பக்கம் : 1088 | | | 1757. | நீராலிக் 1கட்டிநனி நிரந்தெழுந்து பொங்கி நிழறயங்கும் பொன்னறைமே னின்றாடு கின்ற காராலி மஞ்ஞைகளி சிறந்தாற் போலக் கருங்குழலி பந்தாடல் காதலித்த போழ்தில் சீராலி மால்வண்ணன் றேவியுந் தானும் செவ்வரத்த நுண் 2ணெழினி சேர்ந்தொருங்கு நோக்கி வாராலி மென்கொங்கை மையரிக்கண் மாதர் வருந்தினா ணங்கையினி வருகவீங் கென்றார். | (இ - ள்.) நீர் ஆலிக்கட்டி நனி நிரந்து எழுந்து பொங்கி - மழைநீராற் றிரண்ட ஆலங்கட்டிகள் மிகவும் பரவி எழுந்து பொங்குதலையுடையதும், நிழல் தயங்கும் பொன் அறைமேல் ஒளிதிகழ்வதும் ஆகிய பொன்மலையின் உச்சியினின்று, ஆடுகின்ற கார் ஆலி மஞ்ஞை - ஆடுதலையுடைய, முகிலைக் கண்டு கூத்தாடுமியல்புடைய மயில், களிசிறந்தாற்போல - மகிழ்ச்சிமிக்கது போன்று, கருங்குழலி - கரிய கூந்தலையுடைய சோதிமாலை, பந்து ஆடல் காதலித்தபோதில் - பந்தாடுதலை விழைந்தபொழுது, சீர் ஆலி மால்வண்ணன் - சிறந்த மழைபோலும் கரிய வண்ணனாகிய திவிட்டன், தேவியும் தானுமாய் - தன் தேவியாகிய சுயம்பிரபையும் தானுமாக, செவ்வரத்த நுண் எழினி சேர்ந்து - செவ்விய குருதிவண்ணத்தையுடைய நுணுகிய தொழிற் றிறனமைந்த திரையின் மறைவிற் சென்று, ஒருங்கு நோக்கி - இருவரும் ஒன்றாகப் பார்த்து, வார்மென் கொங்கை மையரிக் கண் மாதர் - கச்சணிந்த மெல்லிய கொங்கைகளையும் மைதீட்டப் பெற்றுச் செவ்வரிபடர்ந்த கண்களையும் அழகையும் உடைய, நங்கை ஆலி வருந்தினாள் - சோதிமாலை பந்தாடி வருத்தமுற்றாள், இனி வருக ஈங்கு என்றார் - அவ் வாடுதல் ஒழிந்து எம்பால் வருவாளாக என்று பணிமகளிரிடம் இயம்பினார்கள், (எ - று.) பொன்மலை மேலே மயில் ஆடினாற்போலே சோதிமாலை ஆடும் போது, நம்பியும் நங்கையும் சென்று திரைமறைவில் நின்று பார்த்து நங்கை வருந்தினாள் ஆடலொழிந்து வருவாளாக என்றார் என்க. | (627) | | சோதிமாலை நம்பியின்பால் எய்துதல் | வேறு | 1758. | அருமணி முடியவ னருளி தென்றலும் பருமணிப் பந்துகை விட்டுப் பாவைதன் | |
| (பாடம்) 1 கட்டிநிரந் தெழுந்து. 2 நுண்ணெழில். | | |
|
|