பக்கம் : 1085
 

      சோதிமாலை ஆடத் தொடங்குபவள், சுருளைத் திருத்தி வடஞ்சூழ்ந்து மேகலை
ஏற்றி ஞாண் ஒடுக்கி நுதலொதுக்கிப் பந்தினைக் கைக்கொண்டாள் என்க. வம்பத்துகில் - புதுமைமிக்க ஆடை.

(623)

 

சோதிமாலை பந்தாடுதல்

வேறு

1754. கந்தாடு மாலியானைக் கார்வண்ணன் பாவை
     1கருமேகக் குழன்மடவார் கைசோர்ந்து நிற்பக்
கொந்தாடும் பூங்குழலுங் கோதைகளு 2மாடக்
     3கொய்பொலந் துகிலசைத்த கொய்சகந்தாழ்ந் தாட
வந்தாடுந் தேனுமுதல் வரிவண்டு மாட
     மணிவடமும் பொன்ஞாணும் 4வார்முலைமே லாடப்
பந்தாடு மாடேதன் படைநெடுங்க ணாடப்
     பணைமென்றோ ணின்றாடப் பந்தாடு கின்றாள்.
 
     (இ - ள்.) கந்து ஆடு மால் யானை - கட்டுந்தறியிடத்தே ஆடி நிற்கும் இயல்புடைய
பெரிய அரசுவாவினையுடைய, கார் வண்ணன் - கரிய வண்ணமுடைய திவிட்டநம்பியின்,
பாவை - மகளாகிய சோதிமாலை, கருமேகக்குழல் மடவார் - கரிய முகில் போன்ற
கூந்தலையுடைய ஆயமகளிர்கள், கைசோர்ந்து - ஆடி இளைப்புற்று, நிற்ப - நின்றனராக,

      கொந்து ஆடும் பூங்குழலும் - கொத்திடத்தே ஆடுகின்ற மலர்வேய்ந்த தனது
கூந்தலும், கோதைகளும் - மலர் மாலைகளும், ஆட - ஆடாநிற்பவும், கொய்பொலம் துகில்
அசைத்த கொய்சகம் - கொய்து உடுக்கின்ற பொன்னாடையிலே கொய்துகட்டிய கொய்சகம்
என்னும் உறுப்பு, தாழ்ந்து ஆட - தூங்கி ஆடா நிற்பவும், வந்து ஆடும் தேனும் முரல் வரி
வண்டும் ஆட - பறந்து வந்து ஆடுகின்ற தேனும் பாடுகின்ற வரியுடைய வண்டுகளும்
ஆடாநிற்பவும்,

     மணிவடமும் - மணிவடமாகிய அணிகலன்களும், பொன் ஞாணும் - பொற்சரடும்,
வார் முலைமேல் ஆட - கச்சணிந்த முலைகளின் மிசை ஆடா நிற்பவும், பந்து ஆடும்
மாடே - பந்துகள் இயங்கும் வழியிலே, தன்படை நெடுங்கண் ஆட - தன் கொல்படை
போன்ற விழிகள் ஆடா நிற்பவும், பணைமென்தோள் - பருத்த மெல்லிய தன் தோள்கள்,
நின்று ஆட - பந்தாடும் நெறியிலே நின்று ஆடா நிற்பவும், பந்து ஆடுகின்றாள் -
பந்தாடாநின்றாள், (எ - று.)
 


     (பாடம்) 1 கருமென். 2 மாகக். 3 கொய்பூந். 4 மென். சூ.-69