிராகிய கவரியசைய, இளவன்னம் இனிதே கண்படைகொள்ளும் வளமுடைய, பழனக் குவளை நீர்நாடனாகிய திவிட்டநம்பியின் மகள், சோதிமாலையின் வரலாற்றை இனிச் சொல்வேன் என்று தேவர் கூறினார் என்க. | (618) | | | சோதிமாலை விளையாட்டாயம் அடைதல் | 1749. | செம்பொற் சிலம்புங் கிண்கிணியுஞ் 2செல்வச் செஞ்சீ றடிபோற்ற வம்பத் துகிலின் வடஞ்சூழ்ந்த வல்குன் மணிமே கலை 3மருட்ட அம்பொற் சுருளை யிருபாலு மளக வல்லி யருகிலங்கப் பைம்பொற் சுடிகை நிழறுளங்கப் படர்ந்தா 4டாயம் படிந்தாளே. | |
| (பாடம்) 1 அழனக் கமலந்தவ தறிவந். 2 செல்வஞ். 3 மருட்டி. 4 டரவம் படந்தாளே. | | |
|
|