பக்கம் : 1083
 

பந்தாடுதல்

1751. காவி நாணுங் கண்ணார்தங்
     கையி 1னேந்துங் கந்துகங்கள்
ஆவி தாமு முடையனபோ
     லடிக்குந் தோறு மடங்காது
பூவி னார்ந்த மணிநிலத்துப்
     பொங்கி யெழுந்து பொன்னேந்தி
நாவி நாறு மிளங்கொங்கைத்
     தடங்கள் சென்று 2நணுகியவே.
 
     (இ - ள்.) காவி நாணும் கண்ணார் - நீலோற்பலம் மலரும் நாணுதற்குரிய
அழகுடைய கண்களையுடைய மகளிர்கள், தம் கையின் ஏந்தும் - தங்கள் கைகளிலே
கொண்ட, கந்துகங்கள் - பந்துகள், தாமும் ஆவி உடையனபோல் - தாங்களும்
உயிருடையனபோன்று. அடிக்குந்தோறும் - அம்மாதர் தம்மைப் புடைக்குந்தோறும்,
அடங்காது - அடக்கமின்றி, பூவின் ஆர்ந்த மணிநிலத்து - மலர் சிந்திப்பரவிய அழகிய
நிலத்திலே மோதுண்டு, பொங்கி எழுந்து - உயர்ந்து எழுந்து, பொன் ஏந்தி நாவிநாறும்
இளம் கொங்கை - பொற்றேமல் படர்ந்து கத்தூரி மணக்கும் இளைய முலையாகிய,
தடங்கள் சென்று நணுகியவே - இடங்களைச் சென்று அடைந்தன, (எ - று.)

     கண்ணார் ஏந்தும் கந்துகங்கள் அவர் அடிக்குந் தோறும் உயிருடை யனபோல்
அடங்காதனவாய்ப் பொங்கி எழுந்து அவர்தம் கொங்கைத்தடத்தை அணுகின என்க.
கொங்கைகளைத் தம்மினமென அணுகின என்க.

(621)

 

இதுவுமது

1752. கரிய குழலும் பொற்றோடுஞ்
     செய்ய வாயுங் 3கதிர் முறுவல்
மரிய திசையு மதிமயங்கு
     4மம்பொன் முகத்து மடவார்கள்
திரியத் தம்மைப் புடைத்தாலுஞ்
     சென்று சேர்ந்து திளைக்குமால்
அரிய செய்யுங் காமுகர்போ
     லளிய வந்தோ வடங்காவே.
 

     (பாடம்) 1 னேந்து. 2 நணுகுமே. 3 வெண்முகத்தின். 4 போதினினிய.