பக்கம் : 1086 | | பாவை, சோர்ந்துநிற்ப, ஆட, ஆட, ஆட, ஆட, ஆடுகின்றாள் என்க. | (624) | | 1755. | கந்துகங்கள் கைத்தலத்தா லேறுண்டு பொங்கிக் 1கருங்கண்ணுந் தாமுமுறக் கலந்தெழுந்த போழ்தின் வந்தனவுஞ் சென்றனவும் வானத்தின் மேலு மணிநிலத்து மீதுநெறி 2மறிகுவன வாகி 3அந்துகிலி னிடைத்தோயு மகலல்கு றீண்டு மணிமருங்கு சூழுமணி யார்வடமுந் தாக்கும் கொந்தவிழும் பூங்குழலுங் கோதைகளு மூழ்குங் குவளைவாட் 4கண்ணிவருங் குறிப்பறிய மாட்டாள். | (இ - ள்.) கந்துகங்கள் கைத்தலத்தால் ஏறுண்டு பொங்கி - பந்துகள் சோதிமாலையின் கைகளால் புடைக்கப்பட்டு உயர்ந்து, கருங்கண்ணும் தாமும் உறக்கலந்து - சோதி மாலையின் கண்ணொளியும் தம்மொளியும் நன்கு பொருந்துமாறு கலப்புற்று, எழுந்த போழ்தின் - விசும்பிடை எழுந்தபொழுது, வந்தனவும் சென்றனவும் - மீண்டு வீழ்வனவும் உயர்ந்து செல்வனவும், வானத்தின் மேலும் மணி நிலத்தின்மீதும் - விசும்பினிடத்தும் அழகிய தரையின் மேலும், நெறி மறிகுவனவாகி - வழியே மீள்வனவாகி, அந்துகிலினிடைத் தோயும் - அவளுடைய அழகிய ஆடைமீது படுவன சில, அகல் அல்குல் தீண்டும் - அகன்ற அல்குலிடத்தைச் சில தொடும், அணிமருங்கு சூழும் மணியார்வடமும் தாக்கும் - அழகிய இடையைச் சுற்றிய மேகலை மணிவடத்தையும் புடைக்கும் சில, கொந்து அவிழும் பூங்குழலும் கோதைகளும் மூழ்கும் - கொத்தாய் மலருகின்ற மலர் சூட்டப்பெற்ற அளகக் கற்றையினூடும் மலர்மாலைகளினூடும் புகுந்து மறையும் சில, குவளை வாள் கண்ணி - நீலோற்பல மலரையம் வாளையும் போன்ற கண்களையுடைய சோதிமாலை, வரும் குறிப்பு அறிய மாட்டாள் - அப்பந்துகள் மீண்டுவருவதொரு குறிப்பினை உணரவியலாதவளாயினள், (எ - று.) பந்துகளின் மேல் தன் கண்ணொளி பாய்ந்து அவை கரியனவாதலின் அவை வருங் குறிப்பு அறிய வொண்ணாவாயின என்க. | (625) | |
| (பாடம்) 1கருங்கண்ணும். 2 மறிவனவு மாகி. 3 அந்துகிலுந் தோயு 4 கண்கள். | | |
|
|