பக்கம் : 1084 | | (இ - ள்.) கரிய குழலும் - கரிய கூந்தலும், பொற்றோடும் - பொன்னாலியன்ற தோடுகளும், செய்ய வாயும் - சிவந்த வாயும், கதிர்முறுவல் - ஒளியுடைய புன்முறுவலும் உடைய, மதிமயங்கும் - திங்களைப்போன்ற, அம்பொன் முகத்து - அழகிய பொன்னிறமமைந்த முகத்தையுடைய, மடவார்கள் - அம்மகளிர்கள், மரிய - பொருந்திய, திசையும் திரிய - திசைகளிலே செல்ல, தம்மை புடைத்தாலும் - தம்மை அடித்தபோதும், சென்று சேர்ந்து திளைக்கும் - மீண்டும் சென்று எய்தி அம்மகளிரைப் பொருந்தா நிற்கும், அளிய - இரங்கத்தக்கன, அந்தோ - ஐயகோ, காமுகர் போல் அரிய செய்யும் - காமுகர்களைப்போன்று செய்தற்கரிய செயல்களைச் செய்யும், அடங்கா - அடக்கம் இல்லனவாய், (எ - று.) மடவார்கள் திசையிலே செல்லும்படி அப்பந்துகளைப் புடைக்கும் பொழுதும் அவைகள் காமுகர் போன்று அம்மகளிரைச் சென்று தழுவா நிற்கும், தம்மை அகலப் புடைக்கும் மகளிரை விரும்பும் அவை அளியவே என்றார் என்க. | (622) | இதுவுமது | 1753. | செம்பொற் சுருளை மெல்விரலாற் றிருத்திச் செறிந்த தேரல்குல் வம்பத் துகிலின் வடஞ்சூழ்ந்து மணிமே கலையுந் 1தானேற்றி அம்பொற் குரும்பை மென்முலைமே லணிந்த 2பொன்ஞா ணருகொடுக்கிப் பைம்பொற் றிலத நுதலொதுக்கிப் பாவை பந்து கைக்கொண்டாள். | (இ - ள்.) செம்பொன் சுருளை - செவ்விய பொன்னாலாய சுருளை என்னும் காதணியை, மெல் விரலால் திருத்தி - நழுவாதபடி தனது மெல்லிய விரலாலே நன்கு திருத்திக்கொண்டு, தேர் அல்குல் - தேர்த்தட்டை ஒத்த அல்குலிடத்தே, செறிந்த - பொருந்திய, வம்பத்துகிலின் - புதிய ஆடையின் மிசை வடம் சூழ்ந்து - மணிவடத்தை நன்கு விசித்து, மணிமேகலையும்தான் - மணிமேகலையையும், ஏற்றி - ஏறச்செறித்து, அம்பொன் குரும்பை மென்முலைமேல் - அழகிய பொற்றேமல் படர்ந்த தெங்கிளங் குரும்பை போன்ற மெல்லிய முலைகளின் மிசை, பொன்ஞாண் அருகு ஒடுக்கி - விசித்த பொற்சரட்டின் பக்கங்களை ஒடுக்கி, பைம்பொன் திலக நுதல் ஒதுக்கி - பசிய பொற்றிலதமிடப்பட்ட நெற்றியிலே சரிந்த கூந்தலை ஒதுக்கிக் கொண்டு, பாவை - கொல்லிப்பாவை போன்ற சோதிமாலை, பந்து கைக்கொண்டாள் - ஆடுதற்குப் பந்தினைத் தன் கையிலே ஏந்தா நின்றாள், (எ - று.) | |
| (பாடம்) 1 தானெற்றி. 2 மென்ஞா. | | |
|
|